India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திண்டுக்கல்: இன்ஸ்டாகிராமில் ஃபேக் ஐடி மூலம் இளம்பெண்ணிடம் தோழி போல் பழகிய நபர் ஆபாச படத்தை அப்பெண்ணிற்கு அனுப்பியுள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பெண் ஆபாச படம் அனுப்பிய நபரிடம் ’நேரில் பேச வேண்டும் வாருங்கள்’ என அந்த நபரை ஆசை வார்த்தை காட்டி அழைத்துள்ளார். நேரில் சந்திக்க வந்த அந்த நபரை உறவினர்களுடன் சென்று மடக்கிப் பிடித்த அப்பெண் நடு ரோட்டிலேயே வைத்து தர்ம அடி கொடுத்துள்ளார்.
தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். இவர் சில
முக்கிய முடிவுகளை எடுக்க தேனி மாவட்டத்தில் இருக்கும் வீரபாண்டி கெளமாரியம்மன் கோயில், உத்தமபாளையம் காளத்தீஸ்வரர் கோயில், பெரியகுளம் பாலசுப்பிரமணியசுவாமி கோயில், கைலாசபட்டி கைலாசநாதர் கோயில் உள்ளிட்ட கோவில்களுக்கு சென்று வழிபடுவார்.
திருவள்ளூர் மாவட்ட அனைத்து ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட கிராம ஊராட்சிகளில் 2024-25 ஆம் ஆண்டிற்கான சொத்துவரி, தொழில்வரி, குடிநீர் கட்டணம் மற்றும் உரிமக் கட்டணம் ஆகியன வசூலிக்கும் பொருட்டு நாளை மற்றும் நாளை மறுநாள் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. கிராம மக்கள் அனைவரும் இந்த சிறப்பு முகாமினை பயன்படுத்தி வரியினங்களை செலுத்தி ஊராட்சியின் வளர்ச்சிக்கு துணை புரியுமாறு ஆட்சியர் பிரதாப் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டத்தில் இன்று (14.03.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் உட்கோட்ட அதிகாரியை, மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று ( மார்ச் -14) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் 9884098100.
பாளையங்கோட்டை சிறை கூடுதல் காவல் கூடுதல் கண்காணிப்பாளர் வசந்த கண்ணன் இன்று பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். சிறைக் கைதிகள் பொருட்கள் தயாரிக்க மூலப் பொருட்கள் வாங்கிய முறைகேட்டில் பாளையங்கோட்டை சிறைச்சாலை கூடுதல் கண்காணிப்பாளர் வசந்த கண்ணன் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மதுரை உயர்நீதிமன்ற கிளை இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
காரை கூட்டுரோட்டில் அமைந்துள்ள சிறுவர்களுக்கான அரசு குழந்தைகள் இல்லத்தில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா இன்று திடீரென பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அங்கு வழங்கப்படும் உணவு முறைகள் மற்றும் பாதுகாப்பு முறைகள் குறித்து கேட்டறிந்தார். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அனுசுயா, கண்காணிப்பாளர்கள் கண்ணன் ராதா விஜயகுமார் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
தமிழ்நாடு கடல் போக்குவரத்து உற்பத்திக் கொள்கை 2025 ஒன்றை அரசு அறிமுகப்படுத்தும். கப்பல், படகு வடிவமைப்பு, கப்பல் சட்டகம் கட்டுருவாக்கம் மற்றும் கப்பல் இயந்திர உற்பத்தி ஆகிய துறைகளில் முதலீடு மற்றும் புத்தாக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் கடலூர் மற்றும் தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் 30,000 வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்
சென்னை பாரிமுனை உள்ள அன்னை காளிகாம்பாள் கோவில் அருகில், மிக குறுகலாக ஒரு பகுதியில் தான் அன்னை நிமிஷாம்பாள் கோயில் அமைந்துள்ளது. தசமி திதியில் இந்த கோவிலுக்கு வந்து நெய் விளக்கு ஏற்றி பக்தர்கள் வழிபடுகிறார்கள். தொடர்ந்து பத்து தசமி திதி வந்து வழிபட்டால் ஐந்தாவது தசமி நிறைவடைவதற்குள்ளாகவே அன்னை பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றிவிடுவார் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. ஷேர் பண்ணுங்க
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரலிங்கசுவாமி சன்னதியின் கன்னி மூலையில் சர்ப்ப விநாயகர் வீற்றிருக்கிறார். இவர் 6 அடி உயர திருமேனியுடன் சர்ப்பத்தின் மேல் அமர்ந்து தனது இடது கையால் சர்ப்பத்தின் தலையை பிடித்தவாறு பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இவரை வழிபாடு செய்பவர்கள் சர்ப்ப தோஷத்திலிருந்து விடுபட்டு, திருமணத்தடை நீங்கி வாழ்க்கையில் மேன்மை அடைகின்றனர் என்பது இக்கோவிலின் ஐதீகம். *ஷேர் பண்ணுங்க*
Sorry, no posts matched your criteria.