India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஸ்ரீபெரும்புதுார், மேவலுார்குப்பத்தில் உள்ள கங்கையம்மன் கோவில் குளத்தில் நேற்று (மார்.13) காலை ஆண் சடலம் ஒன்று மிதந்தது. போலீசார் விசாரணையில், இறந்தவர் பீகாரைச் சேர்ந்த புல்லட் மஞ்சி (27) என்பதும், குளக்கரை தெருவில் வாடகைக்கு தங்கி இருந்ததும் தெரியவந்தது. நேற்று முன்தினம் (மார்.12) இரவு குளக்கரையில் அமர்ந்து மது அருந்தியபோது, போதையில் குளத்தில் தவறி விழுந்தது உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
திருப்பூர் மாவட்டத்தில் பொது வினியோக திட்டத்தின் கீழ் அந்தியோதயா அன்ன யோஜனா (ஏ.ஏ.ஒய்.) மற்றும் முன்னுரிமை ரேஷன் கார்டுகள் (பி.எச்.எச்.) பெற்றுள்ள ரேஷன் கார்டுதாரர்களின் குடும்ப உறுப்பினர்கள் விரல் ரேகைகளை வரும் மார்ச் 31ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார். திருப்பூர் மக்களே உடனே பதிவு செய்யுங்க. Share பண்ணுங்க.
நாட்றம்பள்ளி அருகே பச்சூரில் போலி மருத்துவர் ராமச்சந்திரன் (50) நேற்று (மார்.13) கைது செய்யப்பட்டுள்ளார். கவுண்டப்பனூரைச் சேர்ந்த ராமச்சந்திரன், சித்த மருத்துவத்தில் டிப்ளமோ படித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, பச்சூர் பகுதியில் கடந்த 4 ஆண்டுகளாக சித்த மருத்துவம் பார்ப்பதாகக் கூறி, ஆங்கில மருத்துவம் பார்த்து வந்துள்ளார். இதையறிந்த அதிகாரிகள் அவரை கையும் களவுமாக கைது செய்துள்ளனர்.
ராணிப்பேட்டை அரப்பாக்கத்தை சேர்ந்த தனலட்சுமி (22),லத்திகா (20). இருவரும் நேற்று (மார்ச்.13) பிள்ளையார்குப்பம் சர்வீஸ் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற போது எதிரே வந்த கார் மீது மோதியதில் இருவரும் படுகாயம் அடைந்தனர்.இதனை அடுத்து இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதில்,தனலட்சுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இது குறித்து சத்துவாச்சாரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஈரோட்டில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், வரும் 15 ம் தேதி காலை 8.00 மணி முதல் மாலை 4 மணி வரை, ரங்கம்பாளையம் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெறுகிறது. இதில் 200க்கும் மேபட்ட நிறுவனங்களில் மொத்தம் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்படவுள்ள. இதில் 8ஆம் வகுப்பு முதல் டிகிரி,டிப்ளமோ, நர்சிங் முடித்தவர்கள் என அனைவரும் பங்கு பெறலாம். இதை உங்களுடைய நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.
குமாரபாளையம், எக்ஸல் கல்லூரியின் மூன்றாம் ஆண்டு வேளாண் பொறியியல் துறை மாணவி செல்வி. கீர்த்தனாவிற்கு மகளிர் சட்ட உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் சார்பாக தேசத்தின் அடையாளம் விருது 2025 – பல குரல் நாயகி விருது கோவையில் வழங்கப்பட்டது. விருதை பெற்ற மாணவிக்கு கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சார்பில் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
கோவை மாநகர காவல் ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சேலம் -கொச்சின் சாலையில் மரப்பாலத்தில் அமைந்துள்ள இரயில்வே கீழ் பாலத்தை திரும்பக்கட்டும் பணி நடைபெற உள்ளதால், இன்று முதல் வாளையாறு மற்றும் பாலக்காட்டிலிருந்து, கோவை, குனியமுத்தூர், உக்கடம் செல்லும் பேருந்து மற்றும் இலகுரக வாகனங்கள் மட்டும் செட்டிபாளையம் பிரிவு, விறகுக்கடை பாலம் வழியாக சென்று ACC CEMENT FACTORY சாலை வழியாக செல்ல வேண்டும் என்றார்.
தென்காசி மாவட்டம் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறையில் பகுதிநேர யோகா பயிற்சிவிப்பாளர் பதவிக்கு தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். விண்ணப்ப படிவங்களை https://tenkasi.nic.in/notice_category/recruitment வலைதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்கள் மார்ச்.28 மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு. *ஷேர் பண்ணுங்க
கோடை கால நெரிசலைத் தவிர்க்கும் வகையில் ஊட்டிக்கு செல்லும் சுற்றுலா வாகனங்களின் எண்ணிக்கையில் புதிதாக கட்டுப்பாடுகள் விதித்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம். ஊட்டிக்கு செல்லும் மின்சார வாகனங்களுக்கு இ-பாஸ் வழங்கும் நடைமுறையில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை வரும் ஏப்.25-க்கு தள்ளி வைத்துள்ளது.
அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த அம்புரோஸ் (68) என்பவர் 7-ம் வகுப்பு படிக்கும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதியப்பட்டு, இவ்வழக்கின் விசாரணை அரியலூர் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட முதியவர் அம்புரோசுக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.