India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவையில் இன்று (மார்ச்.17) முதல் 22ஆம் தேதி வரை அங்கன்வாடி மையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களில், வைட்டமின் ‘ஏ’ திரவம் வழங்கும் முகாம் நடைபெற உள்ளது. இதில், மாவட்டம் முழுவதும் 5 வயதுக்குட்பட்ட 1,30,956 குழந்தைகளுக்கு வைட்டமின் ‘ஏ’ திரவம் வழங்கப்பட உள்ளது. மேலும், குழந்தைகள் வைத்திருப்பவர்களுக்கு Share பண்ணுங்க.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தலைமைக் காவலர் சீனிவாசன்(40) மயங்கி விழுந்து நேற்று உயிரிழந்தார். விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் பணிபுரிந்துவந்த இவர், கஞ்சா விற்பனை செய்த கலாநிதிமாறனை பிடிக்க சென்றபோது, திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார். சக காவலர்கள் அவரை மீட்டு விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதித்ததில், அவர் உயிரிழந்தது தெரியவந்தது.
இலங்கைத் தமிழர் முகாமை சேர்ந்தவர் பூஜா (21) வேலூரில் உறவினர் வீட்டில் தங்கி படித்து வந்தார். அப்பகுதியை சார்ந்த சரண்ராஜ் உடன் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டனர். தகவலறிந்த பெற்றோர்கள் சென்று முறைப்படி திருமணம் செய்து வைப்பதாக கூறி தாலியை அகற்றினர். இதில் மனம் உடைந்த பூஜா மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீ வைத்துக் கொண்டார். உடனே மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தருமபுரி மாவட்டம், தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் மாசிமக தேரோட்டத்தை முன்னிட்டு அரூர் வருவாய் கோட்டத்திற்கு நாளை (மார்ச் 18) உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ஆர். சதீஸ் உத்தரவிட்டுள்ளார். இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக மார்ச் 29-ஆம் தேதி பணி நாளாக செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லித்தோப்பு டி.ஆர். நகர், 1, 2, 3வது குறுக்கு தெருக்களில் அதிகளவில் நாய்கள் உள்ளது. அதில், ஒரு நாய் கடந்த சில நாட்களாக அவ்வழியாக செல்லும் பொதுமக்களை கடித்து வருகிறது. நேற்று முன்தினம் 2 சிறுவர்களையும், நேற்று 2 பெரியவர்கள் என 4 பேரை கடித்து குதறியது. இதுகுறித்து தகவலறிந்த நகராட்சி ஊழியர்கள், அந்த நாயை பிடித்து ஊசி போட்டுவிட்டு, அங்கேயே விட்டு சென்றனர். இதனால், அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தொகுப்பூதியம், மதிப்பூதியம், சிறப்பூதியம் வழங்கப்பட்டு வரும் ஊழியர்களுக்கு பணி நிரந்தரம் வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்னிறுத்தி பெரம்பலூர் மாவட்ட ஜாக்டோ ஜியோ அமைப்பினர் சார்பில் மார்ச்-23 ஆம் தேதி காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவதாக தெரிவித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மங்கலம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் சொந்தமாக டியூஷன் நடத்தி வருகிறார். கடந்த 14ம் தேதி காலை டியூஷனுக்கு வந்த பிளஸ் 2 மாணவியிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். இது குறித்து மாணவியின் தாய் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பெயரில் நேற்று வெங்கடேசனை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
முனஞ்சிபட்டியை சேர்ந்தவர் மூக்காண்டி மகன் சுந்தர். ஆடுகள் மேய்க்கும் தொழிலாளியான இவர் 100 க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்று குட்டி ஆடுகளை கிடையில் அடைத்து சென்றார். மீண்டும் வந்து பார்த்தபோது கிடையில் இருந்த 18 ஆடுகள் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். விசாரணையில் நாய்கள் கடித்து ஆடுகள் இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
செங்கல்பட்டு திருப்போரூர் அருகே பூபதி,பாஸ்கர், விஷ்ணு ஆகிய மூவர் மது அருந்தி உள்ளனர். அந்த நேரத்தில் அவ்வழியே சென்ற சரண்குமார் என்பவரிடம் சிகரெட் வாங்கி வர சொன்னதை அடுத்து வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.பின் அங்கிருந்து சென்ற சரண் மீண்டும் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்த பொழுது மூவரும் உறங்கிக் கொண்டிருந்துள்ளனர்.அப்போது வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாஸ்கரை கட்டையால் தாக்கியதில் அவர் உயிரிழந்தார்.
சென்னை மதுரவாயல் பகுதியை சேர்ந்த நடராஜன் தனது மின்சார பைக்கை சார்ஜ் போட்டுவிட்டு மாடிக்கு சென்று படுத்துள்ளார்.கீழ்தளத்தில் அவரின் மகன் கெளதம்,மருமகள் மஞ்சு, 9 மாத குழந்தை மூவரும் உறங்கி உள்ளனர். அதிகாலை 5 மணிக்கு சார்ஜில் இருந்த மின்சார பைக் திடீரென தீ பிடித்து எரிந்து கீழ்தளம் முழுவதும் வேகமாக பரவ தொடங்கியது. இதில் படுகாயம் அடைந்த மூவரும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.