India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாகைக்கு அருகில் மயிலாடுதுறை, கீழப்பெரும்பள்ளத்தில் நாகநாதசுவாமி கோயில் உள்ளது. நவகிரகங்களில் கேது பரிகார தலமாக விளங்குகிறது. நாளை ஏப்.26 மாலை 4:28 மணிக்கு கும்ப ராசிக்கு ராகுவும் சிம்ம ராசிக்கு கேதுவும் பெயர்ச்சி ஆவதை முன்னிட்டு கேது பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். இங்கு சென்று எமகண்ட நேரத்தில் கொள்ளு தானியத்தில் தீபம் ஏற்றி வழிபட்டால் சர்ப தோஷம் கேது தோஷம் நிவர்த்தியாம். SHARE IT.
கரூர் பசுபதிபாளையத்தில் ’சதுரங்க வேட்டை’ படத்தில் வருவது போல் இருடியம் தருவதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றியதாக சிவக்குமார் அளித்த புகாரின் பேரில் குமரேசன், பொன்னரசன், ஹரிஷ், தியாகராஜன், சுரேஷ், ராஜ்குமார் ஆகிய 6 பேரை கைது செய்து அவர்கள் பயன்படுத்திய இருடியம் எனக் கூறிய அண்டா சில்வர் பாத்திரம் கெமிக்கல்கள் கார் செல்போன்களை பறிமுதல் செய்து, இன்று(ஏப்.25) சிறையில் அடைத்தனர்.
பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் உள்ளூர் குழு உருவாக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் பணிபுரியும் பெண்கள் இதற்கென தனியாக அமைக்கப்பட்ட குழு உறுப்பினர்களை 8939992763, 6382711422, 988426931, 8667691638, 9150058095 எண்களில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். வேலைக்கு செல்லும் தோழிகளுக்கு ஷேர் பண்ணுங்க
திருவாரூர் மாவட்டம், பின்னவாசல் அருகே பிச்சைப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த 10-ஆம் வகுப்பு மாணவன் சத்தியசாய் பொதுத்தேர்வு எழுதிவிட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று தனது நண்பர்களுடன் அருகில் உள்ள குளம் ஒன்றில் குளிக்க சென்ற சத்தியசாய் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து மாணவனின் உடலை மீட்ட தீயணைப்பு துறையினர் திருவாரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் கீழப்பெரும்பள்ளத்தில் நாகநாதசுவாமி கோயில் உள்ளது. நவகிரகங்களில் கேது பரிகார தலமாக விளங்குகிறது. நாளை ஏப்.26 மாலை 4:28 மணிக்கு கும்ப ராசிக்கு ராகுவும் சிம்ம ராசிக்கு கேதுவும் பெயர்ச்சி ஆவதை முன்னிட்டு, கேது பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். இங்கு சென்று எமகண்ட நேரத்தில் கொள்ளு தானியத்தில் தீபம் ஏற்றி வழிபட்டால் சர்ப தோஷம் கேது தோஷம் நிவர்த்தி பெறலாம். SHARE IT.
திருநாகேஸ்வரத்தில் உள்ள நாகநாத சாமி கோயிலில் ராகு பகவான் தனி சன்னதி கொண்டு மங்கள ராகுவாக அருள்பாலிக்கிறார். இத்தலம் ராகு பகவானுக்குரிய தலமாகும். 18 மாதத்திற்கு ஒருமுறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயரும் ராகு பகவான் நாளை மாலை 4.20 மணிக்கு மீன ராசியிலிருந்து கும்ப ராசிக்கு இடம் பெயர்கிறார். இத்தலத்தில் வழிபட்டால் ராகு தோஷம் நிவர்த்தி அடையும். இதை உறவினர், நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்
11,12 வகுப்பு மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான செம்மொழி நாள் கட்டுரை, பேச்சுப்போட்டி மே 9,10 தேதியில் நடைபெறுகிறது,போட்டிகளில் கலந்துகொள்ளும் மாணவர்கள் விண்ணப்பப் படிவத்தை https://tamilvalarchithurai.in.gov.inபதிவிறக்கம் செய்து பள்ளி மாணவர்கள் தலைமையாசிரியரிடமும், கல்லூரி மாணவர்கள் முதல்வரிடமும் பரிந்துரைக்கடிதத்துடனும் 05.05.2025 நாளுக்குள் நேரில் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
நாமக்கல்: சட்டவிரோத போதை பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் குறித்து, தமிழ்நாடு அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள DRUG FREE TAMILNADU என்ற செல்போன் செயலியை பதிவிறக்கம் செய்து, உங்கள் சுய விபரங்களை வெளிப்படுத்தாமல், புகார் அளிக்கலாம். Referral ID பயன்படுத்தி புகாரின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை அறிந்து கொள்ளலாம் என நாமக்கல் மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது. SHARE பண்ணுங்க!
திண்டுக்கல் மாவட்டம் தவசிமடை மகாலிங்கேஸ்வரர் கோயிலில் உள்ள லிங்கம் அகத்தியர் வழிபட்டது என்கிறது புராணம். இங்கு நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை. மேலும், வாஸ்து குறைபாடு உள்ளவர்களும் இங்கு வந்து சிறப்பு பூஜை செய்தால் குறை தீரும் என்கிறார்கள் பக்தர்கள். இதை பிரச்னை உள்ள நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
தவெக பூத் கமிட்டி மாநாடு நாளை ஏப்.26, நாளை மறுநாள் ஏப்.27 ஆகிய தேதிகளில் கோவை, குரும்பபாளையம் தனியார் கல்லூரியில் நடைபெறவுள்ளது. இதில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்து கொள்வதற்காக, சென்னையில் இருந்து நாளை காலை 08:30 மணியளவில், கோவை விமானம் நிலையத்திற்கு வருகை தர உள்ளார். எனவே, அவரை வரவேற்பதற்காக, கோவை மாவட்ட தவெக கட்சி செயலாளர்கள் சார்பாக, நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.