India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

துவாக்குடி அருகே அசூர் பகுதியில் வாலிபர் ஒருவர் நேற்று மரக்கிளையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக துவாக்குடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் அவர் அதே பகுதியைச் சேர்ந்த சங்கர் என தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

விருத்தாசலம் வட்டம் கு.நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் (40), என்பவர் வீட்டில் 3 நாட்களுக்கு முன்பு இறந்து விட்டதாக தெரிகிறது. வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதாக அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பெயரில் போலீசார் வீட்டை சோதனை செய்தபோது, சுரேஷின் உடல் அழுகிய நிலையில் நேற்று (அக்.24) மாலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரியில் 2025-26ஆம் கல்வியாண்டிற்கான அனஸ்தீசியா டெக்னீசியன், அறுவை அரங்கு டெக்னீசியன், ஆர்தோபீடிக் டெக்னீசியன் ஆகிய ஓராண்டு சான்றிதழ் படிப்புகளில் 48 இடங்களுக்கு நேரடி மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. 17 வயது பூர்த்தியடைந்த, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற தகுதியான மாணவர்கள் நவ.14 க்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.

மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவருடன் மதுரையைச் சேர்ந்த பெண் ஒருவர் பணியாற்றி வருகிறார். 2 பேர், இன்ஸ்டாவில் நட்பாக பேசி வந்தனர். இந்நிலையில், அப்பெண்ணின் படத்தை AI மூலம் ஆபாசமாக எடிட் செய்து போலியான ஐ.டி மூலம் அப்பெண்ணுக்கு அனுப்பியுள்ளார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பெண் கோவை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரித்து, மணிகண்டனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

விழுப்புரம் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பகுதி நேர நகை மதிப்பீட்டாளர் பயிற்சி வகுப்பு இன்று(அக்25) தொடங்கப்பட்டுள்ளது. 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 17 வயது நிரம்பியவர்கள் வயது வரம்பின்றி ரூ.118 விண்ணப்ப கட்டணம் செலுத்தி கலந்து கொள்ளலாம் என விழுப்புரம் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் விஜய சக்தி தெரிவித்துள்ளார். மேலும் விபரங்களுக்கு 9442563330, 04146-259467-ஐ அணுகலாம்.

பெரம்பலூர் தனியார் டயர் தொழிற்சாலை கம்பெனியில் பணிபுரியும், விழுப்புரம் மாவட்டம் பனையபுரம் கிராமத்தைச் சேர்ந்த சுந்தர் (26) என்ற இளைஞர், பெரம்பலூர் நான்கு ரோடு மின் நகர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பல்வேறு கோணங்களில் பெரம்பலூர் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

திருப்பத்தூர்: ஆம்பூர் தாலுகா செங்கலி குப்பம் ஊராட்சி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று(அக்.24) இரவு 11.30 மணிக்கு வேலூர் மாவட்டம் அணைக்கட்டு ஒன்றியம் பாக்கம் பாளையம் ஊராட்சி பகுதியைச் சேர்ந்த ராஜேஷ்(20). ஹோட்டல் தொழிலாளியான இவர் சாலையை கடக்கும் போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அறந்தாங்கி அருகே கொடிவயல் கிராமத்தைச் சேர்ந்த வேலுசாமி என்பவரது மனைவி பெரியநாயகி, கடந்த 3 நாட்களாக காணாமல் போன நிலையில், புகாரின் அடிப்படையில் நாகுடி போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று அப்பகுதியில் உள்ள கிணற்றில் பெரியநாயகி இறந்து சடலமாக மிதப்பது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் உடலை கைப்பற்றிய நாகுடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

ஈரோடு, கருங்கல்பாளையத்தைச் சேர்ந்தவர் ஒருவர் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்களிடமிருந்து தீபாவளி சீட்டு நடத்தி சுமார் ரூ.1 கோடி வரை மோசடி செய்துள்ளதாகவும் மற்றும் தலைமறைவு ஆகிவிட்டார் எனவும் நேற்று அப்பகுதி பொதுமக்கள் ஈரோடு எஸ்பி அலுவலகத்தில் நேரில் வந்து புகார் மனுக்களை அளித்தனர். தங்கள் பணத்தை மீட்டு தரவும், தலைமறைவாகியுள்ள நபர் மீது நடவடிக்கை எடுக்கவும் அம்மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் அருகே உள்ள சின்னமனை பகுதியைச் சேர்ந்தவர் விஷ்ணு (20). என்ஜினீயரிங் மாணவரான இவர், தீபாவளி பண்டிகை விடுமுறைக்காக ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில், நேற்று காலை விஷ்ணு, மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மர்மமான முறையில் சடலமாக கிடந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த சேதுபாவாசத்திரம் போலீசார், விஷ்ணுவின் உடலை கைப்பற்றி விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.