India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூரில் நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு – இந்தித் திணிப்பு என்று தமிழ்நாட்டின் உரிமைகளுக்கு எதிராகச் செயல்படும் ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு எதிரான தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும்! கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு வெள்ளி செங்கோல் நினைவு பரிசாக அமைச்சர் ஆவடி நாசர் சட்டமன்ற உறுப்பினர்கள் இணைந்து வழங்கினர்.
ஓசூர் டிவிஎஸ் மோட்டார் கம்பெனி லிட். கம்பெனியில் பணிபுரிய ஆண்கள், பெண்களுக்கான நேர்முகத் தேர்வு நாளை மார்ச் 13 முதல் மார்ச் 15 வரை காலை 7.00 மணி முதல் 9.30 மணி வரை ஓசூர் டிவிஎஸ் மோட்டார் கம்பெனி லிமிடெட் கம்பெனியில் நடைபெற உள்ளது. 10,+2, டிப்ளமோ, டிகிரி படித்தவர்கள் தக்க கல்வி சான்றுகளுடன் நேரில் வரவேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. தெரிந்தவர்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க.
கோவை மாவட்டத்தில், பெரியநாயக்கன்பாளையம், பேரூர், கருமத்தம்பட்டி, பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய பகுதிகளில் இன்று (மார்ச் 12) இரவு நேர ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உள்ளூர் அதிகாரியை, மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 டயல் செய்யலாம் என்று, கோவை மாநகர போலீசார், தங்களது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.
சேலத்தில் தபால் நிலைய சேவை மையம் மூலம் 8 ஆண்டுகளில் 1,47,771 பேருக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மேற்கு மண்டல அளவில் சேலம் முதலிடம் பெற்றுள்ளதாக அஞ்சல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது தினமும் 120 பேர் வரையில் நேர்காணல் நடத்தி பாஸ்போர்ட் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சேலம் மாநகரில் இரவு நேரங்களில் பணிபுரியும் காவல் அதிகாரிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. உங்கள் பகுதியில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டாலோ? அல்லது தொல்லை இருந்தாலும், கீழ்கண்ட எண்ணில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என மாநகர காவல் துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.
தாந்தோணி மலை அரசு கலைக்கல்லூரியில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் காலை 8 மணி முதல் நடைபெற உள்ளது. கரூர் அரவக்குறிச்சி தொகுதிகளை சேர்ந்த எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, ஐடிஐ டிப்ளமோ பனி நாடுனர்கள் இளைஞர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு எம்.பி செ.ஜோதிமணி அழைப்பு விடுத்துள்ளார்.
விழுப்புரம், டி.மேட்டுப்பாளையம் ஜெயந்திர சரஸ்வதி பள்ளி அருகில் கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி (ம) ஆராய்ச்சி மையத்தில் தமிழக அரசின் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் கறவை மாடு வளர்ப்பு பயிற்சி (SC/STமட்டும்) 14-03-2025, 15-03-2025, 17-03-2025 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதற்கு முன்பதிவு செய்து கொள்ளலாம்.
குமரி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில், இம்மாதம் 22ஆம் தேதி நாகர்கோவில் பயோனியார் குமார் சுவாமி கல்லூரியில் காலை 9 மணி முதல் 2 மணி வரை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.இதில் 100க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் 5000க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை நிரப்புவதற்கு தேர்வினை நடத்துகிறது என ஆட்சியர் தெரிவித்தார். நண்பருக்கு பகிரவும்
நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில்: பருத்தியானது வறட்சியை தாங்கி கொள்ளும். ஆனால் அதிக மழை அல்லது நீர் தேக்கத்தை தாங்காது. எனவே பதிப்புகளில் இருந்து விவசாயிகள் தங்களது பயிர்களை தற்காத்து கொள்ள வயலில் தேங்கி உள்ள நீரை வடிகால் வசதி செய்து வடிய வைக்க வேண்டும். பின்னர் காம்ப்ளக்ஸ் (19:19:19 ) உரம் தெளிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.
கணினி உதவியாளர்கள் மற்றும் எஸ்பிஎம் திட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு பணி வரன்முறை செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்பட 21 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி மாநிலம் தழுவிய ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை நாளை 13.03.2025 அன்று தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தினர் நடத்துகின்றனர்.திருவாரூர் மாவட்டத்தில் 10 ஊராட்சி ஒன்றியங்களில் இந்த போராட்டம் நடைபெறுகிறது.
Sorry, no posts matched your criteria.