Tamilnadu

News March 18, 2025

கரூர்: இலவச TNPSC பயிற்சி வகுப்பு

image

கரூரில், ‘செந்தில் பாலாஜி அறக்கட்டளை’ நடத்தும் TNPSC குரூப் 4 கான இலவச பயிற்சி வகுப்புகள் வரும் மார்ச். 30ஆம் தேதி முதல் தொடர்கின்றது. இதில் கலந்து கொள்பவர்களுக்கு புதிய பாடத்திட்டத்தின் படி புத்தகங்கள் வழங்கப்படும். தினசரி மற்றும் வார வகுப்புகள் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 8148192175 என்ற எண்ணை அழைக்கவும். இதை உங்களுடைய நண்பர்களுக்கும் ஷேர் செய்யவும்.

News March 18, 2025

வீட்டின் பூட்டை உடைத்து பணம் மற்றும் நகை கொள்ளை

image

ஆற்காடு அருகே உள்ள ஹவுசிங் போர்ட் பகுதியை சேர்ந்த சுவாமி தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். நேற்று, இரவு பணிக்கு சென்றிருந்த நிலையில் வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் பீரோவில் வைக்கப்பட்டிருந்த சுமார் 9 சவரன் தங்க நகை மற்றும்
15 ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுகுறித்து புகாரின் படி மர்ம நபர்களை ஆற்காடு நகர போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

News March 18, 2025

திருச்சி விமான நிலையம் தனியாருக்கு குத்தகை

image

இந்திய விமான போக்குவரத்துத் துறை இணையமைச்சா் முரளீதா் மோஹோல் நேற்று மாநிலங்களவையில் எழுத்துபூா்வமாக அளித்த பதிலில் கூறியிருப்பதாவது, திருச்சி, அமிருதசரஸ், வாரணாசி, புவனேசுவரம், ராய்பூா் விமான நிலையங்கள் மற்றும் 6 சிறிய விமான நிலையங்களின் இயக்கம், நிா்வாகம் மற்றும் மேம்பாட்டுப் பணிகளை அரசு – தனியாா் பங்கேற்பு திட்டத்தின் கீழ் தனியாா் வசம் ஒப்படைக்க அடையாளம் காணப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளாா்.

News March 18, 2025

விமான நிலையத்தில் அதிகரித்திருக்கும் நாய் தொல்லை

image

சென்னை விமான நிலையத்தில் நாய் தொல்லை அதிகரித்திருப்பதால் பயணிகள் அச்சத்தில் உள்ளனர். தினசரி லட்சக்கணக்கான பயணிகள் வந்து செல்லக்கூடிய நிலையில் நாய்கள் ஆங்காங்கே சுற்றித் திரிவதால் அச்சமாக உள்ளதாக பயணிகள் வேதனை தெரிவிக்கின்றனர். கடந்த ஆண்டு புளூ கிராஸ், விலங்கு நல வாரியத்துடன் இணைந்து 40க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டது. நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை

News March 18, 2025

ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட 41 வாகனங்கள் நாளை ஏலம்

image

சேலம், பொது விநியோகத் திட்டத்தில் வழங்கப்படும் ரேஷன் அரிசியை கள்ளத்தனமாக கடத்த பயன்படுத்திய 41 வாகனங்களை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த வாகனங்களை அதன் உரிமையாளர்கள் அபராதம் செலுத்தி பெற்றுக்கொள்ள முன்வரவில்லை. இதனை அடுத்து 41 வாகனங்களை நாளை காலை 10 மணிக்கு ஏலம் விடப்படுகிறது. சேலம் சர்க்கார் கொல்லப்பட்டிஉணவுக் கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஏலம் நடைபெறும்.

News March 18, 2025

பதிவு செய்தால் மட்டுமே பணம்! மார்ச் 31 கடைசி நாள்

image

பிரதமரின் கௌரவ நிதி உதவித்தொகை திட்டத்தில் பயன்பெற ‘அக்ரி ஸ்டேக்’ தளத்தில் பதிவு செய்வது கட்டாயம். இதன் வாயிலாக விவசாயிகளின் நில ஆவணங்களை ஒருங்கிணைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மார்ச் 31க்குள் பதிவு செய்வோருக்கு மட்டுமே உதவித்தொகை வழங்கப்படும். தூத்துக்குடி மாவட்டத்தில் 48,726 பேர் இதில் பயன்பெறும் நிலையில், தற்போது வரை 46% பேர்தான் பதிவு செய்துள்ளனர். தெரியாதவங்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News March 18, 2025

பதிவு செய்தால் மட்டுமே பணம்! மார்ச் 31 கடைசி நாள்

image

பிரதமரின் கௌரவ நிதி உதவித்தொகை திட்டத்தில் பயன்பெற ‘அக்ரி ஸ்டேக்’ தளத்தில் பதிவு செய்வது கட்டாயம். இதன் வாயிலாக விவசாயிகளின் நில ஆவணங்களை ஒருங்கிணைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மார்ச் 31க்குள் பதிவு செய்வோருக்கு மட்டுமே உதவித்தொகை வழங்கப்படும். தென்காசி மாவட்டத்தில் 40,051 பேர் இதில் பயன்பெறும் நிலையில், தற்போது வரை 46% பேர்தான் பதிவு செய்துள்ளனர். தெரியாதவங்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News March 18, 2025

பதிவு செய்தால் மட்டுமே பணம்! மார்ச் 31 கடைசி நாள்

image

பிரதமரின் கௌரவ நிதி உதவித்தொகை திட்டத்தில் பயன்பெற ‘அக்ரி ஸ்டேக்’ தளத்தில் பதிவு செய்வது கட்டாயம். இதன் வாயிலாக விவசாயிகளின் நில ஆவணங்களை ஒருங்கிணைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மார்ச் 31க்குள் பதிவு செய்வோருக்கு மட்டுமே உதவித்தொகை வழங்கப்படும். குமரி மாவட்டத்தில் 1.22 லட்சம் பேர் இதில் பயன்பெறும் நிலையில், தற்போது வரை 51% பேர்தான் பதிவு செய்துள்ளனர். தெரியாதவங்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News March 18, 2025

புதுச்சேரி மின்துறையில் 73 பேருக்கு வேலைவாய்ப்பு

image

புதுச்சேரி மின்துறையில் இளநிலை பொறியாளர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. வகுப்பு வாரியாக பொது-30, OBC -8, MBC -13, EBC -1, BCM -1, SC -12, ST -1, EWS -7, மாற்றுத் திறனாளிகள் -3 என மொத்தம் 73 பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க கடைசி நாள் மார்ச் 31 ஆகும். இதுகுறித்து மேலும் அறிய <>இங்கு க்ளிக்<<>> செய்யவும். வேலை தேடும் நண்பர்களுக்கு SHARE செய்யவும்..

News March 18, 2025

திருப்பூர்: கிராம சபை கூட்டம் 23ஆம் தேதி நடைபெறுகிறது

image

உலக தண்ணீர் தினம் மாலை வருகின்ற 23ஆம் தேதி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 265 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் அந்தந்த ஊராட்சியில் உள்ள பொது இடத்தில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் உலக தண்ணீர் தினத்தை பற்றி விவாதித்தல், சுத்தமான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்தல், ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது செலவினம் தொடர்பாக விவாதிக்கப்படுகிறது

error: Content is protected !!