Tamilnadu

News March 19, 2025

நீலகிரி மாவட்டத்தில் ரேஷன் கார்டுகளுக்கு அறிவிப்பு

image

நீலகிரி மாவட்டத்தில் அனைத்து வட்டங்களிலும் பொது விநியோகத் திட்டத்தின்கீழ் குடும்ப அட்டையில் உள்ள அனைத்து குடும்ப உறுப்பினர்களும் பிஓஎஸ் இயந்திரத்தில் தங்களது கைரேகையை இம்மாதம் 31ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஏ.ஏ.ஒய்., பி.எச்.எச். கார்டுதாரர்கள் ரேஷன் கடையின் வேலை நாட்களில் தங்களது கைரேகை பதிவை பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 19, 2025

குமரி மாவட்டத்தில் கள்ளக் கடல் எச்சரிக்கை!

image

குமரி மாவட்டத்தில் ஆரோக்கியபுரம் முதல் நீடோடி வரையிலான கடலோரப் பகுதிகளில் 12 முதல் 15 வினாடிகளுக்கு ஒருமுறை அலைகள் கரைப்பகுதிக்கு வர வாய்ப்பு உள்ளது. இன்று(மார்ச் 19) மாலை 3.30 மணி வரை இந்த நிலை நீடிக்கும் என்றும் கடல் சார் ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியுள்ளது. ஆகவே கடற்கரையோர பகுதிகளில் வசிப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. SHARE IT.

News March 19, 2025

திருச்சி: பெண்களுக்கான இலவச தையல் பயிற்சி

image

திருச்சி IOB, ஊரக சுய வேலை வாய்ப்பு நிறுவனம் இணைந்து பெண்களுக்கான 30 நாள் இலவச தையல் பயிற்சியை ஏற்பாடு செய்துள்ளது. 18 முதல் 45 வயது வரை உள்ள 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும் இதற்கு விண்ணப்பிக்க வரும் 24ம் தேதியே கடைசி நாள் என்றும், இது குறித்து மேலும் அறிந்துகொள்ள 8903363396 என்ற எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. இதை மற்றவருக்கும் SHARE பண்ணுங்க.

News March 19, 2025

கிராம சபைக் கூட்டம் தேதி மாற்றம்

image

காஞ்சிபுரத்தில் உள்ள, 274 ஊராட்சிகளில், 23ம் தேதி, காலை 11 மணி அளவில் உலக தண்ணீர் தினத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்துவதற்கு, மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது. இந்நிலையில் நேற்று காலை, அந்தந்த மாவட்ட கலெக்டர்களுக்கு, மார்ச் -23ம் தேதி நடக்கவிருந்த சிறப்பு கிராம சபை கூட்டம், மார்ச்- 29ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது என, ஊரக வளர்ச்சி துறை ஆணையர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளனர்.

News March 19, 2025

குமரி மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

#இன்று(மார்ச் 19) காலை 8.30 மணிக்கு பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு மீண்டும் பணி வழங்ககேட்டு 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் திருவட்டார் சந்திப்பில் தெருமுனை பிரச்சார இயக்கம்.#காலை 9 மணிக்கு முகிலன் கரை அரசு தொடக்கப் பள்ளியில் ஆட்சியர் வழக்கு மீனா தலைமையில் சிறப்பு மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது.#இட்டகவேலி நீலகேசி அம்மன் கோவில் 4ஆம் நாள் திருவிழா இன்று நடைபெறுகிறது.

News March 19, 2025

போலி நிறுவனங்கள் நுகர்வோர் எச்சரிக்கை – ஆட்சியர்

image

பாளை தூய யோவான் கல்லூரியில் மண்டல அளவிலான தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தினம் மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தின விழா நேற்று நடைபெற்றது. இதில் நெல்லை மாவட்ட ஆட்சியர் சுகுமார் இணையதளத்தில் பொருள்களின் தகவல்களை தெரிந்து கொண்டு பொருட்கள் வாங்க வேண்டும். நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி குறைந்த பொருட்களை பல்வேறு போலி நிறுவனங்கள் விற்பனை செய்கின்றன . எனவே எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என தெரிவித்தார்.

News March 19, 2025

சேலம் மார்ச் 19 இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

சேலம் மார்ச்19 இன்றைய முக்கிய நிகழ்வுகள்▶️ காலை 11 மணி ஏற்காடு ஊராட்சியில் மக்களை தேடி சட்டத்தின் கீழ் (மாவட்ட ஆட்சியர் மனு முகாம்) ▶️காலை 11 மணி மும்மொழி கொள்கை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம் (கோட்டை மைதானம்) ▶️மாலை 4 மணி பணி நிரந்தரம் கோரி அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் (மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம்) ▶️மாலை 6 மணி அரசு தற்காலிக பணியாளர்கள் கோட்டை மைதானத்தில் ஆர்ப்பாட்டம்.

News March 19, 2025

வேண்டிய வரம் அருளும் நாமக்கல் ஆஞ்சநேயர்

image

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற அனுமன் கோயில்களில் முதன்மையானது நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில். இங்குள்ள ஆஞ்சநேயர், எதிரில் உள்ள நரசிம்மரை திறந்த விழிகளுடன் கைகூப்பி வணங்கிய நிலையில் காட்சி தருகிறார். இங்கு வழிபட்டால், வாழ்வில் மறுமலர்ச்சி உண்டாகும். கடுமையான வியாதிகள் குணமாகும், எதிரிகளின் தொல்லை நீங்கி வெற்றி கிடைக்கும் என்பது நம்பிக்கை. இதை மற்ற பக்தர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.

News March 19, 2025

ஆங்கிலத்தால்தான் உயர் பொறுப்பில் சுந்தர் பிச்சை: மனோ தங்கராஜ்

image

இந்தி கற்றதாகக் கூறப்படும் சுந்தர் பிச்சை இன்று இந்திக்காரர்களுடன் வேலை பார்க்கவில்லை, மாறாக ஆங்கிலேயர்களுடன் மிக உயர்ந்த பொறுப்பில் பணியாற்றுகிறார். அது இந்தி கற்றதால் அல்ல, ஆங்கிலம் கற்றுக்கொண்டதால். ஒரு வேளை அன்று பள்ளியில் ஆங்கிலம் கற்றுக் கொள்ளாமல் இருந்திருந்தால், இன்று Google Alphabet நிறுவனத்தில் அவர் வகிக்கும் பதவியில் வேறொருவர் அமர்ந்திருப்பார் என்று மனோ தங்கராஜ் எம்எல்ஏ கூறியுள்ளார்.

News March 19, 2025

புழல் ஜெயில் கைதி திடீர் மரணம்

image

செங்கல்பட்டு போந்தூர் பகுதியை சேர்ந்த ராஜமாணிகம், பாலியல் தொல்லை வழக்கில் கைது செய்யப்பட்டு 10 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றர். 2022ஆம் ஆண்டில் புழல் சிறையில் அடைக்கப்பட்டு, பல்வேறு உடல் நலக்குறைவுகளால் பாதிக்கப்பட்ட அவர் கடந்த 9-ந் தேதி ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து புழல் போலீசார்  விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!