India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஈரோடு மாவட்டம், அரச்சலூர் கூத்தம்பட்டி ஜேஜே நகரை சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவரது மனைவி மாரியம்மாள் 52. கோவிந்தசாமி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த பிறகு, மாரியம்மாள் கவலையுடன் காணப்பட்டார். இந்நிலையில் துயரம் தாங்காமல், மாரியம்மாள் வீட்டில் தூக்குமாட்டி தற்கொலை செய்துகொண்டார். அரச்சலூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 13.03.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். அவிநாசி, பல்லடம், உடுமலைப்பேட்டை, காங்கயம், தாராபுரம் ஆகிய பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகளின் பெயர்கள் மற்றும் தொலைபேசி எண்கள் திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களுக்காக அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர், காட்பாடி, குடியாத்தம் அதன் சுற்றுவட்டார பகுதியில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் சற்று முன் வெளியிடப்பட்டது. இதில் பகுதிகளாக ரோந்து பணி நடைபெறுகிறது. ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கு தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம்.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வளர்ச்சி திட்ட பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ் ஸ்ரீகாந்த் தலைமை வகித்தார். இதில் கூடுதல் ஆட்சியர் வளர்ச்சி துறை முகமது சபீர் ஆழம், மாவட்ட வருவாய் துறை அலுவலர் உமா மகேஸ்வரி அவர்கள் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் முத்து வடிவேல் ஆகியோர்கள் மற்றும் அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.
புதுச்சேரி மாநில அனைத்து பட்டியலின மக்கள் இயக்கம் சார்பில், பத்ம ஸ்ரீ விருதாளர் தவில் இசை வித்வான் டாக்டர். தட்சிணாமூர்த்திக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், புதுவை அமைச்சர் நமச்சிவாயம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, தவில் இசை வித்துவானுக்கு பொன்னாடை மற்றும் பூங்கொத்து வழங்கி வாழ்த்தினர்.
திண்டுக்கல்லில் இன்று இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் திண்டுக்கல் ஊரகம், திண்டுக்கல் நகரம், வேடசந்தூர்,ஒட்டன்சத்திரம், பழனி கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணியை நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், சங்ககிரி, ஓமலூர், மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுக்கவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொதுமக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள் இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று மார்ச் 13 இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
கரூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் இணைந்து, வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் 15.03.2025 அன்று தாந்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரியில் நடைபெற இருந்த மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நிர்வாக காரணங்களால் 29.03.2025 சனிக்கிழமை அன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அதிகாரிகள் இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று (13/03/2025) இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்: நாமக்கல் – லக்ஷ்மணதாஸ் (9443286911), ராசிபுரம் – ஆனந்தகுமார் (9498106533), திருச்செங்கோடு – முருகேசன் (9498133890) ,வேலூர் – ஷாஜகான் (9498167357) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.