Tamilnadu

News March 14, 2025

மத்திய அரசின் பங்களிப்பை பெற திட்ட அறிக்கைகள்

image

இன்று பட்ஜெட் தாக்கலின் போது மெட்ரோ ரயில் வழித்தடத்தை விமான நிலையம் – கிளாம்பாக்கம் வரையிலும், கோயம்பேடு – ஆவடி – பட்டாபிராம் வரையிலும், பூந்தமல்லி – திருப்பெரும்புதூர் – சுங்குவார்சத்திரம் வரையிலும் நீட்டித்திடும் வகையில் விரிவான திட்ட அறிக்கையில் பெறப்பட்டுள்ளன. இவை ஒன்றிய அரசின் பங்களிப்பை பெறுவதற்காக விரைவில் அனுப்பப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

News March 14, 2025

தூத்துக்குடி மாவட்ட பட்ஜெட் அறிவிப்புகள்

image

▶️தூத்துக்குடி, உள்ளிட்ட 3 மாவட்டங்களில் அகழாய்வுக்காக ரூ7 கோடி நிதி ஒதுக்கப்படும்

▶️ தூத்துக்குடியில் முதியவர்களுக்கு அன்புச் சோலை மையங்கள் அமைக்கப்படும்.

▶️ தூத்துக்குடி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் புதிய அரசு கலைக் கல்லூரிகள் அமைக்கப்படும்

▶️தூத்துக்குடியில் புதிய ஜவுளி பூங்கா

▶️தூத்துக்குடியில் புதிய மீன்படி இறங்குதளம்

உங்க ஊர் அப்டேட்ட உங்க நண்பருக்கு SHARE பண்ணுங்க

News March 14, 2025

பட்ஜெட்: மாமல்லபுரத்தில் தமிழர் பண்பாட்டு அருங்காட்சியகம்

image

2025-26ஆம் ஆண்டு தமிழ்நாட்டுக்கான பட்ஜெட் தாக்கல் இன்று (மார்.14) சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதில் தமிழ்நாட்டிற்கு வருகை புரியும் பிற மாநில மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு தமிழரின் தொன்மை மற்றும் தொடர்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக மாமல்லபுரம் பகுதியில் தமிழர் பண்பாட்டு அருங்காட்சியகம் உருவாக்கப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

News March 14, 2025

நெல்லை-திருச்செந்தூர் இடையே 2 ரயில்கள் ரத்து

image

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் 2வது யார்டு பிட்லைன் தண்டவாளம் புதுப்பிக்கும் பணி காரணமாக நெல்லை – திருச்செந்தூர் இடையே மார்ச் 20 முதல் 25 நாட்கள் 2 ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. திருச்செந்தூரில் இருந்து காலை 10:10 மணிக்கு நெல்லை செல்லும் பயணிகள் ரயில் எண் 5004, திருச்செந்தூர் செல்லும் பயணிகள் ரயில் எண் 5003 ஆகிய 2 ரயில்களும் முழுமையாக ரத்து செய்வதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

News March 14, 2025

கடலூரில் ‘கலைஞர் நூலகம்’: பட்ஜெட்டில் அறிவிப்பு!

image

தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டு வருகிறது இந்த நிலையில் பட்ஜெட்டின் முக்கிய அறிவிப்பாக “சேலம், கடலூர், நெல்லையில் ‘கலைஞர் நூலகம்’ அமைக்கப்படும் எனவும் போட்டித் தேர்வு மாணவர்கள் பயன்பெறும் வகையில் தலா 1 லட்சம் புத்தகங்கள் மற்றும் மாநாட்டுக் கூடம் வசதிகளுடன் கட்டப்படும்” என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

News March 14, 2025

ஈரோடு: மினி பஸ்களை இயக்க விண்ணப்பிக்கலாம்

image

ஈரோடு மாவட்டத்தில் மினி பஸ்கள் இயக்க புதிய வழிதடங்கள் கண்டறியப்பட்டு அரசு நாளிதழில் வெளியிடப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு , பெருந்துறை, கோபியி, சத்தியமங்கலம், பவானியி ஆகிய பகுதிகளில் வழித்தடங்கள் கண்டறியப்பட்டு வட்டார போக்குவரத்திற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ’வ பரிவேகன்’ செயலி மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க நாளையே(மார்ச் 15) கடைசி நாள்.

News March 14, 2025

பட்ஜெட்: அதிவேக ரயில் போக்குவரத்தை உருவாக்க ஆய்வு

image

விரிவான நகரமயமாக்கலைக் கருத்தில் கொண்டு மித அதிவேக ரயில் போக்குவரத்தை (RRTS) தமிழ்நாட்டில் உருவாக்க சாத்தியக் கூறுகள் ஆய்வு செய்யப்படும். சென்னை – திண்டிவனம் – விழுப்புரம் மற்றும் சென்னை – காஞ்சிபுரம் – வேலூர் ஆகிய வழித்தடங்களில் இந்த ஆய்வை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மேற்கொள்ளும் என 2025-26ஆம் ஆண்டு தமிழக பட்ஜெட்டில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

News March 14, 2025

பட்ஜெட் 2025: ரூ.2,100 கோடியில் உயர்மட்ட நான்கு வழிச்சாலை

image

சென்னை ஈசிஆரில் 4 வழித்தட உயர்மட்ட சாலை அமைக்கப்படும். மேலும், திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை ரூ.2,100 கோடியில் உயர்மட்ட நான்கு வழிச்சாலை அமைக்கப்படும் என்றும், குறிப்பாக, சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 4 வழிச்சாலை அமைக்க சாத்தியக்கூறுகள் ஆராயப்படும் என்றும் 2025-26ஆம் ஆண்டு தமிழக பட்ஜெட்டில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க

News March 14, 2025

சேலத்தில் புதிய நூலகம்: பட்ஜெட்டில் அறிவிப்பு

image

“போட்டித் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்காக சேலம், கடலூர், நெல்லை ஆகிய மாநகராட்சிகளில் சுமார் 1 லட்சம் புத்தகங்களுடன் சிறப்பு நூலகங்கள் அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. சேலத்தில் வசதிகளுடன் புதிய நூலகம் அமைக்கப்பட வேண்டுமென சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. அருள், பேரவையில் கோரிக்கை வைத்த நிலையில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

News March 14, 2025

ஆவின் பால் உற்பத்தியை அதிகரிக்க கலெக்டர் உத்தரவு

image

திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில், ஆவின் பால் உற்பத்தி அதிகரிப்பு தொடர்பாக பால் உற்பத்தியாளர் சங்க செயலாளர்களுடன் கலந்துரையாடல் நேற்று (மார்.13) நடைபெற்றது. இதற்கு, கலெக்டர் பிரதாப் தலைமை தாங்கினார். அப்போது, ஆவின் நிறுவனத்திற்கு முறையாக பாலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். மேலும், தரம் குறைவான பாலை உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பரிசோதிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

error: Content is protected !!