Tamilnadu

News March 14, 2025

நெல்லை இரவு நேர ரோந்து பணி காவல் அதிகாரிகள் விவரம்

image

திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தமுள்ள 5 காவல் உட்கோட்டங்களில், இன்று (மார்ச்-13] இரவு ரோந்து காவல் அதிகாரிகளின் பெயர், அவர்களின் உட்கோட்டம் மற்றும் செல் நம்பர் ஆகியவற்றை  திருநெல்வேலி மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. திருநெல்வேலி (SJHR) துணை காவல் கண்காணிப்பாளர் பிரதாபன் மேற்பார்வையில், இவர்கள் ரோந்து பணியில் ஈடுபடுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 14, 2025

தூத்துக்குடி மாவட்ட ரோந்து போலீசார் விவரம்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடைபெற்று விடாமல் தடுக்கும் வகையில் மாவட்ட முழுவதும் காவல்துறையினர் இரவு நேரங்களில் பொதுமக்கள் நலன் கருதி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று இரவு மாவட்ட முழுவதும் ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விபரங்களை கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. *தேவைபடுவோருக்கு பகிரவும்*

News March 14, 2025

முதலமைச்சர் குறித்து அவதூறு: பதிவிட்ட நபர் கைது

image

சேலம் கோரிமேடு பகுதியைச் சேர்ந்தவர் கலியுக கண்ணன் (50). இவர் அதே பகுதியில் டுடோரியல் சென்டர் நடத்திவருகிறார். இவரது ட்விட்டர் பக்கத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் குறித்து அவதூறு கருத்துகளை பதிவிட்டுள்ளார். இதுகுறித்து சைபர் கிரைம் காவல்துறையினருக்கு புகார் வந்ததை எடுத்து அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். 

News March 14, 2025

இரவு நேர ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (13.03.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News March 14, 2025

புதுச்சேரியில் மத்திய அமைச்சருக்கு  சிறப்பான வரவேற்பு

image

புதுச்சேரி மாநிலத்திற்கு இன்று வருகை தந்த மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால்-ஐ புதுச்சேரி மாநில எல்லையில் புதுச்சேரி சட்டப்பேரவை தலைவர் செல்வம் மற்றும் புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் மலர்க்கொத்து கொடுத்து வரவேற்றனர். இதில் புதுச்சேரி மாநில பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஏராளமான நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

News March 13, 2025

கோவை: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில், பெரியநாயக்கன்பாளையம், பேரூர், கருமத்தம்பட்டி, பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய பகுதிகளில் இன்று (மார்ச் 13) இரவு நேர ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உள்ளூர் அதிகாரியை, மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 டயல் செய்யலாம் என்று, கோவை மாநகர போலீசார், தங்களது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

News March 13, 2025

ஈரோடு அருகே பெண் தற்கொலை!

image

ஈரோடு மாவட்டம், அரச்சலூர் கூத்தம்பட்டி ஜேஜே நகரை சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவரது மனைவி மாரியம்மாள் 52. கோவிந்தசாமி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த பிறகு, மாரியம்மாள் கவலையுடன் காணப்பட்டார். இந்நிலையில் துயரம் தாங்காமல்,  மாரியம்மாள் வீட்டில் தூக்குமாட்டி தற்கொலை செய்துகொண்டார். அரச்சலூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News March 13, 2025

ரோந்துபணி காவல் அதிகாரிகளின் விவரம்

image

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 13.03.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். அவிநாசி, பல்லடம், உடுமலைப்பேட்டை, காங்கயம், தாராபுரம் ஆகிய பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகளின் பெயர்கள் மற்றும் தொலைபேசி எண்கள் திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களுக்காக அறிவிக்கப்பட்டுள்ளது.

News March 13, 2025

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

வேலூர், காட்பாடி, குடியாத்தம் அதன் சுற்றுவட்டார பகுதியில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் சற்று முன் வெளியிடப்பட்டது. இதில் பகுதிகளாக ரோந்து பணி நடைபெறுகிறது. ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கு தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம்.

News March 13, 2025

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் ஆய்வு கூட்டம்

image

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வளர்ச்சி திட்ட பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ் ஸ்ரீகாந்த்  தலைமை வகித்தார். இதில் கூடுதல் ஆட்சியர் வளர்ச்சி துறை முகமது சபீர் ஆழம், மாவட்ட வருவாய் துறை அலுவலர் உமா மகேஸ்வரி அவர்கள் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் முத்து வடிவேல் ஆகியோர்கள் மற்றும் அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.

error: Content is protected !!