India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வசந்த் அண்ட் கோ சார்பில் ஒவ்வொரு வருடமும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுவது வழக்கம். இந்த வருடம் நடைபெறும் வேலை வாய்ப்பு முகாம் வரும் ஏப்ரல் மாதம் 12-ஆம் தேதி நாகர்கோவிலில் நடைபெறுகிறது. இளைஞர்கள் இதில் ஏராளமாக பங்கேற்று பயனடைய வேண்டும் என வசந்த் அண்ட் கோ தலைவர் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் எம்.பி. வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திண்டுக்கல்லில் இன்று 16-03-2025 இரவு 11.00 மணி முதல் நாளை திங்கட்கிழமை காலை 6.00 மணி வரை காவல் துறையினர் நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல், வேடசந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தெரிவித்துள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அதிகாரிகள் இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று (16/03/2025) இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்: நாமக்கல் – வேதப்பிறவி (9498167158), ராசிபுரம் – நடராஜன் (9442242611), திருச்செங்கோடு – தீபா (9443656999) ,வேலூர் – இராமகிருஷ்ணன் (9498168464) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.
வேலூர், காட்பாடி, குடியாத்தம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று (மார்ச்.16) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் சற்று முன் வெளியிடப்பட்டது. இதில் பகுதிவாரியாக ரோந்து பணி நடைபெறுகிறது. ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கான தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (மார்ச்.16) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. அதில் ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் தொலைபேசி எண்களை தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இரவு நேரங்களில் ஏதேனும் உதவி தேவைப்பட்டால் இதில் குறிப்பிட்டுள்ள எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் நாமக்கல்லில் இன்று நடைபெற்றது. இந்த குழு கூட்டத்தில் ஒரு முட்டையின் கொள்முதல் விலை 10 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.3.90 என்ற அளவில் நிர்ணயம் செய்யப்பட்டது. கடந்த வாரங்களில் ஒரு முட்டை விலை ரூ.3.80 என விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இன்று 10 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்ட காவல் துறை சார்பில் இன்று (16.03.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணிவரை ரோந்து பணியில் கிருஷ்ணகிரி காவல் துணை கண்காணிப்பாளர் சிவகுமார் தலைமையில் ஊத்தங்கரை, பர்கூர், கிருஷ்ணகிரி, ஓசூர்,தேன்கனிக்கோட்டை ஆகிய இடங்களில் இரவு ரோந்து பணியில் இடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி மற்றும் காவல் கட்டுபாட்டு அறை-04343230100 எண் வெளியிடப்பட்டுள்ளது.
மார்ச் 2025-ஆம் மாதத்திற்குரிய விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 21.03.2025 அன்று காலை 11.00 மணி அளவில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் விவசாயிகள் சங்க பிரதிநிதிகளும், விவசாயிகளும் கலந்துகொண்டு விவசாயம் சம்மந்தப்பட்ட கோரிக்கைகளை மட்டும் மனுவாக கொடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
டெலிகிராம் குரூப்பில் இணையுங்கள் அதில் பணத்தை முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தைகள் கூறி மோசடி செய்யும் கும்பல் பெருகி வருகிறது. எனவே பொதுமக்கள் அவற்றை நம்பி ஏமாற வேண்டாம் என மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை பொதுமக்களை எச்சரித்துள்ளது. மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு தகவல்களை வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது. Share It
திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று காலை காரைக்குடியை சேர்ந்த ஓம்குமார் (50) என்ற பக்தர் சுவாமி தரிசனத்திற்காக கட்டண தரிசன வரிசையில் நிற்கும்போது திடீரென மூச்சு திணறி உயிரிழந்தார். இதுகுறித்து தமிழக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்த ஓம்குமார் குடும்பத்திற்கு தமிழக அரசு மற்றும் அறநிலையத்துறை நிவாரணம் வழங்கவும் வலியுறுத்தியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.