Tamilnadu

News March 16, 2025

தூய்மை பணியாளர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய த.வெ.க மா.செ

image

கள்ளக்குறிச்சி மேற்கு மாவட்ட தமிழக வெற்றி கழக மாவட்ட செயலாளர் பிரகாஷ் பிறந்த நாளை முன்னிட்டு கள்ளக்குறிச்சி நகர இளைஞரணி சேர்ந்த மோகன் தலைமையில் தூய்மை பணியாளர்களுக்கு சால்வை‌ அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு மதிய உணவு வழங்கிய தமிழக வெற்றி கழக மாவட்ட செயலாளர் பிரகாஷ் இந்த தமிழக வெற்றி கழகத்தைச் கவரை தெரு வார்டு எண் 18 தமிழக வெற்றி கழக கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

News March 16, 2025

புதிய மகளிா் காங்கிரஸ் தலைவிக்கு வாழ்த்து

image

புதுச்சோி மாநில புதிய மகளிா் காங்கிரஸ் தலைவியாக இன்று பொறுப்பு ஏற்று இருக்கும் நிஷாவை, முன்னாள் அமைச்சா் R.கமலக்கண்ணன் புதுச்சேரி தலைமை அலுவலகத்தில் இன்று சந்தித்து பணி சிறக்க தனது வாழ்த்துக்களை தொிவித்தாா்.

News March 16, 2025

வேலூர் நியாய விலை கடை பணியாளர்களுக்கு நாளை பயிற்சி

image

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  உள்ள காயிதே மில்லத் கூட்டரங்கில் நாளை (மார்ச் 16)   காலை 11 மணியளவில் வேலூர் மாவட்ட கூட்டுறவுத்துறை சார்பில்  நியாய விலை கடையில் பணியாற்றும் விற்பனை  பணியாளர்களுக்கு புத்தாக்க பயிற்சியை வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி தொடங்கி வைக்க உள்ளார். என மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 16, 2025

ரோந்து பணி காவலர்கள் விவரங்கள் வெளியீடு

image

தி.மலை திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையின் சார்பாக இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவல்துறை அதிகாரிகள் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது வெளியிடப்பட்டுள்ளது. அடிப்படையில் தங்களுடைய பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக செயல்படக்கூடிய நபர்கள் இருந்தாலோ அல்லது பாதுகாப்பின்மை பிரச்சனையை ஏற்பட்டாலோ அவர்களுடைய தொலைபேசி எண்கள் (அ) 100 என்ற எண்ணை அழைத்து புகார்களை பதிவு செய்யலாம்.

News March 16, 2025

ராணிப்பேட்டை மாவட்ட ரோந்து பணி காவலர்களின் விவரம் 

image

இராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (மார்ச் 15) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. இராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்கள் தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் 9884098100.

News March 15, 2025

நாமக்கல்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அதிகாரிகள் இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று (15/03/2025) இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்: நாமக்கல் – யுவராஜன் (9498177803), ராசிபுரம் – கோமலவள்ளி (8610270472), திருச்செங்கோடு – மகாலட்சுமி (7708049200) ,வேலூர் – சீனிவாசன் (9498176551) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.

News March 15, 2025

வேளாண் நிதிநிலை அறிக்கைக்கு கனிமொழி எம்.பி நன்றி

image

2025ஆம்‌ ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்த அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் -க்கு கனிமொழி எம்.பி இன்று (மார்ச்.15) நன்றி தெரிவித்துள்ளார். “வேளாண்துறையை மேம்படுத்தவும், இளைஞர்களை விவசாயத்தில் ஈடுபட ஊக்குவிக்கவும், மானியங்களின் வழியாக விவசாயிகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலும் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ததற்கு நன்றி மற்றும் வாழ்த்துகளைத் தெரிவித்து” செய்தி வெளியிட்டுள்ளார்.

News March 15, 2025

திண்டுக்கல்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம் 

image

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று 15.03.2025 இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிடப்பட்டது. மேலும் திண்டுக்கல் ஊரகம், திண்டுக்கல் நகரம், வேடசந்தூர், ஒட்டன்சத்திரம், பழனி, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் இன்று இரவு நேராந்து பணியை நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

News March 15, 2025

புதுச்சேரியில் காங். கட்சி முப்பெரும் விழா

image

புதுவையில் மகளிர் காங் தலைவியாக நிஷா பதவி ஏற்பு, மகளிர் தின விழா, பெண்களுக்கு 33% இட ஒதுக்கீட்டை உடனடியாக அமுல் அமல்படுத்த என முப்பெரும் விழா இன்று கம்பன் கலையரங்கத்தில் நடைபெற்றது. இதில் அகில இந்திய மகளிர் தலைவி அல்கா லம்பா, வைத்திலிங்கம்.M.P, பொதுச்செயலாளர் கிரிஷ் சோடங்கர், கட்சி செயலாளர் ஹேக்டே மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

News March 15, 2025

தக்காளி விலை வீழ்ச்சி கிலோ 7-க்கு விற்பனை

image

முக்கண்ணாமலைப்பட்டி வார சந்தையில் தக்காளி கிலோ 
ரூ 7-க்கும் 3-கிலோ ரூ.20க்கும் விற்பனையானது கடந்த சில மாதங்களாக தக்காளி கிலோ 40 வரை விற்பனையானது தற்போது வீழ்ச்சி அடைந்துள்ளது.
மேலும் நாட்டு கத்திரிக்காய்-60 வெண்டைக்காய்-30, பீர்க்கங்காய்-40, புடலங்காய்-30, மிளகாய்-30, முள்ளங்கி-20, சவ்சவ்-20, முட்டைகோஸ்-20, கோவக்காய்-30, பீட்ரூட்-30, கேரட்-40, உருளைக்கிழங்கு-40, பாவற்காய்-40, விற்பனையானது

error: Content is protected !!