Tamilnadu

News March 14, 2025

யோகா பயிற்சி பயிற்சிவிப்பாளர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க அழைப்பு

image

தென்காசி மாவட்டம் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறையில் பகுதிநேர யோகா பயிற்சிவிப்பாளர் பதவிக்கு தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். விண்ணப்ப படிவங்களை https://tenkasi.nic.in/notice_category/recruitment வலைதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்கள் மார்ச்.28 மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு. *ஷேர் பண்ணுங்க

News March 14, 2025

ஊட்டிக்கு செல்லும் மின்சார வாகனங்களுக்கு இ-பாஸ்

image

கோடை கால நெரிசலைத் தவிர்க்கும் வகையில் ஊட்டிக்கு செல்லும் சுற்றுலா வாகனங்களின் எண்ணிக்கையில் புதிதாக கட்டுப்பாடுகள் விதித்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம். ஊட்டிக்கு செல்லும் மின்சார வாகனங்களுக்கு இ-பாஸ் வழங்கும் நடைமுறையில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை வரும் ஏப்.25-க்கு தள்ளி வைத்துள்ளது.

News March 14, 2025

சிறுமியை பலாத்காரம் செய்த முதியவருக்கு ஆயுள் தண்டனை

image

அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த அம்புரோஸ் (68) என்பவர் 7-ம் வகுப்பு படிக்கும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதியப்பட்டு, இவ்வழக்கின் விசாரணை அரியலூர் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட முதியவர் அம்புரோசுக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

News March 14, 2025

மனைவியை அடித்து கொன்றவருக்கு ஆயுள் தண்டனை

image

ஆவடியைச் சேர்ந்த சரிதா, மேம்பாக்கத்தைச் சேர்ந்த மதன் (39) என்பவரை 2ஆவதாக காதலித்து கடந்த 2019ஆம் ஆண்டு மறுமணம் செய்து கொண்டார். குடும்ப பிரச்னை காரணமாக 2021ஆம் ஆண்டு ஜன.21ஆம் தேதி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டபோது, மதன் இரும்பு குழாயால் சரிதாவை சரமாரியாக அடித்துக் கொன்றார். வழக்கை விசாரித்த மகளிர் விரைவு நீதிமன்றம், மதனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டது.

News March 14, 2025

புதுவையில் நாளை வேலைவாய்ப்பு முகாம்

image

புதுச்சேரி அரசின் தொழிலாளர் துறை, வேலைவாய்ப்பு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தொழிலாளர் துறை, வேலைவாய்ப்பகம் வரும் மார்ச் 15 ஆம் தேதி சனிக்கிழமை லாஸ்பேட்டை அரசு பெண்கள் பொறியியல் கல்லூரி வளாகத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த முகாமில் 2000 க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை பல முன்னணி நிறுவனங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளனர். பங்கு பெற்று பயன் பெறுவீர்..SHARE IT

News March 14, 2025

செங்கல்பட்டில் பாம்பு கடித்து ஆண்டுக்கு 33 பேர் பலி

image

அதிக விஷத் தன்மை கொண்ட பாம்புகள் கடித்தால் நரம்பு மண்டலம் பாதிப்பு, ரத்தம் உறைதல் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.இதற்காக பாம்பு கடிக்கு என தனியாக நச்சு நீக்கி சிகிச்சை பிரிவு செயல்பட்டு வருகிறது.அந்த வகையில், கடந்தாண்டு பாம்பு கடியால் பாதிக்கப்பட்டு, 536 பேர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.இதில் 503 பேர் நலமுடன் வீடு திரும்பி உள்ளனர்;33 பேர் உயிரிழந்து உள்ளனர்.

News March 14, 2025

மகளின் கழுத்தை அறுத்த தாய் மீது வழக்கு

image

நெய்யூரைச் சேர்ந்தவர் விஜிலின் சாம் (44). இவர் மனைவி மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர். இந்நிலையில் அவர் அவரது மகள் விஜோலின் தீபா கழுத்தை அறுத்ததாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக இரணியல் போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News March 14, 2025

சட்டக் கல்லூரி மாணவர் கொலை வழக்கில் வக்கீல் கைது

image

சேரன்மாதேவியைச் சேர்ந்த சட்ட கல்லூரி மாணவன் மணிகண்டன் கடந்த ஆண்டு டிசம்பர் 20 ஆம் தேதி சேரன்மகாதேவியில் வைத்து கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இது குறித்து சேரன்மகாதேவி போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் மேலும் தொடர்புடைய வழக்கறிஞர் ராஜா ராம் என்பவரை போலீசார் நேற்று கைது செய்து பாளை மத்திய சிறையில் அடைத்தனர்.

News March 14, 2025

மின்சாரம் தாக்கி கோவில் பணியாளர் உயிரிழப்பு

image

வானூர் அடுத்த தைலாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாதுரை. இவர் பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவிலில் 10 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் கோவில் ராஜகோபுரம் அருகே உள்ள அலுமினிய பைப்பிலிருந்து மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்ட அண்ணாதுரை படுகாயமடைந்து உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து ஆரோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

News March 14, 2025

வேலை தேடும் இளைஞர்களின் கவனத்திற்கு

image

தமிழக அரசு உருவாக்கிய தனியார் துறை வேலைவாய்ப்பு இணையத்தில் விருதுநகர் மாவட்டத்தில் 146 தனியார் துறை நிறுவனங்கள், 19 துறைகளில் 2128 பணிக்காலியிடங்களை உள்ளீடு செய்துள்ளன. விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த வேலைதேடும் இளைஞர்கள் https://www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 93601-71161 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!