India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்திய ராணுவத்தில் நடப்பாண்டுக்குரிய ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில் அக்னி வீரர் ஜெனரல் டியூட்டி, அக்னி வீரர் டெக்னிக்கல், அக்னி வீரர் அலுவலக உதவியாளர்/ ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல் ஆகிய பிரிவுகளுக்கு இங்கே <
ஆன்மீக சுற்றுலா செல்லும் பக்தர்கள் நாமக்கல்லில் பார்க்க வேண்டிய பிரசித்தி பெற்ற கோயில்கள்.▶️ நாமக்கல் ஆஞ்சநேயர் ▶️ அர்த்தநாரீஸ்வரர் கோயில், (திருச்செங்கோடு)▶️சுவாமி வெங்கடாஜலபதி கோயில் (நைனா மலை) ▶️ அரபாலீஸ்வரர் கோயில் (நாமக்கல்) ▶️ பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயில் (கபிலர்மலை) ▶️ காளிப்பட்டி கந்தசாமி கோயில் (காளிப்பட்டி) ▶️ கொல்லிமலை எட்டுக்கை அம்மன்
தென்காசி, கடையநல்லூர் சவல் விலை 3வது தெருவை சேர்ந்த முருகன்(35) என்பவர் தனது மனைவியை கழுத்தை நெறித்து கொன்றுவிட்டு நீதிமன்றத்தில் சரணடைந்தார். இது குறித்து போலீஸார் தரப்பில் கூறப்பட்டதாவது, முருகன் மனைவி செல்வி யாருடனோ அடிக்கடி போனில் பேசி வந்துள்ளார். அவர் கண்டித்தும் திருமணம் தாண்டிய உறவை மறுத்ததால் முருகன் கொலை செய்ததாக நேற்று(மார்ச் 15) வாக்குமூலம் அளித்ததாக தெரிவித்துள்ளனர்.
கோவை மாநகராட்சியில் ஆறு மாதத்துக்கு ஒரு முறை, சொத்து வரி வசூலிக்கப்படுகிறது. 2024-25 நிதியாண்டில் ரூ.473.77 கோடி வசூலிக்க வேண்டும். நேற்று வரை, ரூ.398.20 கோடி வசூலாகி உள்ளது. இன்னும் ரூ.75.57 கோடி வசூலிக்க வேண்டியிருக்கிறது. இத்தொகையை வசூலிக்க மாநகராட்சியில் இன்று சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. முகாமை பயன்படுத்தி பொதுமக்கள் வரியை செலுத்த, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் அறிவுறுத்தி உள்ளார்.
பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் திட்டம் மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி மற்றும் நான் முதல்வன் பினிஷிங் ஸ்கூல் திட்டத்தின் கீழ் தொழிலக பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு சேர்க்கைக்கு விண்ணப்பிக்க மார்ச்.31 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்புவோர் https://pminternship.mcg.gov.in/ என்ற வலைதளத்தை பயன்படுத்திக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
கரூர், இந்திய ராணுவத்தில் பல்வேறு பிரிவுகளுக்கான அக்னி வீரர்கள் ஆட்சேர்ப்புக்கான பதிவு ஆன்லைனில் நடைபெற்று வருகிறது. இதற்கு கரூர் உள்ளிட்ட 15 மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஏப்.10-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். அக்னி வீரர் ஜெனரல் டியூட்டி, டெக்னிக்கல், அலுவலக உதவியாளர் ஆகிய பிரிவுகளுக்கு ஆன்லைனில்<
தூத்துக்குடி நகர்ப்புற நலவாழ்வு மையங்களில் காலியாக உள்ள மெடிக்கல் ஆபிசர்-7, ஸ்டாஃப் நர்ஸ்-7, ஹெல்த் இன்ஸ்பெட்கடர்-7, சப்போர்ட் ஸ்டாஃப்-7 பணியிடங்கள் தற்காலிகமாக நிரப்பப்பட உள்ளன. இதற்கான விண்ணப்ப படிவம் மற்றும் முழு விவரங்களை <
வேலூரில் முடினாம்பட்டு கிராமத்தில் சிவானி என்ற 13 வயது சிறுமி ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார்.இந்நிலையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.ஆனால் டெங்கு காய்ச்சல் காரணமாக சிறுநீரகம், கணையம் மற்றும் நுரையீரல் போன்ற உடல் உறுப்புகள் செயலிழந்து சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த சம்பவம் வேலூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பிச்சாவரத்தில் இயற்கை எழில் கொஞ்சும் சூழலில் மாங்க்ரோவ் காடுகள் எனும் சதுப்பு நில காடுகள் 1350 ஹெக்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. இது உலகின் 2ஆவது சதுப்பு நிலக் காடுகள் என்ற பெருமைக்கும் உரியதாகும். வனத்துறை சார்பில் படகுகளும் இங்கு இயக்கப்படுகின்றன. ஒருமுறை இங்கு சென்று விசிட் அடியுங்கள்..அந்த அனுபவமே அலாதியானது. இயற்கை விரும்பிகளுக்கு SHARE பண்ணுங்க..
தேனி பழைய பஸ் ஸ்டாண்ட் ராஜவாய்க்கால் பகுதியில் ரூ.2.26 கோடி மதிப்பில் துார்வாரும் பணியை நகராட்சி துவங்கி உள்ளது. இந்த வாய்க்காலில் 5 இடங்களில் தரைப்பாலம் அமைக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘பஸ் ஸ்டாண்ட் பகுதியில் 95 மீ., நீளம், 9 மீ., அகலம், 3 மீ., ஆழத்திற்கு துார்வாரும் பணிகள் நடக்க உள்ளது. மொத்தம் ஐந்து இடத்தில் தரைப்பாலமும் புதிதாக அமைக்கப்பட உள்ளது.
Sorry, no posts matched your criteria.