Tamilnadu

News March 14, 2025

குமரி விவசாயிகள் குறைத்தீர் கூட்டம் அறிவிப்பு

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இம்மாதம் 20ம் தேதி முற்பகல் 10:30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் வைத்து நடைபெறுகிறது. தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்க விரும்பும் விவசாயிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் இன்று தெரிவித்துள்ளார். *விவசாயிகளுக்கு பகிர்ந்து தெரியப்படுத்தவும்*

News March 14, 2025

மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம்

image

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜத் சதுர்வேதி தலைமையில் இன்று மாதாந்திர குற்ற கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் குற்ற வழக்குகளை குறைப்பது குறித்தும், கோப்பு எடுக்காத வழக்குகள் குறித்தும், உடனடியாக முடிக்க வேண்டிய வழக்குகள் குறித்தும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கேட்டறிந்தார்.

News March 14, 2025

நாகையில் மாபெரும் சிறப்பு தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்

image

நாகப்பட்டினம் ஏ.டி.எம்.மகளிர் கல்லூரியில் நாளை (15.03.2025) காலை 9.00 மணியளவில் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் மற்றும் மகளிர் திட்டம் இணைந்து நடத்தும் மாபெரும் சிறப்பு தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து, காலை 11.00 மணியளவில் வேலைவாய்ப்பு முகாமில் தேர்வான நபர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட உள்ளது. என ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News March 14, 2025

காவல்துறை சார்பாக இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்

image

கிருஷ்ணகிரி மாவட்ட காவல் துறை சார்பில் இன்று 14.03.2025 இரவு 10 மணி முதல் காலை 6 மணிவரை ரோந்து பணியில் கிருஷ்ணகிரி காவல் துணை கண்காணிப்பாளர் முரளி தலைமையில் ஊத்தங்கரை, பர்கூர், கிருஷ்ணகிரி, ஓசூர்,தேன்கனிக்கோட்டை ஆகிய இடங்களில் இரவு ரோந்து பணியில் இடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி மற்றும் காவல் கட்டுபாட்டு அறை-04343230100 எண் அவசர உதவி எண் 100 காவல்துறை சார்பாக வெளியிட்டனர்.

News March 14, 2025

போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு வழங்கிய ஆட்சியர்

image

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறுதானிய விழாவினை முன்னிட்டு மாவட்ட அளவில் நடைபெற்ற சமையல் போட்டி மற்றும் வினாடி வினா போட்டியில் வெற்றிபெற்றவர்களை பாராட்டி மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் இன்று (14.03.2025) பரிசுகளை வழங்கினார். அப்போது பல்வேறு துறைகளின் அதிகாரிகள் மற்றும் போட்டியில் பங்கு பெற்றவர்கள் உடன் இருந்தனர்.

News March 14, 2025

மதுரை மாநகராட்சிக்கு 5 கோடி :புதிய அறிவிப்பு  

image

மதுரை மாநகராட்சி உட்பட தமிழகம்  முழுவதும் இருக்கக்கூடிய 30 மாநகராட்சி பகுதிகளில் 5 கோடி ரூபாய் மதிப்பில் புதிய  நூலகம் அமைக்கப்படும் என தமிழக சட்டப்பேரவை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.ஏற்கனவே கலைஞர் நூற்றாண்டு நூலகம் உள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு நூலகம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது .

News March 14, 2025

குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம்

image

தருமபுரி மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையின் சார்பில் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம் வருகின்ற 17.03.2025 முதல் 22.03.2025 வரை நடைபெற உள்ளது. பொது மக்கள் இந்த அரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தங்கள் குழந்தைகளுக்கு வைட்டமின்-ஏ திரவம் கொடுத்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என ஆட்சியர் சதிஷ் தெரிவித்துள்ளார்.

News March 14, 2025

இன்ஸ்டாவின் ஃபேக் ஐடி ஆசாமி ; ஸ்கெட்ச் போட்டு பிடித்த இளம்பெண்

image

திண்டுக்கல்: இன்ஸ்டாகிராமில் ஃபேக் ஐடி மூலம் இளம்பெண்ணிடம் தோழி போல் பழகிய நபர் ஆபாச படத்தை அப்பெண்ணிற்கு அனுப்பியுள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பெண் ஆபாச படம் அனுப்பிய நபரிடம் ’நேரில் பேச வேண்டும் வாருங்கள்’ என அந்த நபரை ஆசை வார்த்தை காட்டி அழைத்துள்ளார். நேரில் சந்திக்க வந்த அந்த நபரை உறவினர்களுடன் சென்று மடக்கிப் பிடித்த அப்பெண் நடு ரோட்டிலேயே வைத்து தர்ம அடி கொடுத்துள்ளார்.

News March 14, 2025

தேனியில் ஓபிஸ் செல்லும் கோவில்கள்

image

தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். இவர் சில
முக்கிய முடிவுகளை எடுக்க தேனி மாவட்டத்தில் இருக்கும் வீரபாண்டி கெளமாரியம்மன் கோயில், உத்தமபாளையம் காளத்தீஸ்வரர் கோயில், பெரியகுளம் பாலசுப்பிரமணியசுவாமி கோயில், கைலாசபட்டி கைலாசநாதர் கோயில் உள்ளிட்ட கோவில்களுக்கு சென்று வழிபடுவார்.

News March 14, 2025

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

திருவள்ளூர் மாவட்ட அனைத்து ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட கிராம ஊராட்சிகளில் 2024-25 ஆம் ஆண்டிற்கான சொத்துவரி, தொழில்வரி, குடிநீர் கட்டணம் மற்றும் உரிமக் கட்டணம் ஆகியன வசூலிக்கும் பொருட்டு நாளை மற்றும் நாளை மறுநாள் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. கிராம மக்கள் அனைவரும் இந்த சிறப்பு முகாமினை பயன்படுத்தி வரியினங்களை செலுத்தி ஊராட்சியின் வளர்ச்சிக்கு துணை புரியுமாறு ஆட்சியர் பிரதாப் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!