India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விருதுநகர் மாவட்டத்தில் 51,681 பயனாளிகள் பிரதம மந்திரியின் விவசாயிகள் கௌரவ நிதித் தொகையினை பெற்று வருகின்றனர். ஆனால் 22,258 விவசாயிகள் மட்டுமே தனித்துவ அடையாள எண் பெற பதிவு செய்துள்ளனர். விவசாயிகள் இ-சேவை மையங்களில் தங்களின் நில உடமைகளை இலவசமாக பதிவு செய்யலாம். மீதமுள்ள 29,423 விவசாயிகள் மார்ச்.31க்குள் நில உடமைகளை பதிவு செய்து அடையாள எண் பெற்று பயனடைய வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், சங்ககிரி, ஓமலூர், மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுக்கவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொதுமக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள் இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (மார்ச் 14) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
தூத்துக்குடி தாளமுத்துநகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. டவுன் ஏ எஸ் பி மதன் உத்தரவின்படி அங்கு சென்ற தனிப்படை போலீசார் காமராஜ்நகர் பகுதியைச் சேர்ந்த செல்வேந்திரன் என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 3 கிலோ 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (மார்ச்.14) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்துப் பணிகளில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு 0461-2340393 என்ற தொலைபேசி எண்ணில் அழைக்கலாம். மேலும் 100 அல்லது தூத்துக்குடி மாவட்ட ஹலோ போலீஸ் 9514144100 எண்ணையும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இரவு நேரங்களில் காவல்துறை உதவி தேவைப்பட்டால் பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. இன்று 14.03.2025 தென்காசி மாவட்ட காவல் மற்றும் நெடுஞ்சாலை இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகள் பற்றிய விவரம். அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100 அல்லது மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்-9884042100 ஐ தொடர்புகொள்ளலாம்.
நெல்லை மாவட்டத்தில் இரவு ரோந்து பணியில் டிஎஸ்பி ரகுபதிராஜா தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் திருநெல்வேலி ஊரகத்திற்கு சந்திரசேகர், நாங்குநேரி பிரேமா ஸ்டாலின், வள்ளியூர் சுடலைமுத்து, சேரன்மகாதேவி ஜெயசீலன், அம்பாசமுத்திரம் ரமேஷ் கண்ணா ஆகியோர் இன்று (14ம் தேதி) ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். நெல்லை மாவட்ட எஸ்பி அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், மாவட்ட அளவிலான வன்கொடுமை சட்டம் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழுக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் மு.அருணா தலைமையில் நேற்று நடைபெற்றது. பின்னர் ஆட்சியர் தெரிவித்ததாவது, தமிழக அரசு ஏழை, எளிய பொதுமக்களின் வாழ்க்கைத் தரம் மற்றும் பாதுகாப்பினை உறுதி செய்திடும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று 14.03.2025 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை, தேன்கனிகோட்டை மற்றும் ஓசூர் ஆகிய சுற்றுவட்டார பகுதிகளுக்கான இரவு நேர ரோந்து பணி செய்யும் அதிகாரியின் பெயர் மற்றும் அவர்களுடைய தொலைபேசி எண்ணும் காவல்துறை சார்பாக வெளியிடப்பட்டுள்ளது.
விழுப்புரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் இன்று செய்தியாளர்களை சந்திக்கையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தரப்பு மக்களிடமும் வரவேற்பை பெற்று இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக அவர் தெரிவித்தார்.
சேலம் ஸ்ரீ கணேஷ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 20-வது ஆண்டு விழா இன்று (மார்ச் 14) கல்லூரியின் தாளாளர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினர்களாக திரைப்பட நடிகர்கள் நரேந்திர பிரசாத் மற்றும் அதிர்ச்சி அருண் ஆகியோர் கலந்து கொண்டனர். மாணவ, மாணவிகளின் தனி நடனம், குழு நடனம், பரதநாட்டியம், குறுநாடகம் போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
Sorry, no posts matched your criteria.