Tamilnadu

News March 16, 2025

தி.மலை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

தி.மலை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள 3 ஆற்றுப்படுத்துநர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா்,குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்,வட்டாட்சியா் அலுவலக வளாகம்,தி.மலை-606601 என்ற முகவரியில் அணுகலாம்.மேலும்,04175-223030 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என்று கலெக்டர் தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார்

News March 16, 2025

காஞ்சிபுரத்தில் ‘சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா’

image

தமிழகத்தில், ‘சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா’ கடந்த ஆண்டு காஞ்சிபுரம், மதுரை, திருச்சி உள்ளிட்ட 8 இடங்களில் சங்கமம் நம்ம ஊரு திருவிழா நடத்தப்பட்டது. இந்த ஆண்டும் அதே 8 இடங்களில் நடத்தப்படவுள்ளது. இவ்விழாவில் நிகழ்ச்சி நடத்த விரும்பும் கலைக்குழுக்களின் நிகழ்ச்சி பதிவு, தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மேற்கொள்ளப்பட உள்ளது.

News March 16, 2025

தென்காசி: இந்திய ராணுவத்தில் சேர விருப்பமா?

image

இந்திய ராணுவத்தில் நடப்பாண்டு ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அக்னி வீரர் ஜெனரல் டியூட்டி, அக்னி வீரர் டெக்னிக்கல், அக்னி வீரர் அலுவலக உதவியாளர்/ ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல் ஆகிய பிரிவுகளுக்கு இங்கே <>’க்ளிக்’<<>> செய்து விண்ணப்பிக்கலாம். தென்காசி, குமரி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஏப்.10ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். உங்கள் பகுதி இளைஞர்கள், நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

News March 16, 2025

தூத்துக்குடி: இந்திய ராணுவத்தில் சேர விருப்பமா?

image

இந்திய ராணுவத்தில் நடப்பாண்டு ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அக்னி வீரர் ஜெனரல் டியூட்டி, அக்னி வீரர் டெக்னிக்கல், அக்னி வீரர் அலுவலக உதவியாளர்/ ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல் ஆகிய பிரிவுகளுக்கு இங்கே ‘<>க்ளிக்<<>>’ செய்து விண்ணப்பிக்கலாம். தென்காசி, குமரி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஏப்.10ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். உங்கள் பகுதி இளைஞர்கள், நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

News March 16, 2025

கன்னியாகுமரி: இந்திய ராணுவத்தில் சேர விருப்பமா?

image

இந்திய ராணுவத்தில் நடப்பாண்டு ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அக்னி வீரர் ஜெனரல் டியூட்டி, அக்னி வீரர் டெக்னிக்கல், அக்னி வீரர் அலுவலக உதவியாளர்/ ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல் ஆகிய பிரிவுகளுக்கு இங்கே ‘<>க்ளிக்<<>>’ செய்து விண்ணப்பிக்கலாம். தென்காசி, குமரி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஏப்.10ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். உங்கள் பகுதி இளைஞர்கள், நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

News March 16, 2025

பி.எம்.கிசான் கவுரவ நிதி பெறுவது நிறுத்தம் – மதுரை ஆட்சியர்

image

விவசாயிகள் உடனடியாக அடையாள எண் பெற தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். அவ்வாறு பதிவு செய்யாத விவசாயிகளுக்கு பி.எம்.கிசான் கவுரவ நிதி பெறுவது நிறுத்தம் செய்யப்படும். மேலும், விவசாயம் சார்ந்த 14 துறைகளில் திட்ட மானிய சலுகைகளையும் பெற முடியாது. மத்திய அரசு உத்தரவுப்படி பி.எம்.கிசான் 20வது தவணை பெற்றிட மத்திய அரசு வழங்கும் அடையாள எண் பெறுவது மிகவும் அவசியமாகும் என கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.

News March 16, 2025

சேலத்தில் பீர் விற்பனை 40 சதவீதம் அதிகரிப்பு

image

கோடை வெயிலால்,சேலம் மாவட்டத்தில் 200 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு நாள் ஒன்றுக்கு ரூ.3 கோடிக்கு மேல் மதுபானங்கள் விற்பனை நடக்கிறது. மாவட்டத்தில் கடந்த சிலநாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால், வழக்கத்தை விட 30 முதல் 40 சதவீதம் பீர் வகைகள் விற்பனை அதிகரித்துள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது.

News March 16, 2025

கோயில்களில் அறங்காவலர் குழு விண்ணப்பிக்க வாய்ப்பு

image

நெல்லை மாவட்டத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ரூ.10 லட்சத்திற்கும் குறைவான ஆண்டு வருவாய் உள்ள கோயில்களுக்கு பரம்பரை முறை வழி சாரா அறங்காவலர்கள் நியமனம் செய்ய மாவட்ட குழு அரசால் நியமிக்கப்பட்டுள்ளது. அறங்காவலர் குழு நியமன உறுப்பினர்களுக்கான விண்ணப்பங்களை உதவி ஆணையர் இந்து சமய அறநிலை துறை அலுவலகம் 24பி, 26வது குறுக்கு தெரு மகாராஜா நகர் நெல்லை என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.

News March 16, 2025

80 புதிய வழித்தடங்களில் மினிபஸ்கள் இயக்க முடிவு

image

சேலம் மாவட்டத்தில் ஏற்கனவே குறைவான சேவை உள்ள வழித்தடங்களில் கூடுதலாகவும், போக்குவரத்து சேவை இல்லாத வழித்தடங்களில் புதிதாகவும், மினிபஸ்களை இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் சேலம், தர்மபுரி மாவட்டங்களில் 80 புதிய வழித்தடங்களில் மினி பஸ்கள் இயக்கமுடிவு செய்யப்பட்டுள்ளது என வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News March 16, 2025

ராகு தோஷம் நீக்கும் திருநாகேஸ்வரம்

image

கும்பகோணம் அடுத்த திருநாகேஸ்வரம் பகுதியில் நாகநாத சாமி கோயில் உள்ளது. நவகிரகங்களில் ஒன்றான ராகு ஸ்தலம் இங்கு தான் உள்ளது. இங்கு நாகவல்லி, நாக்கன்னி ஆகிய தன் இரு தேவிமாருடன் மங்கள ராகுவாக காட்சி அளிக்கின்றார். ராகு தோஷம் உள்ளவர்கள் இங்கு சென்று பாலபிஷேகம் செய்தால் நிவர்த்தியாகும் என்பது ஐதீகம். ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 4.30 முதல் 6 மணி வரை ராகு பகவானுக்கு சிறப்பு பூஜை நடைபெறும். SHARE பண்ணுங்க

error: Content is protected !!