Tamilnadu

News March 17, 2025

நெல்லை: இரவுநேர ரோந்துபணி காவல் அதிகாரிகளின் விவரம்

image

திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தமுள்ள 5 காவல் உட்கோட்டங்களில், இன்று (மார்ச்-16] இரவு ரோந்து காவல் அதிகாரிகளின் பெயர், அவர்களின் உட்கோட்டம் மற்றும் செல் நம்பர் ஆகியவற்றை திருநெல்வேலி மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. திருநெல்வேலி (SJHR) துணை காவல் கண்காணிப்பாளர் சம்பத் மேற்பார்வையில், இவர்கள் ரோந்து பணியில் ஈடுபடுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 17, 2025

மதுரை மாநகரில் இரவு ரோந்து பணி விவரம்

image

மதுரை மாநகரில் இன்று (16.03.2025) இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இதை பகிரவும்.

News March 17, 2025

கோவை: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் இன்று (16.03.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News March 17, 2025

கயத்தூர் தலைமைக் காவலர் மறைவுக்கு முதலமைச்சர் நிதியுதவி

image

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் பணிபுரியும் சீனிவாசன், கயத்தூர் கிராமத்தில் ரோந்துப் பணியின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த விக்கிரவாண்டி காவல்நிலைய தலைமைக் காவலர் சீனிவாசன் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு முதல்வர் ஆறுதல் கூறினார். இதையடுத்து 25 லட்சம் நிதியுதவியை முதலமைச்சர் முக.ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்.

News March 17, 2025

சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி

image

விழுப்புரம் வடக்கு மாவட்டம் செஞ்சி வட்டம், நாட்டார்மங்கலம் வல்லம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு சக்கர வாகனத்தில் சென்ற துரைக்கண்ணு மற்றும் மனைவி பச்சையம்மாள், கோபிகா (மகள்) என மூன்று பேரும் அரசு பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News March 16, 2025

தூத்துக்குடி மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடைபெற்று விடாமல் தடுக்கும் வகையில் மாவட்ட முழுவதும் காவல்துறையினர் இரவு நேரங்களில் பொதுமக்கள் நலன் கருதி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று இரவு மாவட்ட முழுவதும் ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விபரங்களை கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.*தேவைபடுவோருக்கு பகிரவும்*

News March 16, 2025

சேலம்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம் 

image

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுக்கவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள் இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று மார்ச்.16 இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விவரங்கள்.

News March 16, 2025

மலர் தூவி ரயிலை வரவேற்ற பொதுமக்கள்

image

உளுந்தூர்பேட்டை ரயில் நிலையத்திற்கு கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயில் நின்று இன்று ஓராண்டு நிறைவு பெறுவதை முன்னிட்டும், இரண்டாம் ஆண்டு துவங்குவதை ஒட்டி இன்று உளுந்தூர்பேட்டை ரயில் நிலையத்திற்கு வந்த கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு உளுந்தூர்பேட்டை பகுதி சமூக ஆர்வலர்கள், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகள், செய்தியாளர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்ளிட்ட பலர் மலர்தூவி வரவேற்றனர்.

News March 16, 2025

 இரவு ரோந்து அதிகாரிகள் விவரம்

image

ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று (மார். 16) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை  ரோந்து பணியில் ஈடுபடும் அதுகாரிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.  பொது மக்கள் இரவு நேரங்களில் அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கலாம் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 16, 2025

சேலம் மாநகர இரவு ரோந்து போலீசார் விவரம் 

image

சேலம் மாநகர பகுதிகளில் இரவு நேரங்களில் குற்ற சம்பவங்கள் நிகழாத வண்ணம், பொதுமக்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், மாநகர காவல் துறை தொடர்ந்து பணியில் ஈடுபடுகின்றனர். அந்த வகையில் இன்று (மார்ச் 16) மாநகரப் பகுதி முழுவதும் ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகளின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!