Tamilnadu

News March 18, 2025

வரி பாக்கிக்கு சொத்து ஜப்தி கமிஷனர் எச்சரிக்கை

image

சிவகங்கை நகராட்சியில் பல ஆண்டுகளாக வீட்டு வரி, தொழில்வரி, குடிநீர் வரி உள்ளிட்டவைகளுக்கு சம்பந்தப்பட்டவர்கள் வரி கட்டாமல் இழுத்தடிப்பு செய்து வருகின்றனர். மார்ச் 31க்குள் நகராட்சிக்கு கட்டவேண்டிய வரி பாக்கியை செலுத்த வேண்டும். 25 ஆயிரத்திற்கு மேல் வரி பாக்கி உள்ளவர்களின் சொத்தை ஜப்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி கமிஷனர் கிருஷ்ணாராம் தெரிவித்தார்.

News March 18, 2025

குமரி மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

#குமரியில் இன்று(மார்ச் 17) காலை 10 மணிக்கு EPF பென்ஷன் குறைந்தபட்சம் 5,000 வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பாரதிய மத்தூர் சங்கம் சார்பில் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடக்கிறது.#மாலை 4 மணிக்கு பத்திர பதிவுத்துறையில் நடைபெறும் முறைகேடுகளை கண்டித்து மார்த்தாண்டம் பத்திரப்பதிவு அலுவலகம் முன்பு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

News March 18, 2025

தஞ்சை: ஆரம்ப சுகாதார நிலையத்தில் வேலை

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் சித்த மருத்துவக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஆயுஷ் பிரிவின் கீழ் ஆயுஷ் மருத்துவ அலுவலர் மற்றும் மருத்துவர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நலச் சங்கம் அறிவித்துள்ளது. அதன்படி சித்த மருத்துவம், யோகப்பிரிவில் பட்டம் பெற்றவர்கள் மார்ச்.20ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பப் படிவங்களை இங்கு <>க்ளிக் <<>>செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க..

News March 18, 2025

ஈரோட்டில் வேலை! நல்ல சம்பளம்

image

ஈரோடு மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு 8th, B.Sc, Diploma, ITI, MBBS, Nursing முடித்தர்கள் விண்ணப்பிக்கலாம். ஊதியம் ரூ.8,500 முதல் ரூ.60,000 வரை வழங்கப்படும். <>விண்ணப்பிக்க இங்கு கிளிக் செய்யவும்<<>>. Share பண்ணுங்க.

News March 18, 2025

பைனான்ஸ் ஊழியர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது

image

ஆரணி ஆரணி பாளையம் சந்தா தரவை சேர்ந்த விக்னேஷ் என்ற வாலிபரை ஒன்பது பேர் கொண்ட கும்பல் சரமாரியாக தாக்கி கொலை செய்தது. இந்த வழக்கில் ஏற்கனவே ஏழு பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்த ரமேஷ் என்பவரை நேற்று ஆரணி போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள கணேஷ் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

News March 18, 2025

பரமத்தி வேலூர் அருகே விபத்து  இரண்டு இளைஞர்கள் பலி

image

பரமத்தி வேலூர் திரெளபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தமிழரசன் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த இரு சக்கர வாகனம் ஒன்று தமிழரசன் இரு சக்கர வாகனத்தின் மீது‌ நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில் தமிழரசன் மற்றும் எதிரே மோதிய இன்னொரு நபரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 18, 2025

மாற்றுத்திறனாளி மகனை காய்கறி பெட்டியில் தூக்கி வந்த பெற்றோர்

image

விழுப்புரம் அடுத்த மேல்காரணை கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கேடேசன். இவரது மகன் கோவிந்தராஜ்(26), பிறவியிலேயே கை, கால் செயலிழந்த, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. இவருக்கு வழங்கப்பட்டு வந்த உதவித்தொகை கடந்த ஆறு மாதமாக நிறுத்தப்பட்டது. இதனால் விரக்தியடைந்த பெற்றோர் நேற்று, கோவிந்தராஜை, காய்கறி பெட்டியில் வைத்து மொபட்டில் விழுப்புரம் கலெக்டர் அலுவலக குறை கேட்பு கூட்டத்திற்கு அழைத்து வந்தனர்.

News March 18, 2025

நாமக்கல்லில் கிராம சபைக் கூட்டம் 23-க்கு ஒத்திவைப்பு

image

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 310 கிராம ஊராட்சிகளிலும் வருகிற 22-ந் தேதி நடைபெற வேண்டிய உலக தண்ணீர் தின கிராமசபை கூட்டம் நிர்வாக காரணங்களால் 23-ந்தேதி காலை 11மணி அளவில் நடைபெற உள்ளது.இதில் உலக தண்ணீர் தினத்தின் கருப்பொருள் பற்றியும், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்தும், சுத்தமான குடிநீர் வினியோகத்தினை உறுதி செய்வது குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது என ஆட்சியர் தெரிவித்துள்ளார்

News March 18, 2025

கோவையில் வேலை வாய்ப்பு முகாம்

image

கோவை இந்துஸ்தான் கல்லூரியில் மார்ச்.22ஆம் தேதி மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் தனியார் துறை மூலம் இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் 8, 10, 12, டிகிரி, டிப்ளமோ முடித்தவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். இம்முகாமில் தேர்ச்சி பெறுவோருக்கு உடனே வேலை வழங்கப்படும். (Share பண்ணுங்க).

News March 18, 2025

தாமதமாக வந்த அதிகாரிகளை தவிக்க விட்ட தேனி கலெக்டர்

image

மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு முன் நடக்கும் அதிகாரிகள் ஆய்வுக் கூட்டம் தேனி கலெக்டர் ரஞ்சித்சிங் தலைமையில் நேற்று மார்ச் 17 காலை 9:00 மணிக்குத் துவங்கியது. காலை 9:15 மணிக்கு மேல் வந்த 12 அதிகாரிகளை ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்க அவர் அனுமதிக்கவில்லை. கூட்ட அரங்கிற்கு வெளியே அவர்கள் காத்திருந்தனர். மீண்டும் 10:30 மணிக்கு மக்கள் குறைதீர் கூட்டம் துவங்கியதும் அதிகாரிகள் உள்ளே சென்றனர்.

error: Content is protected !!