India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தமுள்ள 5 காவல் உட்கோட்டங்களில், இன்று (மார்ச்12] இரவு ரோந்து காவல் அதிகாரிகளின் பெயர், அவர்களின் உட்கோட்டம் மற்றும் செல் நம்பர் ஆகியவற்றை, திருநெல்வேலி மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பொன்ரகு மேற்பார்வையில், இவர்கள் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என்றும், தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் கௌரவ தலைவரும், சட்ட உரிமைகள் கழகத்தின் மாநில தலைவருமான ரவி ஜான் இன்று மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இரவு 8 மணி அளவில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். அவரது உடலுக்கு புதுச்சேரி பத்திரிகையாளர்கள் சங்கத்தினர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
நாகர்கோவில் மாநகராட்சி குடிநீர் தேவைக்காக நீர்வளத்துறை மூலம் கோதை ஆறு பாசன திட்ட அணைகளில் இருந்து இன்று (12.03.2025) முதல் 31.05.2025 வரையிலான இடைப்பட்ட 81 நாட்களுக்கு கன்னியாகுமரி மாவட்ட பொதுமக்களின் நலன் கருதி 21.27 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விட தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் லேசான மண் சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும் பல இடங்களில் கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. இதன் காரணமாக எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால், வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரியவிட்டபடி செல்கின்றனர்.
சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுக்கவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொதுமக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள் இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று மார்ச்.12 இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விவரங்கள்.
கரூர் மாவட்டம் அரசு காலனியில் அதிமுக கட்சியின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77-வது ஆண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, கரூர் மாவட்ட MGR இளைஞர் அணி சார்பில், வருகின்ற 16.03.2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் 2:30 மணியளவில் 14-ம் ஆண்டு மாபெரும் குதிரை ரேக்ளா போட்டி நடைபெறுகிறது. அதுசமயம் போட்டில் கலந்து கொள்வார்கள் கட்சி அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 12.03.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். அவிநாசி, பல்லடம், உடுமலைப்பேட்டை, காங்கேயம், தாராபுரம் ஆகிய பகுதிகளில் இரவு நேர ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகளின் பெயர்கள் மற்றும் தொலைபேசி எண்கள் திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (12.03.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
தேர்தல் நடைமுறைகளை மேம்படுத்துவது குறித்து, அரசியல் கட்சி பிரமுகர்களுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை செய்ய உள்ளதாக அறிவுறுத்தியுள்ளது. தேர்தல் நடைமுறைகளை வரையறைகளுக்கு உட்பட்டு எவ்வாறு மேம்படுத்துவது என்பது குறித்து அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுடன் விரைவில் ஆலோசிக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது எனவும் ஆலோசனைகள், கருத்துக்களையும் 30.04.2025 க்குள் தெரிவிக்குமாறு ஆட்சியர் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூரில் நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு – இந்தித் திணிப்பு என்று தமிழ்நாட்டின் உரிமைகளுக்கு எதிராகச் செயல்படும் ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு எதிரான தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும்! கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு வெள்ளி செங்கோல் நினைவு பரிசாக அமைச்சர் ஆவடி நாசர் சட்டமன்ற உறுப்பினர்கள் இணைந்து வழங்கினர்.
Sorry, no posts matched your criteria.