Tamilnadu

News March 13, 2025

திருமண தடையை தீர்க்கும் திண்டல் முருகன்

image

ஈரோடு திண்டல் மலையில் புகழ்பெற்ற முருகன் கோயில் அமைந்துள்ளது. அருணகிரிநாதரால் பாட பெற்ற 178 தலங்களில் இக்கோயிலும் ஒன்று. இந்த கோயிலில் பிரதி வார செவ்வாய் அன்று நடைபெறும் சிறப்பு பூஜையில் கலந்துக்கோண்டு முருகனை வழிப்பட்டால் திருமணத்தடை, குழந்தையின்மை, செவ்வாய் தோஷம் தொழில் பிரச்சனை என தீராத வினைகள் அனைத்தும் நீங்கி, வாழ்வின் சகலுமும் கை கூடி அடுத்த நிலைக்கு செல்லலாமென கூறப்படுகிறது.

News March 13, 2025

தென்காசி: சர்க்கரை வியாதியை குணமாக்கும் தலம்

image

தென்காசியிலிருந்து 6 கி.மீ தொலைவில் சுமார் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இலத்தூர் மதுநாதீசுவரர் கோயில் உள்ளது. இங்கு தெற்கு நோக்கி கைகளை அபயஹஸ்த நிலையில் வைத்து எழுந்தருளி இருப்பதால், சனி சம்பந்தப்பட்ட எந்த வித தோஷமும் இங்கு வந்து வணங்கினால் விலகிப்போகும். நீர்க்கிரகமான சனியை இலத்தூரில் வந்து வழிபட்டால் சர்க்கரை வியாதி பறந்தே போய்விடும் என்பது இங்குவரும் பக்தர்களின் நம்பிக்கை. *ஷேர் பண்ணுங்க*

News March 13, 2025

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு

image

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சார்பாக சமூக வலைதளத்தில் இன்று (மார்ச் 13) வெளியிட்டுள்ள செய்தியில் போலியான வங்கி செய்திகளைக் குறித்து ஜாக்கிரதையாக இருங்கள், உங்கள் வங்கிக் கணக்குகளை யாரிடமும் பகிர வேண்டாம் என்று மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. உதவிக்கு சைபர் கிரைம் 1930 அழைக்கவும்.

News March 13, 2025

தேனி : TNPSC குரூப் IV தேர்வுக்கான மாதிரி பயிற்சி

image

குரூப் தேர்வுக்கு தயராகி கொண்டிருக்கும் தேனி மாவட்ட விண்ணப்பதாரர்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் டி.என்.பி.எஸ்.ஸி குரூப் IV தேர்வுக்கான முழுமாதிரி தேர்வுகள் 15.03.2025, 22.03.2025 மற்றும் 29.03.2025 ஆகிய தேதிகளில் நடத்தப்படவுள்ளது. தங்களின் பெயரை 6379268661, என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம் .

News March 13, 2025

கூட்டுறவு சங்கங்களின் குறைகளை தீர்வு கூட்டம்

image

கரூர் மண்டலத்தில் கூட்டுறவுத்துறையின் கீழ் செயல்படும் கூட்டுறவு நிறுவனங்களின் பணியாளர்களின் குறைகளைத்தீர்க்கும் பணியாளர்நாள் கூட்டம் 14.03.2025 அன்று 3.00 மணியளவில் கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகத்தில் முல்லை கூட்டரங்கில் நடைபெற உள்ளது. தங்கள் குறைகள் தொடர்பான விண்ணப்பங்களை http:/rcs.tn.gov.in என்ற இணைய தளத்தில் பதிவு செய்யலாம் இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

News March 13, 2025

புதிய மதுபான ஆலைகள் மூலம் 5,000 பெண்களுக்கு வேலை வாய்ப்பு

image

புதுச்சேரி சட்டசபையில் இன்று ஆளுநருக்கு நன்றி தெரிவிக்கும் உரையில் புதுச்சேரியில் புதிதாக மது ஆலை தொடங்குவதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது முதலமைச்சர் ரங்கசாமி கூறியதாவது. அதில் புதிய மதுபான ஆலைகள் மூலம் ரூ.500 கோடி வருவாய், 5,000 பெண்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

News March 13, 2025

குமரியில் டாட்டூ குத்திய 6 பேருக்கு எச். ஐ.வி பாதிப்பு

image

குமரி மாவட்டத்தில் டாட்டூ எனும் பச்சை குத்துவதால் தோல் நோய்கள் அதிகரித்துள்ளது என்றும் கடந்த 2 ஆண்டுகளில் 6 பேர் எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆசாரிபள்ளம் மருத்துவமனையில் மாதம் 30 பேர் டாட்டூவினால் ஏற்படும் பிரச்சனைக்காக வருகின்றனர் என ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையின் தோல் நோய் மருத்துவ பிரிவு பேராசிரியர் பிரேம் சாந்த் தெரிவித்துள்ளார்.*தெரிந்தவர்களுக்கு பகீர்ந்து உஷார் படுத்தவும்*

News March 13, 2025

வியாபாரம் பெருக அருள் புரியும் விஜயநாதேஸ்வரர்

image

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருவிசயமங்கை கிராமத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ மங்களநாயகி சமேத திருவிஜயநாதேஸ்வரர் கோயில். தேவார பாடல் பெற்ற இக்கோயிலில் விஜயநாதரை வணங்கினால் ஜெயம் கிட்டும் என்பதால் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற எடுத்த செயல்களில் வெற்றி அடைய ஏராளமான பக்தர்கள் வந்து தொழுகின்றனர். தொழிலில் முன்னேற வியாபாரம் சிறக்க வியாபார அபிவிருத்தி ஸ்தலமாக இக்கோயில் விளங்குகிறது. Share It

News March 13, 2025

மதுரை : இதை செய்தால் 1 லட்சம் ரூபாய் அபராதம்

image

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட மாட்டுத்தாவணி பேருந்து நிலையம், உலகனேரி, உயர்நீதிமன்ற மதுரை கிளை, உத்தங்குடி, பாண்டி கோவில் பகுதி காலியிடங்கள், சாலை ஓரங்கள், நீர்நிலைகள், திறந்த வெளி கால்வாய்கள் ஆகிய இடங்களில் குப்பைகள் கொட்டினால் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும். குப்பை கொட்டும் நபர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு விடுத்த 24 மணி நேரத்திற்குள் குப்பைகளை அகற்றாவிட்டால் அபராதம் விதிக்கப்படும்.

News March 13, 2025

வியாபாரம் பெருக அருள் புரியும் விஜயநாதேஸ்வரர்

image

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருவிசயமங்கை கிராமத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ மங்களநாயகி சமேத திருவிஜயநாதேஸ்வரர் கோயில். தேவார பாடல் பெற்ற இக்கோயிலில் விஜயநாதரை வணங்கினால் ஜெயம் கிட்டும் என்பதால் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற எடுத்த செயல்களில் வெற்றி அடைய ஏராளமான பக்தர்கள் வந்து தொழுகின்றனர். தொழிலில் முன்னேற வியாபாரம் சிறக்க வியாபார அபிவிருத்தி ஸ்தலமாக இக்கோயில் விளங்குகிறது. Share It

error: Content is protected !!