India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பர்கூர் அடுத்து மட்டாரபள்ளியை சேர்ந்த வேலன் என்பவரின் மகள் கீர்த்திகாஶ்ரீ (16).இவர் 10ஆம் வகுப்பு படித்து வருகிறார்.அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தார்.பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை செய்தும் பலனளிக்காததால் மன அழுத்தத்தில் இருந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
குடியாத்தம் அடுத்த நெட்டேரியை சேர்ந்தவர் பிச்சைமுத்து (50). இவரது மனைவி கவிதாவுடன் (45) இருசக்கர வாகனத்தில் லத்தேரி சென்று வரும் போது சென்றம்பள்ளி அருகே எதிரில் வந்த இரு சக்கரம் மோதி விபத்து ஏற்பட்டது. விபத்தில் பிச்சைமுத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவரது மனைவி பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் . இச்சம்பவம் குறித்து கே வி குப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி அருகே உள்ள பழனிசெட்டிபட்டியில் 3-வது புத்தகத் திருவிழா வருகிற மார்ச் 21 ல் நடக்கிறது.பழனிசெட்டிபட்டியில் உள்ள மேனகா மில்ஸ் மைதானத்தில் புத்தக திருவிழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மைதானத்தை கலெக்டர் ரஞ்ஜீத்சிங் ஆய்வு செய்தார். டி.ஆர்.ஓ., மகாலட்சுமி, தேனி ஏ.எஸ்.பி., கேல்கர் சுப்ரமணிய பாலசந்திரா, கலெக்டர் நேர்முக உதவியாளர் முத்துமாதவன், தேனி வட்டாட்சியர் சதீஸ்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்
பராமரிப்புப் பணிகள் காரணமாக, திருச்சி – ஈரோடு பயணிகள் ரயில் (வண்டி எண்: 56809) நாளை (மார்ச் 18) மற்றும் மார்ச் 20, 23, 25, 28, 31 ஆகிய தேதிகளில் காலை 7.20 மணிக்கு புறப்பட்டு கரூர் வரை மட்டும் இயங்கும் என்றும், பின்னர் கரூரில் இருந்து முன்பதிவில்லா சிறப்பு ரயிலாக ஈரோடு வரை இயங்கும் என்றும் திருச்சி ரயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மக்களவைத் தொகுதியிலும் ஒரு பாஸ்போர்ட் சேவா கேந்திர அலுவலகம் என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ், திருப்பூர் தலைமை தபால் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில், கடந்த ஜனவரி 24ஆம் தேதி திறக்கப்பட்டது. திருப்பூரில் துவங்கப்பட்ட பாஸ்போர்ட் சேவா கேந்திர அலுவலகம் மூலம் கடந்த ஜனவரி 24 முதல் மார்ச் 14 வரை 1,400 பேர் விண்ணப்பித்துள்ள நிலையில் 1,100க்கும் மேற்பட்டோருக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது.
நீலகிரி ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு நேற்று கூறுகையில், மே மாதம் 127வது மலர் கண் காட்சி நடப்பதை முன்னிட்டு 275 வகையான விதைகள் மற்றும் செடிகள் ஜப்பான், அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளிலிருந்தும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பெறப்பட்டு, 7.5 லட்சம் மலர் நாற்று நடவு செய்யப்படும் எனத் தெரிவித்தார்.
தொண்டி அருகே நம்புதாளையில் ராட்டினம் அமைத்த பகுதியில் கடந்தாண்டு நவ.1 அன்று பட்டப்பகலில் திருமணத்தை மீறிய உறவு காரணமாக சரவணன் உள்ளிட்டோர் கார் மற்றும் டூவீலர்களில் சென்று முத்துக்குமாரை அரிவாளால் வெட்டி கொலை செய்தனர். இதில் சிவகங்கை மாவட்டம் ஒக்கூரை சேர்ந்த கலைசெல்வனை போலீசார் தீவிரமாக தேடிவந்தனர். இந்நிலையில் சென்னை பல்லாவரத்தில் இருந்த அவரை நேற்று தொண்டி போலீசார் கைது செய்தனர்.
விருதுநகர் மாரியம்மன் கோவிலில் பொங்கலை முன்னிட்டு வேண்டுதலுக்காக மண்ணால் செய்யப்பட்ட பொம்மைகளை வாங்கி வைத்து வழிபடுவது வழக்கம். திருமண வரன் வேண்டுவோர் ஜோடி பொம்மைகளையும், உடல் நலம் பெற ஆண், பெண் பொம்மைகளையும், குழந்தை வரன் வேண்டுவோர் குழந்தை பொம்மைகளையும், வீடு கட்ட வேண்டுவோர் வீடு பொம்மையும் வாங்கி வைத்து வழிபடுவர். பொம்மைகளை வாங்கி வைத்து வழிபட்டால் வேண்டியது நடக்கும் என்பது நம்பிக்கை. SHARE IT
தஞ்சை மாவட்டம் பாபநாசம் சிவாலய பகுதியை சேர்ந்தவர் முருகானந்தம் (55). விவசாயியான இவருக்கு ஒரு மகன் , ஒரு மகள் உள்ளனர். தனது மகளுக்கு திருமண ஏற்பாடு செய்திருந்தார். இந்நிலையில் நிச்சயதார்த்த விழா நடத்த காசு இல்லாததால் விஷம் குடித்துள்ளார். அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளார். தற்கொலை எதற்கும் தீர்வல்ல..
கரூரில் கட்டாயம் பார்க்க வேண்டிய பிரசித்தி பெற்ற கோயில்கள். ▶️கல்யாண பசுபதீஸ்வரர் திருக்கோயில் (கரூர்) ▶️ஸ்ரீ கருவூர் மாரியம்மன் கோயில் (கரூர்) ▶️கல்யாண வெங்கடரமண சுவாமி கோயில் (தாந்தோன்றிமலை) ▶️ புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் (வேலாயுதம்பாளையம்) ▶️சதாசிவ பிரமேந்திரர் கோயில் (நெரூர்) ▶️கடம்பவணேஸ்வரர் கோயில் (குளித்தலை). இதை மற்ற பக்தர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.
Sorry, no posts matched your criteria.