Tamilnadu

News March 15, 2025

தேனி மாவட்ட மலைவாழ் விவசாயிகளுக்கு சிறப்பு அறிவிப்பு.

image

இன்றைய வேளாண் பட்ஜெட்டில் தமிழ்நாட்டில் உள்ள 20 மாவட்டங்களில் உள்ள மலைவாழ் விவசாயிகள் நலனைக் காக்க மலைவாழ் உழவர் நலத் திட்டம் தேனி உட்பட 20 மாவட்டங்களில் 22 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ,தேனி உட்பட 20 மாவட்டங்களில் வசிக்கக்கூடிய மலைவாழ் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News March 15, 2025

தவெக செயலாளர் மாரடைப்பால் உயிரிழப்பு

image

நெல்லை கிழக்கு மாவட்ட தமிழக வெற்றி கழக செயலாளராக இருந்து வந்தவர் சஜி. இவர் இன்று சென்னையில் நடைபெறும் தமிழக வெற்றி கழகத்தின் பொது குழுவில் பங்கேற்க சென்றிருந்தபோது மாரடைப்பினால் உயிரிழந்தார். பொறுப்பேற்று மூன்று மாதம் ஆவதற்குள் அவர் உயிரிழந்தது அவரது கட்சியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

News March 15, 2025

சிவகங்கைக்கு வேளாண் பட்ஜெட் அறிவிப்புகள்

image

சுவைதாளிதப் பயிர்களின் சாகுபடியை ஊக்குவிக்கவும், இராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களில் 2,500 ஏக்கரில் சீமைக்கருவேல மரங்களை அகற்றி மிளகாய் சாகுபடியை மேற்கொள்ளவும் ரூ.11.74கோடி ஓதுக்கிடு செய்யப்பட்டுள்ளது.இது குறித்து உங்க கருத்துகளை கீழே பதிவிடுங்கள் .

News March 15, 2025

TN BUDGET – விருதுநகருக்கான அறிவிப்பு

image

▶️விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் சீமைகருவேல மரங்களை அகற்றி மிளகாய் சாகுபடி செய்ய ரூ.11.74 கோடி ஒதுக்கீடு.
▶️மழைவாழ் உழவர் முன்னேற்ற திட்டத்திற்காக ரூ.22.80 கோடி ஒதுக்கீடு.
▶️வத்திராப், ஸ்ரீவியில் ரூ.50.79 கோடி மதிப்பில் பரிவர்த்தை கூடம், சேமிப்பு கிடங்குகள்.
▶️ நீர்வடி மேம்ப்பாட்டு திட்டத்திற்காக ரூ.286.79 கோடி.
▶️தூர்வார, தோட்டக்கலை பயிர்கள், பண்ணைக்காடுகள் அமைக்க ரூ.68 கோடி ஒதுக்கீடு.

News March 15, 2025

வேளாண் பட்ஜெடில் வெளியான முக்கிய அறிவிப்பு

image

தமிழக சட்டமன்றத்தில் இன்று (மார்ச் 15) வேளாண்துறை பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இதில் அரியலூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் முந்திரி சார்ந்த தொழில் மற்றும் தொழிலாளர்களின் நலனைப் பாதுகாக்க, தமிழ்நாடு முந்திரி வாரியம் ரூ.10 கோடியில் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்ட மக்களே SHARE பண்ணுங்க…

News March 15, 2025

காஞ்சிபுரம்: வேலையில்லா பட்டதாரிகள் கவனத்திற்கு

image

காஞ்சிபுரம், ஏனாத்தூர் அமைந்துள்ள சங்கர பல்கலைக்கழகத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற மார்ச் 15 சனிக்கிழமை நடைபெறுகிறது. இம்முகாமில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் நேர்காணல் நடத்த உள்ளனர். வேலை வாய்ப்பு பெற விரும்புவோர் முகாமில் கலந்து கொண்டு பயன் பெறலாம். முகாம் காலை 8.30 மணிக்கு தொடங்கி மதியம் 3 மணி வரை நடைபெறும்.

News March 15, 2025

குத்துவிளக்கு ஏற்றி மாவட்ட ஆட்சியர் உரையாற்றினார்

image

கள்ளக்குறிச்சி மாவட்டம், இந்திலி தனியார் கல்லூரியில் மாவட்ட தொழில் மையம் சார்பில் வேளாண் சார்ந்த தொழில்களின் மூலம் உற்பத்தி செய்த பொருட்களை சந்தைப்படுத்துவதற்கான திறன் மேம்படுத்துதல் கருத்தரங்கத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த் நேற்று குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து உரையாற்றினார். இதில் அரசு அதிகாரிகள், துறை சார்ந்து அலுவலர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

News March 15, 2025

கருங்கல் வைத்து கொடூர கொலை?

image

பவானியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு காவிரி கரையோரப் பகுதியில் உடல் முழுவதும் கருங்கல்லை கட்டிய நிலையில் சடலம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவயிடத்திற்கு சென்ற போலீாசர், இதுகுறித்து விசாரணை செய்ததில் இறந்தவர் மதியழகன் தொட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. மேலும், விசாரணை செய்து வருகின்றனர்.

News March 15, 2025

நாமக்கல்: பெண் குழந்தைகளுக்கு கை கொடுக்கும் திட்டம்

image

நாமக்கல், அஞ்சல் அலுவலகளில் செல்வமகள் சேமிப்பு திட்டம்’ செயல்படுத்தபட்டு வருகிறது. இத்திட்டத்தில் குறைந்தபட்ச தொகையாக ரூ.250 முதல் 1.50 லட்சம் வரை டெபாசிட் செய்ய முடியும். உங்களிடம் பணம் இருக்கும் போது டெபாசிட் செய்யலாம். இதற்கு 8% வட்டி வழங்கப்படுகிறது . இது உங்களின் பெண் குழந்தைகளின் கல்வி, திருமனம் போன்றவைகளுக்கு பயனுள்ளதாக அமையும். இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.

News March 15, 2025

TN BUDGET: திண்டுக்கல்லுக்கு முக்கிய அறிவிப்பு

image

▶️ நத்தம்-புளி, ஆயக்குடி-கொய்யா, கப்பல்பட்டி கரும்பு முருங்கைக்கு புவிசார் குறியீடுகள் பெற நடவடிக்கை.
▶️ திண்டுக்கல்லில் மல்லிகை சாகுபடியை அதிகரிக்க ரூ.1.6 கோடி.
▶️ ரோஜா மலர் சாகுபடியை ஊக்குவிக்க ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு.
▶️ வெண்ணைப்பழ சாகுபடி ஊக்குவிக்க ரூ.69 லட்சம்.

error: Content is protected !!