India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று (மார்ச்.14) நடைபெற உள்ளது. இந்த முகாமில் 8, 12ஆம் வகுப்பு, டிப்ளமோ, ஐடிஐ, பட்டதாரிகள் கலந்து கொள்ளலாம். இந்த முகாமில் 100க்கும் மேற்பட்ட நிரப்பபட உள்ளன. மேலும் விபரங்களுக்கு 04362-237037 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார். வேலையில்லா உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க..
குரூப் தோ்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகளில் பங்கேற்று பயனடைய மாவட்ட ஆட்சியா் எச்.எஸ்.ஸ்ரீகாந்த் அழைப்பு விடுத்துள்ளாா். அவா் நேற்று வெளியிட்ட செய்தி: மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 1, குரூப் 4 தோ்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் மாா்ச் 17 முதல் தொடங்கப்படவுள்ளது. விருப்பமுள்ளவா்கள் 9499055904 என்ற எண்ணில் பதிவு செய்து கொள்ளலாம்.
அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிவகங்கை, திருப்புத்துார், காரைக்குடிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. சிவகங்கையிலிருந்து திருக்கோஷ்டியூருக்கு செல்ல அரசு பஸ்சில் ரூ.20 மட்டுமே வசூலிக்கப்படும். ஆனால் நேற்று திருக்கோஷ்டியூருக்கு பஸ்சில் ரூ.30 கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதனால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். அதிகாரி விழா கால சிறப்பு பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது வாடிக்கை தான் என்றார்.
சேத்துப்பட்டு அருகே கெங்காபுரம் கிராமத்தை சேர்ந்த கிருபானந்தன் – மாலா தம்பதியின் 11 மாத குழந்தை வேதா ஸ்ரீ கடந்த 28ம் தேதி சுயநினைவு இழந்து உயிரிழந்தது. மயானத்தில் அடக்கம் செய்யப்பட்ட நிலையில், பாலின விகிதம் குறைவு காரணமாக மருத்துவர் அருண்குமார் புகாரில் தெரிவித்ததால், போலீசார் உடலை தோண்டி பிரேத பரிசோதனை செய்தனர். அறிக்கை பின் தகவல் தெரிவிக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
சைவத்திருத்தலங்களின் தலைமை பீடமாகவும் பிறந்தாலே முக்தி தரும் சிறப்பு வாய்ந்த தலமாகவும் திகழ்கின்ற திருவாரூர் ஸ்ரீ தியாகராஜ சுவாமி திருக்கோயிலில் வருகின்ற ஏப்ரல் 7 ஆம் தேதி உலக பிரசித்தி பெற்ற ஆழித்தேர் திருவிழா நடைபெற உள்ளது. அதற்காக இன்று (13.03.2025) விக்னேஸ்வர பூஜை மற்றும் வாஸ்து பூஜை ஆகியவை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஒன்னல்வாடியைச் சேர்ந்தவர் லூர்துசாமி, இவரது மனைவியின் சகோதரி எலிசபெத் ஆகியோர் வீட்டில் இருக்கும்பொழுது ,வீடு தீ பற்றி எறிந்துள்ளது. தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் வீட்டினுள் பார்க்கும் பொழுது இருவரும் கழுத்தறுக்கப்பட்டு இறந்து கிடந்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறை இச்சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளைப் பிடிக்க டிஎஸ்பி சிந்து தலைமையில் 5 தனிப்படைகள் அமைத்து தேடி வருகின்றனர்.
தொண்டி, பாசிபட்டினத்தை சேர்ந்தவர் மீனவர் முத்துராஜா(35). மாற்றுத் திறனாளியான இவர் மார்ச்.12 இரவு அங்குள்ள மளிகைக்கடை முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அதே கிராமத்தை சேர்ந்த செந்தில்குமார்(33), லாடையா(38), மாரிக்கண்ணு(46) ஆகியோர் தங்களுடைய வலையை அறுத்துவிட்டார்கள் என்று தகராறில் ஈடுபட்டனர். தகராறில் முத்துராஜாவை கிழே தள்ளியதன் விளைவாக முத்துராஜா இறந்தார். மூவரையும் போலீசார் கைது செய்தனர்.
ஸ்ரீவைகுண்டம் குமரகுருபரர் மேல்நிலைப்பள்ளிக்கு நேற்று கலெக்டர் இளம்பகவத், எஸ்.பி., ஆல்பர்ட்ஜான் வந்தனர். அங்கு மாணவர்களுக்கு ஜாதி பாகுபாட்டின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பள்ளிகளில் ஜாதியை குறிக்கும் எழுத்துக்களை அழிக்க மாணவர்களே முன்னெடுப்பாக பங்கேற்க வேண்டும் என அறிவுறுத்தினார். இதன்படி, பெயிண்ட் டப்பாக்களை கொடுத்து, மாணவர்களையே அந்த எழுத்துக்களை நீக்கச் செய்தார்.*ஷேர்
விருத்தாசலம் அடுத்த செம்பளக்குறிச்சி ரயில்வே சுரங்கப்பாதை அருகே,ரயில் பாதையோரம் கடந்த 12ஆம் தேதி காலை, 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம், தலை சிதைந்த நிலையில் கிடந்தது.விருத்தாசலம் ரயில்வே போலீசார், சடலத்தை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.விசாரணையில், கள்ளக்குறிச்சியை சேர்ந்த பாலசுப்ரமணியன், 41, என்பது தெரியவந்தது.கணவன், மனைவி இடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக ரயிலில் அடிபட்டு உயிரிழந்துள்ளார்
உலகப் பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலில் மாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு, சாமி சன்னதி 2-ம் பிரகாரத்தில் பெண்கள் திருவிளக்கு பூஜை கோவில் நிர்வாக நடத்தப்பட்டது இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் திருவிளக்கு ஏற்றினார்கள். திருவிளக்கு பூஜை முன்னிட்டு கோவில் வளாகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது.அம்மன் அருள் பெற SHARE பன்னுங்க.
Sorry, no posts matched your criteria.