India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுகை மாவட்டம், பேரையூரில் உள்ள நாகநாதசாமி கோயிலில் நாகநாதசுவாமி, பிரகதாம்பாள் அருள்பாலிக்கின்றனர். 18 மாதத்திற்கு ஒருமுறை நடைபெறும் பெயர்ச்சியில் இன்று மாலை 4:20 மணிக்கு ராகு கும்ப ராசிக்கும், கேது கன்னி ராசிக்கும் பெயர்ச்சியாக உள்ளனர். இத்தலத்தில் வழிபட்டால் ராகு, கேது தோஷம் நிவர்த்தி அடையும். இதை உறவினர், நண்பர்களுக்கு SHARE செய்யுங்கள்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 99 சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு நியமனம் செய்யப்படவுள்ளது, பணியாளர்களுக்கு ஓராண்டு கால பணிக்கு பின் சிறப்பு காலமுறை ஊதியத்தில் (ஊதிய நிலை 1 (Level of Pay – ரூ.3000-9000)) ஊதியம் வழங்கப்படும். இதற்கு 21 – 40 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணபிக்கலாம். விண்ணபிக்க இன்றே கடைசி நாள் (ஏப்ரல்.26) <
திருநெல்வேலி மாவட்டத்தில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டத்தின் கீழ் இயங்கி வரும் பள்ளி சத்துணவு மையங்களில் 119 சமையல் உதவியாளர்(பெண்) காலி பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளது. இதில் ரூ.3,000 – ரூ.9,000 ஊதியம் வழங்கப்படும் நிலையில் இதற்கு விண்ணப்பிக்க இன்றே(ஏப்.26) இன்றே கடைசி நாளாகும். ஆர்வமுள்ளவர்கள் இங்கே <
சேலம்: காடையாம்பட்டி வட்டம் கஞ்சநாயக்கன்பட்டி திரௌபதி அம்மன் கோவில் திருவிழாவில் 2 சிறுவர் உள்பட 4 பேர் எதிர்பாராதவிதமாக பட்டாசு தீப்பிடித்து வெடித்ததில் உயிரிழந்தனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது இரங்கலை தெரிவித்துள்ள்ளார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று இலட்சம் ரூபாய் வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளார்.
காரைக்கால்மேடை சேர்ந்த முத்து என்பவர் கடந்த 2024 ஆகஸ்ட் மாதம் பரவை பகுதியில் இரவு நேரத்தில் வீடு புகுந்து தாய் மகள் இருவரை தாக்கி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது தொடர்பாக வேளாங்கண்ணி போலீசார் வழக்கு பதிவு செய்து முத்துவை கைது செய்தனர். இந்நிலையில் வழக்கை விசாரித்த போக்சோ நீதிமன்ற நீதிபதி கார்த்திகா, முத்துவிற்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் ரூ.32,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக அம்பை கோட்ட துணை இயக்குனர் இளையராஜா நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில், காட்டு பன்றிகளின் அட்டகாசத்தை தடுப்பதற்கு அரசு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது .விளை நிலங்களில் புகும் காட்டுப் பன்றிகளை சுட்டுக் கொள்ள துப்பாக்கி வாங்க வனத்துறைக்கு ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக தெரிவித்தார்.
திருவாலங்காடு ரயில் நிலையம் தொழுதாவூா் கிராமம் அருகே நேற்று (ஏப்ரல் 25) அதிகாலை மாற்று ரயில் பாதை பகுதிக்கான சிக்னல் வேலை செய்யவில்லை. ரயில்வே பணியாளா்கள் சென்று பார்த்தபோது, விரைவு ரயில்கள் செல்லும் தண்டவாளத்தில் 2 இடங்களில் பிஷ் பிளேட்டுகள் அகற்றப்பட்டு போல்ட், நட்டுகள் கழற்றப்பட்டிருந்தது. பின்னர், உடனடியாக அவை சரி செய்யப்பட்டது. ரயிலை கவிழ்க்க சதி என்பது தெளிவாக தெரிவதாக அதிகாரிகள் கூறினர்.
சிவகங்கை மாவட்ட வேளாண்மை பொறியியல் துறையின் கீழ் 22 ஜேசிபி இயந்திரங்களை இயக்குவதற்கு, தகுதியுடைய, திறன் பெற்ற ஓட்டுநர்கள் தேவைப்படுகின்றனர். கனரக உரிமம், நல்ல உடல் தகுதி இருக்க வேண்டியது அவசியம். சிவகங்கை & காரைக்குடியில் உள்ள வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தினை தொடர்பு கொண்டு பயன் பெறலாம், அல்லது 9080230845 என்ற எண்ணை தொடர்பு கொண்டு பயன்படலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
நெல்லை – செங்கோட்டை இடையே இயக்கப்படும் பயணிகள் ரயிலில் 12 பெட்டிகள் மட்டுமே இணைக்கப்பட்டிருந்தன. இதனால் பயணிகள் நின்று கொண்டு பயணிக்கும் நிலை ஏற்பட்டது. இதுகுறித்து நெல்லை எம்பி ராபர்ட் ப்ரூஸ் ரயிலில் பயணம் செய்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டு தென்னக ரயில்வே அதிகாரிகளிடம் நேரில் முறையிட்டார். இதை அடுத்து வரும் 3ஆம் தேதி முதல் 16 பெட்டிகளுடன் ரயில் இயங்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
உலக கால்நடைகள் தினம் ஒவ்வோரு ஆண்டும் ஏப்ரல் 26 ஆம் தேதி கடைபிடிக்கப்படுவதை தொடர்ந்து நாமக்கல் மாவட்டத்தில் கால்நடை மருந்தகங்கள் மற்றும் கால்நடை மருத்துவமனைகளிலும் வெறி நோய்த்தடுப்பூசி முகாம் இன்று காலை 8 மணி முதல் 12 வரை நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.