India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இண்டூர் அருகே, மாக்கன்கொட்டாய் பகுதியை சேர்ந்த நவீன், (14), ரித்திக்ரோஷன், (11), ஆகிய இருவரும் இன்று காலை இருசக்கர வாகனத்தில் ராஜாகொல்லஹள்ளி அருகே சென்றபோது, முன்னால் சென்ற டிப்பர் லாரி மீது மோதியதில், நவீன் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். பலத்த காயமடைந்த ரித்திக்ரோஷனை, தருமபுரி அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். விபத்து குறித்து, இண்டூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
திருவாரூர் மாவட்டத்தில் கோடை வெயில் தொடக்கத்திலேயே அதிகமாக இருக்கிறது. எனவே வெயிலில் இருந்து தற்காத்துக் கொள்ள தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும், எலுமிச்சை ஜூஸ், மோர் போன்ற ஜூஸ்கள் அருந்த வேண்டும், முதியோர்களின் உடல் நிலையை தினமும் இருமுறை சரிபார்த்துக் கொள்ள வேண்டும் உள்ளிட்ட அறிவுரைகளை மாவட்ட ஆட்சியர் மோகனசந்திரன் வழங்கியுள்ளார். உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு SHARE பண்ணுங்க..
ஆதி திராவிடர், பழங்குடியினர் மற்றும் பிற சமூக மாணவர்களுக்கு அகில இந்திய நுழைவுத் தேர்வு இலவச பயிற்சி வகுப்பை நடத்துகிறது. இதற்கு குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.4லட்சத்துக்குள் இருக்க வேண்டும். பயிற்சியில் சேர விருப்பம் உள்ள மாணவர்கள் <
புதுச்சேரி சட்டசபையில் பூஜ்ஜிய நேரத்திற்குப் பிறகு சபாநாயகர் செல்வம் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”சபைக்கு அதிகாரிகள் வரவேண்டும். குறிப்பாக துறை இயக்குநர்கள் பேரவை நடக்கும்போது இங்கு இருக்கவேண்டும். செயலர்கள், இயக்குநர்கள் பதில் தரவேண்டும். இந்த விஷயத்தில் அதிகாரிகளை முதல்வர் கருணையுடன் பல முறை மன்னித்து விடுகிறார். இனி தண்டனை தரப்படும். இதுவே இறுதி எச்சரிக்கையாகும்”.
மதுரை காமராஜ் பல்கலையில் பாலியல் ரீதியான புகார்கள் அதிகரித்துள்ளதாகவும் புகார் எழுந்தவுடன் அதைப் பேராசிரியர்கள் சிலர் பேசி முடிக்கிறேன் என்ற பெயரில் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடுவதாகச் சர்ச்சை எழுந்துள்ளது. தொலைநிலைக் கல்வியில் எம்.பி.ஏ படிக்கும் மாணவியை, பேராசிரியர் ஒருவர் ப்ராஜெக்ட் சமர்ப்பிக்க லாட்ஜில் ஆலோசிக்க அழைப்பு விடுத்த விவகாரம் உள்ளிட்டவை கட்டப்பஞ்சாயத்துடன் முடிந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மீனம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் விஷ்வா (20) என்பவர் 3ஆம் ஆண்டு படித்து வந்தார். தினமும் மின்சார ரெயிலில் பயணம் செய்து கல்லூரிக்கு சென்று வந்தார். நேற்று வழக்கம்போல் விஷ்வா மின்சார ரெயிலில் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தபோது, தாம்பரம் அருகே கூட்ட நெரிசல் காரணமாக எதிர்பாராத விதமாக ரெயிலில் இருந்து தவறி விழுந்துள்ளார். இதில் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே விஷ்வா உயிரிழந்தார்.
ஊட்டி மருத்துவ கல்லூரி மருத்துவமனை திறப்பு விழா, கலை கல்லூரி மைதானத்தில் நல திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி ஏப்ரல் முதல் வாரத்தில் நடைபெற உள்ளது. இதில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார். இதில் 20 ஆயிரம் பேர் பங்கேற்கிறார்கள். அதற்கான பந்தல் ஏற்பாடுகளை மாவட்ட பொறுப்பாளர் கே.எம்.ராஜூ அரசு அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.
வேலூர் சத்துவாச்சாரியை சேர்ந்தவர் மூர்த்தி (49).இவர் அதே பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் வேலூர் அனைத்து மகளிர் காவல்துறையில் நேற்று (மார்ச் 17) புகார் அளித்தனர்.அதன்பேரில் இன்ஸ்பெக்டர் லதா போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மூர்த்தியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மீனம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் விஷ்வா (20) என்பவர் 3ஆம் ஆண்டு படித்து வந்தார். தினமும் மின்சார ரெயிலில் பயணம் செய்து கல்லூரிக்கு சென்று வந்தார்.நேற்று வழக்கம்போல் விஷ்வா மின்சார ரெயிலில் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தபோது, தாம்பரம் அருகே கூட்ட நெரிசல் காரணமாக எதிர்பாராத விதமாக ரெயிலில் இருந்து தவறி விழுந்துள்ளார். இதில் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே விஷ்வா உயிரிழந்தார்.
சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட திட்டத்திற்காக மேலும் 32 ஓட்டுநர் இல்லா ரயில்களை அல்ஸ்டோம் தயாரிக்க வாய்ப்பு உள்ளது. ரூ.1,538 கோடி செலவில் 96 பெட்டிகள் கொண்ட ரயில்கள் உருவாக்க ஒப்பந்தம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ரயில்களில் அதிக பாதுகாப்பு வசதிகள், USB சார்ஜிங் பாயிண்ட், மேம்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் உள்ளிட்ட அம்சங்கள் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.