India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பனப்பாக்கம் அடுத்த தென்மாம்பாக்கத்தை சேர்ந்தவர் குமார் (44 ) இவர் சலூன் கடை வைத்துள்ளார். அதே பகுதியை சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவி நேற்று தேர்வு எழுத சென்றபோது பின் தொடர்ந்து சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து அம்மாணவியின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் நெமிலி போலீசார் வழக்கு பதிவு செய்து குமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் நடத்தும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் மார்.21ம் அன்று காலை 10 மணி முதல் 1 மணி வரை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளது. இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் இளைஞர்கள் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்தார்.
சென்னையில் தமிழ்நாடு அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் இன்று (மார்.19) ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ள நிலையில் எச்சரிக்கை.பணிக்கு வராமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது எனவும் மருத்துவ விடுப்பைத் தவிர சாதாரண விடுப்போ மற்ற விடுப்போ அரசு ஊழியர்கள் எடுக்கக் கூடாது எனவும் காலை 10.15 மணிக்குள் பணிக்கு வராதவர்களின் விவரங்களை சேகரிக்கவும் தமிழக அரசு உத்தரவு
நாகப்பட்டினம் மாவட்டம் தொழுதூர் கிராமத்தை சேர்ந்த இந்திராவின் கணவர் ஜோதிபாஸ் கொத்தங்குடி கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வரும் தரண்யாவிடம், தனது மனைவி பெயரில் உள்ள வங்கி கணக்கு பி.டி.ஓ.-வால் முடக்கப்பட்டது குறித்து தகராறு ஈடுபட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர் தரண்யா வலிவலம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் ஜோதிபாஸ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.
கடற்படையில் உள்ள குரூப் C பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில் லஸ்கர்களின் சிராங் , லஸ்கார்- I, தீயணைப்பாளர், டோப்பஸ்பதவிக்கு உள்ளிட்ட பதவிகளில் உள்ள 327 காலியிடங்களும் நிரப்பபடவுள்ளது. மாத ஊதியம்: லஸ்கர்களின் சிராங் பதவிக்கு மாதம் ரூ.25,500 முதல் 81,100 வரை கிடைக்கும். இதற்கு <

மதுரையின் முக்கிய திருவிழாவான ” சித்திரை திருவிழா ” குறித்து மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகம் நேற்று ( செவ்வாய்க்கிழமை) அறிவித்துள்ளது. அதன்படி, மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா ஏப்ரல் 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.விழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் மே 8ஆம் தேதி நடைபெறுகிறது. மே 9ஆம் தேதி தேரோட்டம்.
கோவை அருகே சரவணம்பட்டியை சேர்ந்த சுப்புலட்சுமி (40) ஸ்கூட்டரில் சென்றபோது, பல்லடம் அருகே ஒரு கார் மோதியது. இதில், அவர் காரின் முன்பகுதியில் சிக்கி, அரை கிலோமீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார். அருகில் பைக்கில் வந்த கிருஷ்ணகுமார் (34) லேசான காயமடைந்தார். பொதுமக்கள் காரை பிடித்து நேற்று போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் காரை ஓட்டிய சதீஷ்குமாரை (40) விசாரித்து வருகின்றனர்.
சென்னையில் உள்ள நாய் வளர்பவர்களுக்கான கவனத்திற்கு! வளர்ப்பு நாய்களை பொது இடங்களில் அழைத்து வரும் போது வாய்மூடி அணிவிக்காவிட்டால் 1,000 ரூபாய்க்கு மேல் அபராதம் விதிக்க மாநகராட்சி முடிவு.சென்னையில் வளர்ப்பு மற்றும் தெரு நாய்களால் பொதுமக்கள் பாதிக்கப்படும் சம்பவங்கள் தொடர்கதையாகி வரும் நிலையில் வளர்ப்பு நாய் வைத்திருப்பவர்களுக்கான விதிமுறைகளை மாநகராட்சி கடுமையாக்க உள்ளது.
Sorry, no posts matched your criteria.