India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மார்ச் மாத இரண்டாம் வாரத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வரும் 18ஆம் தேதி காரைக்குடி கண்ணதாசன் மணி மண்டபத்தில் நடைபெற உள்ளது. மாவட்டத்தின் அனைத்துத் துறை உயர் அலுவலர்கள் பங்கேற்கும் இக்கூட்டத்தில் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள விவசாயப் பெருமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளைத் தெரிவித்து அதனை நிவர்த்தி செய்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார். Share It.
திருச்சி மாவட்ட சுகாதார சங்கம் மூலம் மணப்பாறை மற்றும் துறையூர், ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் மாவட்ட சுகாதார அலுவலகம், ரேஸ்கோர்ஸ் ரோடு ஜமால் முகமது கல்லூரி அருகில், டி.வி.எஸ் டோல்கேட் உள்ள திருச்சி அலுவலகத்தில் வருகின்ற 24.3.2025 மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கவும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
திருப்பூர், அய்யம்பாளையத்தில் அமைந்துள்ளது புகழ்பெற்ற வாழைத்தோட்டத்து அய்யன் கோயில். மிகவும் சக்திவாய்ந்த அய்யனை வழிபட்டால், தீராத நோய்களும், தோஷங்களும் நீங்குமாம். இங்கு பிரசாதமாக வழங்கப்படும் புற்றுமண், பாம்பு விஷத்தை முறிக்கும் வல்லமை கொண்டதாம். அய்யன் கோயிலில் கிடைக்கும் புற்றுமண்னை சிறிது எடுத்து வீடுகளிலும், வயல்வெளிகளிலும் தெளித்தால் அங்கு விஷ ஜந்துக்கள் போன்றவை அண்டாது என்பது நம்பிக்கை.
கோவை, சோமனூரை அடுத்து அமைந்துள்ளது புகழ்பெற்ற வாழைத்தோட்டத்து அய்யன் கோயில். மிகவும் சக்திவாய்ந்த அய்யனை வழிபட்டால், தீராத நோய்களும், தோஷங்களும் நீங்குமாம். இங்கு பிரசாதமாக வழங்கப்படும் புற்றுமண், பாம்பு விஷத்தை முறிக்கும் வல்லமை கொண்டதாம். அய்யன் கோயிலில் கிடைக்கும் புற்றுமண்னை, சிறிது எடுத்து வீடுகளிலும், வயல்வெளிகளிலும் தெளித்தால், அங்கு விஷ ஜந்துக்கள் போன்றவை அண்டாது என்பது மக்களின் நம்பிக்கை.
வேலூரில் 3 பிடிஓக்கள் பணியிட மாற்றம் செய்து கலெக்டர் சுப்புலட்சுமி உத்தரவிட்டார். அதன்படி கணியம்பாடி ஊராட்சி ஒன்றியம் கிராம ஊராட்சிகள் பிடிஓ பூம்பா வேலூர் வளர்ச்சி ஊராட்சிகள் பிடிஓ.,வாகவும், இங்கு பணியில் இருந்த சசிகலா ஊராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலக கண்காணிப்பாளராகவும், இங்கு பணியில் இருந்த சத்தியமூர்த்தி கணியம்பாடி ஊராட்சி ஒன்றிய கிராம ஊராட்சிகள் பிடிஓவாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சர்வதேச அளவில் சிறந்த கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியலை க்யூ.எஸ். எனும் சர்வதேச நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் பொறியியல், தொழில்நுட்பத்தில் உலக அளவில் வேலூர் விஐடி பல்கலைக்கழகம் 142-வது இடம் பிடித்துள்ளது. கடந்தாண்டைவிட 70 இடங்கள் முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதேபோல் தேசிய அளவில் விஐடி பல்கலைக்கழகம் 9-வது இடம் பிடித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான விழிப்புணர்வு புகைப்படம் வெளியிட்டப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று “குற்றங்களை தடுப்பதற்கும் குற்றவாளிகளை எளிதில் கண்டுபிடிப்பதற்கும் சிசிடிவி கேமரா மிக அவசியமான ஒன்றாகும்” என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக இன்று வெளியிடப்பட்டுள்ளது.
ஈரோடு பேருந்து நிலையத்தில், மார்ச் 15,16 ஆகிய இரு தேதிகளில் இயற்கை சந்தை நடைபெறுகிறது. இதில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம், மகளிர் இயற்கை உரங்கள் மூலம் விளைவிக்கப்பட்ட காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. இதனை பொது மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என, மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா கேட்டு கொண்டு உள்ளார்.
குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சார்பில் இயங்கும் நாகை அன்னை சத்யா அரசு குழந்தைகள் இல்லத்தில் மதிப்பூதிய அடிப்படையில் ஆற்றுப்படுத்துனர் நியமனம் செய்யப்பட உள்ளனர். எனவே உளவியல் மற்றும் ஆற்றுப்படுத்துதலில் முதுநிலை பட்டம் பெற்றவர்கள் வருகின்ற 25ஆம் தேதிக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு நன்னடத்தை அலுவலரை தொடர்பு கொள்ளுமாறு ஆட்சியர் ஆகாஷ் கேட்டு கொண்டுள்ளார்.
“உங்களைத் தேடி உங்கள் ஊரில்” என்ற அரசு திட்டத்தின் கீழ் அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி, மார்ச் மாதம் 19 மற்றும் 20 ஆம் தேதி ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் 19 ஆம் தேதி ஆண்டிமடம் வட்டாச்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரை நேரடியாக சந்தித்து மனுக்கள் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.