India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 2025-2026 ஆம் ஆண்டு அக்னி வீர் திட்டத்தின் கீழ் 10, 12 ஆம் வகுப்பு படித்த இளைஞர்களுக்கு பொதுப்பணி, டெக்னிக்கல், கிளார்க், டிரேட்ஸ்மென் பிரிவுகளில் ஆட்சேர்ப்பு நடைபெறவுள்ளது. இதில் சேர விருப்பமுள்ள இளைஞர்கள் www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் ஏப்.10 வரை பதிவு செய்யலாம் என திருச்சி ராணுவ ஆட்சேர்ப்பு இயக்குநரகம் தெரிவித்துள்ளது. SHARE IT
திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக மன்னார்குடி கோட்டூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாகுபடி பணியில் விவசாயிகள் ஈடுபட்டிருந்தனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் எள் பயிர்கள் பெரிது பாதிக்கப்பட்டு இருக்கிறது. எனவே, பயிர் காப்பீடு செய்வதற்கான தேதியை மாவட்ட ஆட்சியர் நீட்டித்து தர வேண்டும் என காவிரி டெல்டா பாசன விவசாய சங்க தலைவர் தர்மசுவாமிநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்டம் வாலிகண்டபுரம் கோனேரி ஆற்றங்கரையில் உள்ள வாலீஸ்வரர் கோயில் சோழர் ஆட்சி காலத்தில் ஏறத்தாழ 1000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு குடமுழுக்கு விழா நடத்தப்பட்டுள்ளதாக தல வரலாறு தெரிவிக்கிறது. வாலி வழிபட்டதால் இது வாலீஸ்வரர், வாலாம்பிகை ஸ்தலமாக திகழ்ந்துள்ளது. பிரதோஷ காலங்களில் இங்கு சென்று வழிபட்டால் சங்கடங்கள் விலகி மனவலிமை பெறலாம் என்பது ஐதீகம் சிவ பக்தர்களுக்கு இதனை SHARE பண்ணுங்க
பிரம்மனுக்கு ஏற்பட்ட கர்வத்தினால் சிவபெருமான் அவர் தலையை கொய்தார். அதனால் சிவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. அந்த தோஷத்தை நீக்கிய ஸ்தலம் தான் திருவையாறு அருகே உள்ள கண்டியூர் ஹரசாப விமோசன பெருமாள் கோயில். இத்தலத்தில் சிவனின் தோஷத்தை நீக்கியதால் இங்குள்ள பெருமாளுக்கு ஹரசாப விமோசன பெருமாள் என அழைக்கப்படுகிறார். இது சுமார் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயிலாக கருதப்படுகிறது. அறிய SHARE செய்யவும்
நெல்லை மாவட்டம் வள்ளியூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் சுந்தர பரிபூரண பெருமாள் திருக்கோவில் பழுது பார்த்தல், சீரமைத்தல் பணிக்கு ஏப்.15 அன்று ஏலம் அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது. மார்ச்.27 முதல் மர்ச்.14 வரை https://tntenders.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கோவில் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது .
வேதாரண்யம் வட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர் கூட்டம் வருகின்ற 21ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு கோட்டாட்சியர் திருமால் தலைமையில் நடக்கிறது. இதில் வேதாரண்யம் கோட்டத்தில் உள்ள விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்று தங்கள் குறைகளை தெரிவித்து உரிய தீர்வு காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் சஷ்டி விழாவிற்கும், சூர சம்ஹாரத்திற்கும் புகழ்மிக்க கோயில் தான் இந்த சாரம் சுப்பிரமணியர் கோயில். இக்கோயில் சிறப்பே பழங்காலத்து பூங்குளமும், பூந்தோட்டமும் தான். இங்கு முருகன் தன்னை நாடி வருபவர்களின் குறையை தீர்ப்பார். மேலும் சஷ்டி விரதம் இருந்து வழிபடுவோருக்கு திருமணத் தடை, மகப்பேறு போன்ற குறைகள் தீரும் என இங்கு வரும் பக்தர்களே உறுதி செய்கின்றனர். முருக பக்தர்களுக்கு SHARE செய்யவும்
சாத்தான்குளம் அருகே உள்ள அரசூர் பஞ்சாயத்து, பெரியதாழை, உவரி உள்ளிட்ட பகுதிகளில் புதிய படத்தின் சினிமா படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்புக்காக அந்த பகுதிக்கு பிரபல குணசித்திர நடிகை தீபா வந்திருந்தார். அப்போது அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த பொதுமக்கள் மற்றும் அவரது ரசிகர்கள் தீபாவுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். தீபா தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மணல்மேடு, களத்தூர் அண்ணாநகரை சேர்ந்தவர் சதீஷ் (45) விமல்பாபு என்பவருடன் கடலங்குடியிலிருந்து மணல்மேடு நோக்கி நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். சாலை ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அறுவடை இயந்திரத்தின் மீது எதிர்பாராதவிதமாக வாகனம் மோதியதில் சதீஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விமல் பாபு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் போலீசார் விசாரிக்கின்றனர்.
வேலூர் என்ற பெயர், வேல மரங்களால் சூழப்பட்ட நிலம் என்பதால் வந்திருக்கலாம் எனவும் மழை இல்லாத கோடையில் வேலால் (கடப்பாறையால்) தோண்டிய கிணற்றிலிருந்து இவ்வூர் மக்கள் தண்ணீர் பெற்றதால் இந்த பெயர் வந்து இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. சிலர் வேலூர் என்ற பெயர் வேலுக்கு உரிய முருகன் தோன்றிய ஊர் என்பதாலும் வந்திருக்கலாம் என்கின்றனர். நீங்கள் தெரிந்து கொண்டது போல மற்றவர்களும் தெரிந்து கொள்ள ஷேர் செய்யுங்கள்.
Sorry, no posts matched your criteria.