India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், மாவட்ட அளவிலான வன்கொடுமை சட்டம் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழுக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் மு.அருணா தலைமையில் நேற்று நடைபெற்றது. பின்னர் ஆட்சியர் தெரிவித்ததாவது, தமிழக அரசு ஏழை, எளிய பொதுமக்களின் வாழ்க்கைத் தரம் மற்றும் பாதுகாப்பினை உறுதி செய்திடும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று 14.03.2025 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை, தேன்கனிகோட்டை மற்றும் ஓசூர் ஆகிய சுற்றுவட்டார பகுதிகளுக்கான இரவு நேர ரோந்து பணி செய்யும் அதிகாரியின் பெயர் மற்றும் அவர்களுடைய தொலைபேசி எண்ணும் காவல்துறை சார்பாக வெளியிடப்பட்டுள்ளது.
விழுப்புரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் இன்று செய்தியாளர்களை சந்திக்கையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தரப்பு மக்களிடமும் வரவேற்பை பெற்று இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக அவர் தெரிவித்தார்.
சேலம் ஸ்ரீ கணேஷ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 20-வது ஆண்டு விழா இன்று (மார்ச் 14) கல்லூரியின் தாளாளர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினர்களாக திரைப்பட நடிகர்கள் நரேந்திர பிரசாத் மற்றும் அதிர்ச்சி அருண் ஆகியோர் கலந்து கொண்டனர். மாணவ, மாணவிகளின் தனி நடனம், குழு நடனம், பரதநாட்டியம், குறுநாடகம் போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
சேலம் மாநகர பகுதிகளில் இரவு நேரங்களில் குற்ற சம்பவங்கள் நிகழாத வண்ணம், பொதுமக்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், மாநகர காவல் துறை தொடர்ந்து பணியில் ஈடுபடுகின்றனர். அந்த வகையில் இன்று (மார்ச் 14) மாநகரப் பகுதி முழுவதும் ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகளின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் இயங்கி வரும் நிரந்தர மக்கள் நீதிமன்றத்திற்கு உறுப்பினர் சேர்க்கை தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே, விண்ணப்பதாரர்கள் விழுப்புரம் மாவட்ட நீதிமன்ற இணையதளமான https://viluppuram.dcourts.gov.in/ ஐ அணுகி உறுப்பினர் சேர்க்கைக்கான தகுதி, அனுபவம், மதிப்பூதியம் மற்றும் விண்ணப்பத்திற்கான கடைசி தேதி தொடர்பான அனைத்து விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.
இன்று (மார்ச்.14) இரவு 11 மணி முதல் நாளை காலை 6 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப் பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையில் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு கூட்டு குடிநீர் திட்டத்திற்காக 1820 கோடி நிதி ஒதுக்கியதற்கு நன்றி தெரிவித்து, மாநகராட்சி மேயர் திலகவதி செந்தில், துணை மேயர் லியாகத் அலி மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி முன்பாக பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
நாமக்கல் மாவட்டத்தில் தினம்தோறும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் விவரம் வெளியிடப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்று (14.03.2025) நாமக்கல் -சாந்தகுமார் (94 981 6 7 680), ராசிபுரம் அம்பிகா (9498106528), திருச்செங்கோடு வெங்கட்ராமன் (9498172040), மற்றும் வேலூர் சபிதா (9442215201) ஆகியோர் இரவு வந்து பணியில் ஈடுபடுகின்றனர்.
திண்டுக்கல்லில் இன்று 14-03-2025 இரவு 11.00 மணி முதல் நாளை சனிக்கிழமை காலை 6.00 மணி வரை காவல் துறையினர் நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல், வேடசந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.