Tamilnadu

News September 7, 2025

புதிய துணை மின் நிலையம் அமைக்கும் பணி

image

விருதுநகர், கோட்டூர் கிராமத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மூலம் 745 /400 கிலோ வாட் புதிய துணை மின்நிலையம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. தற்போது முழுமை பெற்றதை தொடர்ந்து அதனை பயன்பாட்டுக்கு கொண்டு வருவது குறித்து கலெக்டர் சுகபுத்ரா தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் இராதாகிருஷ்ணன் இன்று நேரில் சென்று பார்வையிட்டனர்.

News September 6, 2025

தாட்கோ: போர்க் லிப்ட் பயிற்சி

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) சார்பில், போர்க் லிப்ட் ஆப்ரேட்டர் பயிற்சி வழங்கப்பட உள்ளது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 முதல் 35 வயது வரை உள்ளவர்கள், www.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட ஆட்சியர் சந்திரகலா ஐ.ஏ.எஸ் தெரிவித்துள்ளார்.

News September 6, 2025

தென்காசி மாவட்ட இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

தென்காசி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் நாள்தோறும் இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி இன்று இரவு தென்காசி, புளியங்குடி, சங்கரன்கோவில் ஆகிய உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அவசர தேவைகளுக்கு அந்தந்த அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

News September 6, 2025

அரூர்: உயர்கல்விக்கு சேராத மாணவர்களுக்கு சிறப்பு முகாம்

image

தருமபுரி மாவட்டத்தில், 2022 முதல் 2025 வரை 12-ம் வகுப்பு முடித்து, உயர்கல்விக்கு சேராத மாணவ, மாணவிகளுக்காக, தமிழக அரசின் ‘உயர்வுக்கு படி’ என்ற சிறப்புத் திட்டத்தின் கீழ், வரும் செப்டம்பர் 8-ம் தேதி அன்று அரூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முகாம் நடைபெற உள்ளது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த முகாமில் கலந்துகொண்டு பயனடையுமாறு, மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஷ் கேட்டுக்கொண்டுள்ளார்.

News September 6, 2025

ப.சிதம்பரம் அரசு சட்டக்கல்லூரி பணிகளை பார்வையிட்டார்

image

முன்னாள் மத்திய அமைச்சர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் ப.சிதம்பரம் அவர்கள், காரைக்குடியில் புதிய அரசு சட்டக்கல்லூரிக்காக நடைபெறும் கட்டிட வேலைகளை நேரில் பார்வையிட்டு, திட்டத்தின் முன்னேற்றம், தரநிலைகள் மற்றும் நிறைவுக்காலம் குறித்து அதிகாரிகளிடம் விரிவாக கேட்டறிந்தார். அவருடன் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.மாங்குடி மற்றும் பொறியாளர்கள் இருந்தனர்.

News September 6, 2025

நெல்லை: இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

image

திருநெல்வேலி மாநகர இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி பாளை டவுன் தச்சை ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும் உதவி ஆய்வாளர்களும், இன்று [செப்.06] இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். உதவி ஆணையர் அசோக்குமார் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார். பொதுமக்கள் காவல் உதவிக்கு மேற்கண்ட தொலைபேசி நம்பரை தொடர்பு கொள்ளலாம்.

News September 6, 2025

வடிகால் வாய்க்காலை தூர்வார எம்எல்ஏ நடவடிக்கை

image

புதுவை உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட ரங்கப் பிள்ளை வீதி அண்ணா சாலை இணைப்பு பகுதியில் தனியார் இணைப் பகுதியில் தனிதான் கட்டிட கழிவுகள் மழைநீர் வடிகால் வாய்க்காலில் கொட்டப்பட்டிருந்தது. இதனால் மழை நீர் தேங்கி நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் பல்வேறு தொற்று நோய் ஏற்பட்டது. இன்று எம்.எல்.ஏ. நேரு அப்பகுதிக்கு சென்று ஆய்வு செய்து நோய் பரவாமல் எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தர விட்டார்.

News September 6, 2025

தாம்பரத்தில் இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்!

image

தாம்பரம் மாநகராட்சியில் இன்று (செப்.,6) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News September 6, 2025

நெல்லையில் இலவச டோல்கேட் அனுமதி கேட்டு கோரிக்கை

image

திருநெல்வேலியில் காங்கிரஸ் மாநாடு நாளை நடைபெற உள்ளது. மாநாட்டுக்கு செல்லும் வாகனங்களை போக, வர டோல்கேட்டில் ஃப்ரீயா அனுமதிக்க கோரி தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி கடிதம் கடிதம் எழுதி உள்ளது. நாங்குநேரி டோல்கேட் வாகைகுளம் டோல்கேட் கயத்தார் டோல்கேட் ஆகிய பகுதிகளில் காங்கிரஸ் தொண்டர்கள் வந்து செல்ல இலவச அனுமதி கோரி தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு விண்ணப்பித்துள்ளனர்.

News September 6, 2025

நெல்லையில் உயர்ந்த பஸ் கட்டணம்

image

ஓணம் பண்டிகை- மிலாடி நபி, சனி, ஞாயிறு என 3 நாட்கள் தொடர் விடுமுறைக்காக சென்னையில் இருந்து நெல்லை வந்தவர்கள் நாளை மாலை சென்னைக்கு திரும்ப முன்பதிவு செய்து வருகின்றனர். வழக்கமான ரயில் பாஸ்களில் இடங்கள் நிரம்பிய நிலையில் ஆம்னி பஸ்களில் டிக்கெட் கட்டணம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. ரூ.1,900 முதல் ரூ.3,700 வரை வசதிக்கு ஏற்ப கட்டணம் உயர்ந்துள்ளது.

error: Content is protected !!