Tamilnadu

News March 17, 2025

சேலம்: விவசாயிகளுக்கு ஆட்சியரின் வேண்டுகோள் 

image

விவசாயிகள் தங்கள் கால்நடைகளை நிழற்பாங்கான இடங்களில் கட்டி வைத்து உரிய அளவில் நீர் மற்றும் பசுந்தீவனங்களைக் கொடுத்து பராமரித்திடவும், கோடை காலத்தில் கால்நடைகளைத் தாக்கும் நோய்கள் குறித்த முன் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கால்நடைத் துறையினரால் தெரிவிக்கப்படும் வழிமுறைகளைக் கடைபிடிக்க விவசாயிகளுக்கு சேலம் ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.

News March 17, 2025

பிளஸ் 2 போதும்: மொபைல் ஆப் டெவலப்பர் ஆகலாம்

image

தமிழ்நாடு அரசு இலவச மொபைல் ஆப் டெவலப்பர் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதற்கு 12ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும், இப்பயிற்சிக்கு பின்னர் தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தி தரப்படும் என்றும் தெரிவித்துள்ளது. இந்தப் பயிற்சியில் சேர விருப்பமுள்ளவர்கள் <>இதை கிளிக்<<>> செய்து மார்ச் 24க்குள் விண்ணப்பிக்கலாம். இதை உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க…

News March 17, 2025

செம்மொழி நாள் விழா: மாவட்ட ஆட்சியர் தகவல்

image

நீலகிரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் கலைஞரின் பிறந்த நாளான ஜூன் 3ஆம் தேதி செம்மொழி நாள் விழாவாக கொண்டாடப்படுகிறது.இதனை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை போட்டி, பேச்சுப்போட்டி மே மாதம் நடைபெற உள்ளது.இதற்காக விண்ணப்பிப்பவர்கள் தமிழ் வளர்ச்சித் துறையின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து அலுவலகத்தில் வரும் 25ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

News March 17, 2025

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

image

திருப்பத்தூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகம் வலைதள பக்கத்தில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ,சமூக வலைத்தளங்களில் பதிவேற்றப்பட்டுள்ள உதவி எண்களில் பெரும்பாலானவை பொய்யான உதவி எண்களாகும். பொய்யான உதவி எண்கள் மூலம் ஏமாற்றி பணம் பறிக்கும் சைபர் குற்றங்கள் நடைபெறுகின்றன. சந்தேகம் ஏற்பட்டால் உடனடியாக சைபர் குற்றங்களுக்கான உதவி எண் : 1930 தொடர்பு கொள்ளலாம் என பதிவேற்றம் செய்துள்ளனர்.

News March 17, 2025

ஈரோடு அருகே இளைஞர் கொலை; தாய் உட்பட 5 பேர் கைது 

image

பவானி ஊராட்சிக்கோட்டை கதவணை நீர்மின் நிலையம் அருகே காவிரி ஆற்றில் பலத்த காயங்களுடன் அழுகிய நிலையில் ஆண் சடலம் கடந்த 13-ஆம் தேதி மீட்கப்பட்டது. பவானி போலீஸ் விசாரணை நடத்தியதில், அவர் பவானியைச் சேர்ந்த மதியழகன் (30) என தெரியவந்தது. மதியழகனை கொலை செய்தது அவனது தாய் மற்றும் சகோதரர் மற்றும் மூன்று நண்பர்கள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து பவானி போலீசார் 5 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

News March 17, 2025

சேலம்: இந்திய கிரிக்கெட் அணியில் சேர வாய்ப்பு 

image

சேலம் : ஜாகிர் அம்மாபாளையத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் 4 வது தெற்கு ஆசிய ரெட் டென்னிஸ் கிரிக்கெட் போட்டிக்கான தேர்வு நடைபெற்று வருகிறது. 14,17,19 வயதிற்குட்பட்ட இந்திய அணிக்கான இந்த தேர்வு வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ளது . கிரிக்கெட்டில் சாதிக்க நினைக்கும் உங்கள் நண்பர்களுக்குப் பகிரவும். 

News March 17, 2025

நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆட்சியர் ஆய்வு

image

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை வட்டம் கூரைநாடு பகுதியில் அமைந்துள்ள நகர் புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் அங்கு பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவரிடம் கேட்டறிந்தார் மருந்துகளின் இருப்பு நிலை குறித்தும் நேரில் ஆய்வு செய்தார்.

News March 17, 2025

ராணிப்பேட்டை காவல்துறை எச்சரிக்கை அறிவிப்பு 

image

ராணிப்பேட்டை காவல் துறை இன்று (மார்.17)  வெளியிடப்பட்ட விழிப்புணர்வு செய்தியில்  ஹேக்கர்களிடமிருந்து ஸ்மார்ட்போனை பாதுகாப்பதற்கான சிறந்த உதவிக்குறிப்புகள் வலுவான கடவுச்சொற்கள் அல்லது பயோமெட்ரிக்ஸை மென்பொருளை தொடர்ந்து புதுப்பிக்கவும் பொது வைஃபையுடன் கவனமாக இருங்கள் நம்பகமான பயன்பாடுகளை மட்டும் நிறுவவும் சந்தேகத்திற்குரிய இணைப்புகள் மற்றும் இணைப்புகளைத் தவிர்க்கவும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. 

News March 17, 2025

ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் குறைதீர் கூட்டம்

image

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் இன்று (17.03.2025) பெற்றுக்கொண்டார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் கி.அரிதாஸ் உட்பட பலர் உள்ளனர்.

News March 17, 2025

தேனி காவலர் குடியிருப்பில் மீட்கப்பட்ட நல்ல பாம்பு

image

தேனி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் காவலர் குடியிருப்பு வளாகம் அமைந்துள்ளது. இந்த வளாகத்தில் பாம்பின் நடமாட்டம் இருப்பதை கண்ட குடியிருப்பு வாசிகள் தேனியைச் சேர்ந்த பாம்பு பிடிக்கும் நபரான பாம்பு கண்ணனுக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த பாம்பு கண்ணன் குடியிருப்பு பகுதியில் பதுங்கி இருந்த சுமார் 5 அடி நீளம் கொண்ட நல்ல பாம்பினை பத்திரமாக மீட்டு வனத்துறையினர் உதவியுடன் வனப்பகுதியில் விடுவித்தார்.

error: Content is protected !!