India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மப்பேடு சமத்துவபுரம் பகுதியில், கார் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. தொழிற்சாலையில் பணி முடித்த திருத்தணி ஊழியர்கள் தொழிற்சாலை பேருந்தில், சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலை வழியாக திருத்தணி நோக்கி சென்று கொண்டிருந்தனர். கனகம்மாசத்திரம் அடுத்த ஆற்காடுகுப்பம் அருகே சென்றபோது, லாரி பேருந்து மீது மோதியது. இதில் 12 தொழிலாளர்கள் காயமடைந்தனர். லாரி டிரைவர் படுகாயம் அடைந்தார்.
இந்தியத் தோ்தல் ஆணையத்தின் தலைமை தோ்தல் ஆணையராக ஞானேஷ்குமாா் பொறுப்பேற்றுள்ளாா். இவரது தலைமையில் மாநில தலைமைத் தோ்தல் அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் அண்மையில் புது தில்லியில் நடைபெற்றது. அதில் பங்கேற்ற தோ்தல் அலுவலா்களிடம் தீா்க்கப்படாத பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் கருத்துருக்களையும், ஆலோசனைகளையும் வரும் ஏப்.30ஆம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என காஞ்சிபுரம் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
குமரி அரசு மருத்துவக் கல்லூரியில் 2024ஆம் ஆண்டு 443 பேருக்கு கண் நீர் அழுத்த நோய் கண்டறியப்பட்டு 392 பேருக்கு மருந்துகள் வழங்கப்பட்டு, 22 நோயாளிகளுக்கு லேசர் சிகிச்சையும், 30 பேருக்கு அறுவை சிகிச்சையும் வழங்கப்பட்டுள்ளது. குமரி அரசு மருத்துவமனையில் அனைத்து வசதிகளும் உள்ளன. 40 வயதிற்கு மேற்பட்டோர் கண் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என ஆட்சியர் அழகு மீனா நேற்று(மார்ச் 14) தெரிவித்துள்ளார். SHARE IT.
தூத்துக்குடி தமிழக தமிழக வெற்றிக் கழக மாவட்ட பொறுப்பாளர் சஜி இன்று(மார்ச் 15) உயிரிழந்துள்ளார். அவர் மாரடைப்பால் இறந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் அறிவிப்பு கூட்டத்தின்போது அக்கட்சியின் தலைவர் விஜய்யிடம், சஜி நெருக்கமாக பேசிக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
வேளாண் நிதிநிலையை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். அதில் மதுரைக்கு வரும் சிறப்பு திட்டங்கள் பின்வருமாறு:
▶️மதுரை,தூத்துக்குடியில் உயிர்ம வேளாண் விளைபொருட்களுக்கு தர நிர்ணய ஆய்வகம்
▶️ரூ.20 கோடியில் உசிலம்பட்டி 100 மெக்ரிட் டன் சேமிபு கிடங்கு
▶️மதுரை மல்லிக்கான சிறப்பு திட்டத்தின் கீழ் 3000 ஆயிரம் ஏக்கரில் மல்லி பயிர் செய்ய ஊக்குவிக்கப்படும்
2025-26 ஆம் நிதி ஆண்டுக்கான தமிழக வேளாண் பட்ஜெட்டை, சட்டப்பேரவையில் உழவர் நலன் மற்றும் வேளாண்மை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று (மார்ச்.15) காலை 9.30 மணியளவில் தாக்கல் செய்தார். திருநெல்வேலி உள்ளிட்ட 20 மாவட்டங்களில் மழைவாழ் உழவர் முன்னேற்ற திட்டத்திற்காக ரூ.22.80 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பயணாளிகளுக்கு உழவர் கடன் அட்டை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவையில் இருந்து அரியானா மாநிலம், ஹிசார் ரயில் நிலையத்திற்கு இருமார்க்கத்திலும் இயக்கப்படும் வாராந்திர ரயில்கள் (22475/ 22476) இன்று (மார்ச் 15) முதல் சோதனை முயற்சியாக கர்நாடகாவின் கும்டா ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. இதனை பயணிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு வேண்டுகோள்.
அவினாசியை அடுத்த துலுக்கமுத்தூர் ஊராட்சி ஊஞ்சப்பாளையம் பெரிய தோட்டத்தை சேர்ந்தவர் பழனிசாமி(85).விவசாயி. இவரது மனைவி பர்வதம் (75). இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர்.கொலை தொடர்பாக அவினாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இவ் வழக்கில் உறவினரான ரமேஷ் என்பவரை தகாத வார்த்தைகளால் திட்டியதால் கொலை செய்ததாக தெரிவித்தார்.
▶️ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் ரூ.11.74 கோடியில் சீமைகருவேல மரங்களை அகற்றி மிளகாய் சாகுபடி செய்ய ஊக்கு விக்கப்படும்.
▶️ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் நீர்வடி மேம்ப்பாட்டு திட்டத்திற்காக ரூ.286.79 கோடி ஒதுக்கீடு.
▶️ரூ.68 கோடியில் ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்கள்ல் நீர்வழிப்பகுதிகளை தூர்வார, தோட்டக்கலை பயிர்கள், பண்ணைக்காடுகள் அமைக்கப்படும்.
சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் நேற்று விடுத்த செய்தி குறிப்பில் வடகோவை ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக மார்ச்.16ல் ஆலப்புழை – தன்பாத் விரைவு ரயில், எர்ணாகுளம் – பெங்களூரு விரைவு ரயில் ஆகியவை போத்தனூா்- இருகூா் வழித்தடத்தில் இயக்கப்படும். இந்த ரயில்கள் கோவை ரயில் நிலையம் செல்வது தவிா்க்கப்படும். போத்தனூா் தற்காலிக நிலையமாக செயல்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.