India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஸ்ரீவைகுண்டம் குமரகுருபரர் மேல்நிலைப்பள்ளிக்கு நேற்று கலெக்டர் இளம்பகவத், எஸ்.பி., ஆல்பர்ட்ஜான் வந்தனர். அங்கு மாணவர்களுக்கு ஜாதி பாகுபாட்டின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பள்ளிகளில் ஜாதியை குறிக்கும் எழுத்துக்களை அழிக்க மாணவர்களே முன்னெடுப்பாக பங்கேற்க வேண்டும் என அறிவுறுத்தினார். இதன்படி, பெயிண்ட் டப்பாக்களை கொடுத்து, மாணவர்களையே அந்த எழுத்துக்களை நீக்கச் செய்தார்.*ஷேர்
விருத்தாசலம் அடுத்த செம்பளக்குறிச்சி ரயில்வே சுரங்கப்பாதை அருகே,ரயில் பாதையோரம் கடந்த 12ஆம் தேதி காலை, 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம், தலை சிதைந்த நிலையில் கிடந்தது.விருத்தாசலம் ரயில்வே போலீசார், சடலத்தை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.விசாரணையில், கள்ளக்குறிச்சியை சேர்ந்த பாலசுப்ரமணியன், 41, என்பது தெரியவந்தது.கணவன், மனைவி இடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக ரயிலில் அடிபட்டு உயிரிழந்துள்ளார்
உலகப் பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலில் மாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு, சாமி சன்னதி 2-ம் பிரகாரத்தில் பெண்கள் திருவிளக்கு பூஜை கோவில் நிர்வாக நடத்தப்பட்டது இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் திருவிளக்கு ஏற்றினார்கள். திருவிளக்கு பூஜை முன்னிட்டு கோவில் வளாகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது.அம்மன் அருள் பெற SHARE பன்னுங்க.
ஸ்ரீபெரும்புதுார், மேவலுார்குப்பத்தில் உள்ள கங்கையம்மன் கோவில் குளத்தில் நேற்று (மார்.13) காலை ஆண் சடலம் ஒன்று மிதந்தது. போலீசார் விசாரணையில், இறந்தவர் பீகாரைச் சேர்ந்த புல்லட் மஞ்சி (27) என்பதும், குளக்கரை தெருவில் வாடகைக்கு தங்கி இருந்ததும் தெரியவந்தது. நேற்று முன்தினம் (மார்.12) இரவு குளக்கரையில் அமர்ந்து மது அருந்தியபோது, போதையில் குளத்தில் தவறி விழுந்தது உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
திருப்பூர் மாவட்டத்தில் பொது வினியோக திட்டத்தின் கீழ் அந்தியோதயா அன்ன யோஜனா (ஏ.ஏ.ஒய்.) மற்றும் முன்னுரிமை ரேஷன் கார்டுகள் (பி.எச்.எச்.) பெற்றுள்ள ரேஷன் கார்டுதாரர்களின் குடும்ப உறுப்பினர்கள் விரல் ரேகைகளை வரும் மார்ச் 31ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார். திருப்பூர் மக்களே உடனே பதிவு செய்யுங்க. Share பண்ணுங்க.
நாட்றம்பள்ளி அருகே பச்சூரில் போலி மருத்துவர் ராமச்சந்திரன் (50) நேற்று (மார்.13) கைது செய்யப்பட்டுள்ளார். கவுண்டப்பனூரைச் சேர்ந்த ராமச்சந்திரன், சித்த மருத்துவத்தில் டிப்ளமோ படித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, பச்சூர் பகுதியில் கடந்த 4 ஆண்டுகளாக சித்த மருத்துவம் பார்ப்பதாகக் கூறி, ஆங்கில மருத்துவம் பார்த்து வந்துள்ளார். இதையறிந்த அதிகாரிகள் அவரை கையும் களவுமாக கைது செய்துள்ளனர்.
ராணிப்பேட்டை அரப்பாக்கத்தை சேர்ந்த தனலட்சுமி (22),லத்திகா (20). இருவரும் நேற்று (மார்ச்.13) பிள்ளையார்குப்பம் சர்வீஸ் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற போது எதிரே வந்த கார் மீது மோதியதில் இருவரும் படுகாயம் அடைந்தனர்.இதனை அடுத்து இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதில்,தனலட்சுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இது குறித்து சத்துவாச்சாரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஈரோட்டில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், வரும் 15 ம் தேதி காலை 8.00 மணி முதல் மாலை 4 மணி வரை, ரங்கம்பாளையம் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெறுகிறது. இதில் 200க்கும் மேபட்ட நிறுவனங்களில் மொத்தம் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்படவுள்ள. இதில் 8ஆம் வகுப்பு முதல் டிகிரி,டிப்ளமோ, நர்சிங் முடித்தவர்கள் என அனைவரும் பங்கு பெறலாம். இதை உங்களுடைய நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.
குமாரபாளையம், எக்ஸல் கல்லூரியின் மூன்றாம் ஆண்டு வேளாண் பொறியியல் துறை மாணவி செல்வி. கீர்த்தனாவிற்கு மகளிர் சட்ட உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் சார்பாக தேசத்தின் அடையாளம் விருது 2025 – பல குரல் நாயகி விருது கோவையில் வழங்கப்பட்டது. விருதை பெற்ற மாணவிக்கு கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சார்பில் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
கோவை மாநகர காவல் ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சேலம் -கொச்சின் சாலையில் மரப்பாலத்தில் அமைந்துள்ள இரயில்வே கீழ் பாலத்தை திரும்பக்கட்டும் பணி நடைபெற உள்ளதால், இன்று முதல் வாளையாறு மற்றும் பாலக்காட்டிலிருந்து, கோவை, குனியமுத்தூர், உக்கடம் செல்லும் பேருந்து மற்றும் இலகுரக வாகனங்கள் மட்டும் செட்டிபாளையம் பிரிவு, விறகுக்கடை பாலம் வழியாக சென்று ACC CEMENT FACTORY சாலை வழியாக செல்ல வேண்டும் என்றார்.
Sorry, no posts matched your criteria.