Tamilnadu

News March 14, 2025

மஞ்சள் கார்டுக்கும் உதவித் தொகை வழங்கப்படும்

image

மஞ்சள் அட்டை (ரேஷன் கார்டு) வைத்திருப்பவர் எல்லாம் வசதி படைத்தவர் அல்ல. எனவே மகளிர் உதவித்தொகை வழங்கும் போது மஞ்சள் அட்டை வைத்திருந்தாலும் வருவாய் சான்றிதழ் கொடுத்தால் அதை பரிசீலிக்க வேண்டும், என சட்டமன்றத்தில் எம்எல்ஏ நாஜிம் கோரிக்கை வைத்தார். அதை ஏற்று வருவாய் சான்றிதழ் கொடுத்தால் அவர்களுக்கும் உதவித் தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

News March 14, 2025

நெல்லையில் திருமண தடைகள் விலகும் ஆலயம்

image

நெல்லையிலிருந்து 15 கி.மீ தொலைவில் கைலாசநாதர் கோயில் அமைந்துள்ளது. ஒன்பது நவ கைலாய தலங்களில் குரு தலம். கையில் பணம் தங்குவதில்லை என வருந்துபவர்களும், வீட்டில் சுப காரியங்கள் நடப்பதில்லை என வருந்துபவர்களும் சென்று வணங்க வேண்டிய கோவில் இது தான். இது வியாழனுக்குரிய பரிகார தலம் என்பதால், திருமண தடை உள்ளவர்கள் இக்கோவிலில் சென்று வணங்கினால், சுப காரிய தடைகள் விலகுவதாக ஐதீகம். *ஷேர் பண்ணுங்க*

News March 14, 2025

வெற்றி நாயகனான கூலித் தொழிலாளியின் மகன்

image

சேலம்: வெள்ளாளப்பட்டியைச் சேர்ந்த மோ.அஜித். இவர் சிறுவயதிலேயே தந்தையை இழந்தவர்.தாயும் கூலித் தொழிலாளி. இத்தனை கடின சூழ்நிலைகளையும் கடந்து,அரசு பணி தேர்வுக்கு தன்னம்பிக்கையுடன் படித்து தற்போது வெற்றி பெற்றுள்ளார். இப்பொழுது இளநிலை வருவாய் ஆய்வாளராக குறிஞ்சிப்பாடி, கடலூரில் பணியமர்த்தப்பட்ட சான்றிதழை கடலூர் மாவட்ட ஆட்சியர் திரு.சிபி ஆதித்யா செந்தில்குமார் அவர்களிடம் பெற்றார். இவரை வாழ்த்தலாமே…!? 

News March 14, 2025

சேலம் ; கல்லூரி பஸ் மோதியதில் சிறுவன் பலி 

image

சேலம் : வீரகனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லதுரையின் மகன் கிருபாகரன்( 10) அரசு தொடக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தார்.  இன்று(மார்ச் 14) காலை கிருபாகரன் பள்ளிக்குச் சென்றபோது தனியார் கல்லூரி பேருந்து கிருபாகரன் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதனால் கி பலத்த காயம் அடைந்த கிருபாகரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வீரகனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

News March 14, 2025

நாகையில் ஆழ்கடல் அகழாய்வு பணிகள்

image

தென்கிழக்கு ஆசியா, மத்திய தரைக்கடல், பழந்தமிழர் மேற்கொண்டிருந்த கடல்வழி வணிகச் சிறப்பினை வெளிக்கொணரும் வகையில்,ஆழ்கடல் அகழாய்வுகளை கடற்கரைப் பகுதிகளில் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, தொல்லியல் அறிஞர்களின்
ஆலோசனையுடனும், முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் துணையோடும், காவிரிப்பூம்பட்டினம் முதல் நாகப்பட்டினம் வரை விரிவான ஆழ்கடல் அகழாய்வு மேற்கொள்ளப்படும். Share பண்ணுங்க

News March 14, 2025

தேனி உட்பட 10 மாவட்டங்களில் தோழி மகளிர் விடுதி

image

பெண்கள் நகரங்களில் தங்கி பணி புரிவதற்காக அரசு சார்பில் அமைக்கப்படும் விடுதிகள் தான் தோழி மகளிர் விடுதி. தனியார் விடுதிகளை விட மிகக் குறைந்த கட்டணம் , சிசிடிவி கேமரா , வை-பை , குடிநீர் , கழிப்பறை மற்றும் 24 மணி நேர கண்காணிப்பு ஆகிய வசதிகளுடன் இந்த அரசு விடுதி செயல்படும். இன்றைய பட்ஜெட்டில் தேனி உட்பட 10 மாவட்டங்களில் புதிய தோழி மகளிர் விடுதிகள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News March 14, 2025

புதுச்சேரி கடலில் மூழ்கி சிறுவன் பலி

image

புதுச்சேரியில் மாசி மகத்தை முன்னிட்டு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில் கிருமாம் பாக்கத்தை அடுத்த பனித்திட்டு கடற்கரையில் குளிக்கச் சென்ற சபரீஸ்வரன் (13) எனும் சிறுவன் கடலில் மூழ்கி மாயமடைந்தார். இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு துறையினர் அப்பகுதியை சேர்ந்த மீனவர்களின் உதவியுடன் தேடினர். நீண்ட நேரம் தேடுதலுக்கு பிறகு சிறுவன் உடல் சடலமாக மீட்கப்பட்டது.

News March 14, 2025

ஈரோட்டில் முதல்வர் படைப்பகம்

image

தமிழக பட்ஜெட்டில் இன்று ஈரோடு மாவட்டத்திற்கு பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி ஈரோடு மாநகராட்சியில் புதிதாக தொழில் தொடங்குவோர் மாற்றும் தொழில் முனைவோர்கள் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் ரூ.5 கோடி மதிப்பில் முதல்வர் படைப்பகம் அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

News March 14, 2025

அசுர வேகத்தில் வளரும் ஓசூர்

image

ஓசூரில் டைடல் பூங்கா அமைக்கப்படும் என தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, விமான நிலையம் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் அருகிலுள்ள பெங்களூருவுக்கு இணையான வளர்ச்சியை உருவாக்கும் தொலைநோக்கு பார்வையுடன் டைடல் உயர் தொழில்நுட்ப பூங்காவை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பல சர்வதேச நிறுவனங்களை ஈர்க்கும் மையமாக மாறும் என தொழில் வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

News March 14, 2025

கோடைகால சிறப்பு ரயில்- தெற்கு ரயில்வே அறிவிப்பு

image

பயணிகளின் வசதிக்காக வரும் ஏப்ரல் 4 முதல் 27ஆம் தேதி வரை வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தாம்பரம், திருச்சி இடையே கடலூர் வழியாக சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. திருச்சியில் விடியற்காலை 5.30 மணிக்கு புறப்பட்டு தஞ்சாவூர், மயிலாடுதுறை, கடலூர், செங்கல்பட்டு வழியாக 12:30 மணிக்கு தாம்பரத்தை அடையும். மறுமார்க்கமாக தாம்பரத்தில் 3:45 மணிக்கு புறப்பட்டு இரவு 10:40க்கு திருச்சி வந்தடையும். Share பண்ணுங்க

error: Content is protected !!