Tamilnadu

News April 25, 2025

செல்வம் செழிக்க வைக்கும் பூமாத்தம்மன்

image

காஞ்சிபுரம் மாவட்டம் வடபாதியில் பூமாத்தம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு அருள்பாளித்து வரும் பூமாத்தம்மனை மனமுருகி பிரார்த்தனை செய்தால் பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையை அடையலாம் என நம்பப்படுகிறது. மேலும், பூமாத்தம்மனுக்கு குங்கும அர்ச்சனை செய்தால் திருமணம் ஆகாதவர்களுக்கு சுமங்கலி பாக்கியம் கிடைக்கும் என சொல்லப்படுகிறது.
பொருளாதார சிக்கலில் தவிக்கும் உங்கள் நண்பர்களுக்கு இதனை ஷேர் செய்யவும்

News April 25, 2025

ALERT: ரசாயன முறையில் பழுக்கவைக்கப்படும் மாம்பழம் 

image

திருவண்ணாமலை மாநகராட்சியில் இன்று(ஏப்.25) இரண்டு மாம்பழ கடைகளில் ரசாயனங்களை கொண்டு தவறான முறையில் பழுக்க வைக்கப்பட்ட சுமார் ரூ.1 லட்சம் மதிப்பிலான 1.5 டன் மாம்பழம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், அதனை பாதுகாப்பான முறையில் அகற்ற மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் ராமக்கிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார். மாம்பழம் சீசன் தொடங்கியுள்ள நிலையில் தரமானதை வாங்குங்கள். ஷேர் பண்ணுங்க.

News April 25, 2025

நீலகிரியில் ரூ.15,000 சம்பளத்தில் வேலை!

image

நீலகிரியில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் 30 பணியிடங்களை நிரப்படவுள்ளது என தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகி உள்ளது . இதற்கு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.15,000 வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க இங்கே <>கிளிக் <<>>செய்யவும். இதை வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்யவும்!

News April 25, 2025

தென்காசி :மின் தடை தொடர்பான புகார் எண்  

image

தென்காசி மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது. மழை நேரங்களில் மின்கம்பங்கள், மின்சாதனங்கள் அல்லது மின்சாரம் சம்பந்தமாக தேவைப்படும் அனைத்து சேவைகளுக்கும் தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் செயலி (TNPDCL OFFICIAL APP)மூலமாகவும், மின்தடை நீக்கும் மையம் தொலைபேசி எண்கள் 9445859032, 9445859033, மற்றும் மின்னகம் மின் நுகர்வோர் சேவை மையம் தொலைபேசி எண் 9498794987 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். ஷேர் செய்யவும்.

News April 25, 2025

ஈரோடு: கல்யாண வரம் அருளும் நட்டாற்றீஸ்வரர்

image

ஈரோடு மாவட்டம் காங்கயம்பாளையம் அருகே பிரசித்தி பெற்ற அருள்மிகு நட்டாற்றீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இங்கு சக்திவாய்ந்த தெய்வமாக நட்டாற்றீஸ்வரர் வீற்றிருக்கிறார். அவரை தரிசித்தால் திருமண தடை அகலும், குடும்ப பிரச்சனை தீரும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது . திருமணம் ஆகாத உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

News April 25, 2025

ராகு கேது தோஷம் நீக்கும் நாகநாதசுவாமி கோயில்

image

நாகைக்கு அருகில் மயிலாடுதுறை, கீழப்பெரும்பள்ளத்தில் நாகநாதசுவாமி கோயில் உள்ளது. நவகிரகங்களில் கேது பரிகார தலமாக விளங்குகிறது. நாளை ஏப்.26 மாலை 4:28 மணிக்கு கும்ப ராசிக்கு ராகுவும் சிம்ம ராசிக்கு கேதுவும் பெயர்ச்சி ஆவதை முன்னிட்டு கேது பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். இங்கு சென்று எமகண்ட நேரத்தில் கொள்ளு தானியத்தில் தீபம் ஏற்றி வழிபட்டால் சர்ப தோஷம் கேது தோஷம் நிவர்த்தியாம். SHARE IT.

News April 25, 2025

கரூர்: இரிடியம் மோசடி செய்த 6 பேர் கைது !

image

கரூர் பசுபதிபாளையத்தில் ’சதுரங்க வேட்டை’ படத்தில் வருவது போல் இருடியம் தருவதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றியதாக சிவக்குமார் அளித்த புகாரின் பேரில் குமரேசன், பொன்னரசன், ஹரிஷ், தியாகராஜன், சுரேஷ், ராஜ்குமார் ஆகிய 6 பேரை கைது செய்து அவர்கள் பயன்படுத்திய இருடியம் எனக் கூறிய அண்டா சில்வர் பாத்திரம் கெமிக்கல்கள் கார் செல்போன்களை பறிமுதல் செய்து, இன்று(ஏப்.25) சிறையில் அடைத்தனர். 

News April 25, 2025

வேலைக்கு போகும் பெண்களுக்கு தனி குழு

image

பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் உள்ளூர் குழு உருவாக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் பணிபுரியும் பெண்கள் இதற்கென தனியாக அமைக்கப்பட்ட குழு உறுப்பினர்களை 8939992763, 6382711422, 988426931, 8667691638, 9150058095 எண்களில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். வேலைக்கு செல்லும் தோழிகளுக்கு ஷேர் பண்ணுங்க

News April 25, 2025

பின்னவாசல்: குளத்தில் மூழ்கி மாணவன் பலி

image

திருவாரூர் மாவட்டம், பின்னவாசல் அருகே பிச்சைப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த 10-ஆம் வகுப்பு மாணவன் சத்தியசாய் பொதுத்தேர்வு எழுதிவிட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று தனது நண்பர்களுடன் அருகில் உள்ள குளம் ஒன்றில் குளிக்க சென்ற சத்தியசாய் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து மாணவனின் உடலை மீட்ட தீயணைப்பு துறையினர் திருவாரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

News April 25, 2025

ராகு கேது தோஷம் நீக்கும் நாகநாதசுவாமி கோயில்

image

மயிலாடுதுறை மாவட்டம் கீழப்பெரும்பள்ளத்தில் நாகநாதசுவாமி கோயில் உள்ளது. நவகிரகங்களில் கேது பரிகார தலமாக விளங்குகிறது. நாளை ஏப்.26 மாலை 4:28 மணிக்கு கும்ப ராசிக்கு ராகுவும் சிம்ம ராசிக்கு கேதுவும் பெயர்ச்சி ஆவதை முன்னிட்டு, கேது பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். இங்கு சென்று எமகண்ட நேரத்தில் கொள்ளு தானியத்தில் தீபம் ஏற்றி வழிபட்டால் சர்ப தோஷம் கேது தோஷம் நிவர்த்தி பெறலாம். SHARE IT.

error: Content is protected !!