India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
#இன்று(மார்ச் 19) காலை 8.30 மணிக்கு பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு மீண்டும் பணி வழங்ககேட்டு 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் திருவட்டார் சந்திப்பில் தெருமுனை பிரச்சார இயக்கம்.#காலை 9 மணிக்கு முகிலன் கரை அரசு தொடக்கப் பள்ளியில் ஆட்சியர் வழக்கு மீனா தலைமையில் சிறப்பு மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது.#இட்டகவேலி நீலகேசி அம்மன் கோவில் 4ஆம் நாள் திருவிழா இன்று நடைபெறுகிறது.
பாளை தூய யோவான் கல்லூரியில் மண்டல அளவிலான தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தினம் மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தின விழா நேற்று நடைபெற்றது. இதில் நெல்லை மாவட்ட ஆட்சியர் சுகுமார் இணையதளத்தில் பொருள்களின் தகவல்களை தெரிந்து கொண்டு பொருட்கள் வாங்க வேண்டும். நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி குறைந்த பொருட்களை பல்வேறு போலி நிறுவனங்கள் விற்பனை செய்கின்றன . எனவே எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என தெரிவித்தார்.
சேலம் மார்ச்19 இன்றைய முக்கிய நிகழ்வுகள்▶️ காலை 11 மணி ஏற்காடு ஊராட்சியில் மக்களை தேடி சட்டத்தின் கீழ் (மாவட்ட ஆட்சியர் மனு முகாம்) ▶️காலை 11 மணி மும்மொழி கொள்கை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம் (கோட்டை மைதானம்) ▶️மாலை 4 மணி பணி நிரந்தரம் கோரி அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் (மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம்) ▶️மாலை 6 மணி அரசு தற்காலிக பணியாளர்கள் கோட்டை மைதானத்தில் ஆர்ப்பாட்டம்.
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற அனுமன் கோயில்களில் முதன்மையானது நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில். இங்குள்ள ஆஞ்சநேயர், எதிரில் உள்ள நரசிம்மரை திறந்த விழிகளுடன் கைகூப்பி வணங்கிய நிலையில் காட்சி தருகிறார். இங்கு வழிபட்டால், வாழ்வில் மறுமலர்ச்சி உண்டாகும். கடுமையான வியாதிகள் குணமாகும், எதிரிகளின் தொல்லை நீங்கி வெற்றி கிடைக்கும் என்பது நம்பிக்கை. இதை மற்ற பக்தர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.
இந்தி கற்றதாகக் கூறப்படும் சுந்தர் பிச்சை இன்று இந்திக்காரர்களுடன் வேலை பார்க்கவில்லை, மாறாக ஆங்கிலேயர்களுடன் மிக உயர்ந்த பொறுப்பில் பணியாற்றுகிறார். அது இந்தி கற்றதால் அல்ல, ஆங்கிலம் கற்றுக்கொண்டதால். ஒரு வேளை அன்று பள்ளியில் ஆங்கிலம் கற்றுக் கொள்ளாமல் இருந்திருந்தால், இன்று Google Alphabet நிறுவனத்தில் அவர் வகிக்கும் பதவியில் வேறொருவர் அமர்ந்திருப்பார் என்று மனோ தங்கராஜ் எம்எல்ஏ கூறியுள்ளார்.
செங்கல்பட்டு போந்தூர் பகுதியை சேர்ந்த ராஜமாணிகம், பாலியல் தொல்லை வழக்கில் கைது செய்யப்பட்டு 10 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றர். 2022ஆம் ஆண்டில் புழல் சிறையில் அடைக்கப்பட்டு, பல்வேறு உடல் நலக்குறைவுகளால் பாதிக்கப்பட்ட அவர் கடந்த 9-ந் தேதி ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து புழல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஈரோட்டில் வரும் 22ஆம் தேதி வரை அங்கன்வாடி மையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களில், வைட்டமின் ‘ஏ’ திரவம் வழங்கும் முகாம் நடைபெற உள்ளது. இதில், மாவட்டம் முழுவதும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வைட்டமின் ‘ஏ’ திரவம் வழங்கப்பட உள்ளது. மேலும், குழந்தைகள் வைத்திருப்பவர்களுக்கு Share பண்ணுங்க.
தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறை சார்பில் சங்கமம் – நம்ம ஊரு திருவிழாவில் பங்கேற்க விரும்பும் கலைக்குழுக்களின் பதிவு நிகழ்ச்சி ராமநாதபுரம் அரசு மகளிர் கலைக்கல்லுாரியில் மார்ச் 22, 23 காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் ஒவ்வொரு கலைக்குழுவின் 5 நிமிட வீடியோ பதிவு செய்யப்பட்டு தேர்வுக் குழுவால் கலைக்குழுக்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.
ஆரணியை அடுத்த காமக்கூர் பாளையத்தை சேர்ந்த தாமோதரன் மகன் ஜெயராமன் (13), தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். இவர், நேற்று முன்தினம் அவர்களுடைய கோழிப்பண்ணையில் உள்ள மரத்தில் சேலை கட்டி விளையாடிக் கொண்டிருந்தார். அப்பொழுது திடீரென சேலை அவரது கழுத்தை இறுக்கியதில் சம்பவ இடத்திலேயே ஜெயராமன் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செஞ்சி அருகே வசிக்கும் 16 வயது சிறுமிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. அரசு மருத்துமனையில் சோதனை செய்ததில் சிறுமி 3 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து சிறுமியிடம் பெற்றோர் விசாரித்ததில், காட்டு சித்தாமூர் கிராமத்தைச் சேர்ந்த வினித்குமார் (23, பாலியல் வன்கொடுமை செய்தது தெரிவந்தது. புகாரின்பேரில் செஞ்சி அனைத்து மகளிர் காவல்துறையினர், வினித்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
Sorry, no posts matched your criteria.