Tamilnadu

News September 6, 2025

திருவண்ணாமலை கிரிவலம்: பாதுகாப்பு பணிக்கு 200 போலீசார்

image

ஆவணி மாத பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு, தி.மலைக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, கூட்ட நெரிசல் மற்றும் அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் வகையில், பாதுகாப்பு பணிக்காக வேலூர் மாவட்டத்தில் இருந்து, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அண்ணாதுரை தலைமையில், 200 போலீசார், இன்று (செப்.6) தி.மலை மாவட்டத்திற்குப் புறப்பட்டுச் சென்றனர். என வேலூர் மாவட்ட SP தெரிவித்துள்ளார்.

News September 6, 2025

கிருஷ்ணகிரி மாவட்ட இரவு ரோந்து காவலர்கள் விவரம் வெளியீடு

image

கிருஷ்ணகிரி (செப்டம்பர்:6) இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் விவரம் காவல்துறை சார்பில் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டது. இரவு நேரங்களில் பெண்கள் குழந்தைகள் பொதுமக்கள் அவசர தேவைக்கு இலவச டோல்ப்ரீ என் 100 அல்லது காவலர்களின் தனிப்பட்ட மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டு பயனடைய கேட்டுக் கொள்ளப்படுகிறது.

News September 6, 2025

ராணிப்பேட்டை: 108 ஆம்புலன்ஸ் பணியிடங்களுக்கான நேர்காணல்

image

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இன்று (செப்.6) 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் மருத்துவ உதவியாளர் பணியிடங்களுக்கான நேர்காணல் நடைபெற்றது. நேர்காணலில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பணியாற்றத் தேவையான பயிற்சி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சி, மருத்துவ சேவைகளை வலுப்படுத்த உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News September 6, 2025

காஞ்சிபுரத்தில் தொழில் சிறக்க இங்கு போங்க!

image

காஞ்சிபுரம் காந்தி சாலையில் அமைந்துள்ள வழக்கறுத்தீஸ்வரர் சிவாலயம், முனிவர்கள், தேவர்கள் இடையே ஏற்பட்ட விவாதத்தை தீர்ப்பதற்காக, இறைவன் இங்கு தோன்றியதாக ஐதீகம். இக்கோயிலில், வழக்குகளில் சிக்கியவர்களும், தொழில் மற்றும் பதவியில் உயர்வு வேண்டுவோரும் 16 வாரங்கள் தீபம் ஏற்றி வலம் வந்தால் பிரச்சினைகள் தீரும் என நம்பப்படுகிறது. பல அரசியல்வாதிகள், பிரபலங்கள் இக்கோயிலில் வழிபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

News September 6, 2025

திருப்பூர் இரவு ரோந்து காவலர் விபரம்

image

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 06.09.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். அவிநாசி, பல்லடம், உடுமலைப்பேட்டை, காங்கேயம், தாராபுரம் ஆகிய பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகளின் அலுவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் அவசர தேவைக்கு 100 என்ற எண்ணை அழைக்கலாம்.

News September 6, 2025

தருமபுரி: வேளாண்மை அலுவலர் சங்கத் தலைவர் தேர்வு

image

தருமபுரி மாவட்ட வேளாண்மை அலுவலர்கள் சங்கத்திற்கு, நான்காவது முறையாக மாவட்டத் தலைவராக, காரிமங்கலம் உதவி வேளாண்மை அலுவலர் கிருஷ்ணன், ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவருக்கு, விவசாயிகள் மற்றும் வேளாண்மை அலுவலர்கள் தரப்பில் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

News September 6, 2025

தொப்பையாறு: மழைவெள்ள மீட்பு ஒத்திகை

image

தொப்பையாறு அணைப் பகுதியில், வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு, மழைவெள்ள மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி, இன்று (செப்.6) நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் சதீஷ் தலைமையில் நடைபெற்ற இந்த ஒத்திகை நிகழ்ச்சியில், மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை வீரர்கள், மழைவெள்ள காலங்களில் மேற்கொள்ள வேண்டிய மீட்பு நடவடிக்கைகள் குறித்துப் பயிற்சி மேற்கொண்டனர். அப்போது, மாவட்டக் SP மகேஸ்வரன், DRO உடன் இருந்தனர்.

News September 6, 2025

முதலிடம் நோக்கி தமிழ்நாடு – எம்.எல்.ஏ இனிகோ

image

திருச்சி எம்.எல்.ஏ இனிகோ இருதயராஜ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டு உள்ளார். இந்த பயணத்தின் வழியாக, ரூ.15,516 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. இதனால் தமிழக இளைஞர்களுக்கு 17,613 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். முதலிடம் நோக்கி தமிழ்நாடு சென்று கொண்டிருக்கிறது” என தெரிவித்துள்ளார்.

News September 6, 2025

பொன்னமராவதி: மருத்துவ முகாம்; ஆட்சியர் உத்தரவால் பந்தல்

image

பொன்னமராவதியில், தமிழக அரசின் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமை மாவட்ட ஆட்சியர் அருணா ஆய்வு செய்தபோது, வெயிலின் தாக்கம் காரணமாக பொதுமக்கள் காத்திருப்பதற்குப் போதிய இடவசதி இல்லாததால் சிரமப்படுவதைக் கண்டார். உடனடியாக அதிகாரிகளை அழைத்து, பொதுமக்கள் அமர்வதற்குப் பந்தல் அமைக்க உத்தரவிட்டார். இதையடுத்து, உடனடியாகப் பந்தல் அமைக்கப்பட்டு, பொதுமக்கள் நிம்மதியடைந்தனர்.

News September 6, 2025

மகளிருக்கான இலவச சணல் பை தயாரிப்பு பயிற்சி

image

இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் ரிதம் பெண்கள் சமூக பணி மையம் இணைந்து பெண்களுக்கான இலவச சணல் பை தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அரசு சான்றிதழ் வழங்கப்படும். தொடர்புக்கு, அன்னை தெரசா தையல் பள்ளி, ரோசரி பள்ளி வளாகம், மேட்டுப்பாளையம், தொடர்புக்கு: 99761 – 80670, 77388 – 50094 என்ற எண்களை தொடர்பு கொண்டு விவரங்களை பெறலாம்.

error: Content is protected !!