India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சுமார் 22655 விவசாயிகள் பி.எம்.கிசான் ஊக்கத்தொகை பெறுகின்றனர். அதில் 10062 பேர் மட்டுமே நாளைய தேதி வரை அடையாள எண் பெறுவதற்காக பதிவு செய்துள்ளனர். இனிமேல், தனி அடையாள எண் பெற்ற விவசாயிகளுக்கு மட்டுமே 20வது தவணை ஊக்கத்தொகை ஏப்ரலில் விடுவிக்கப்படும் என ஆட்சியர் கூறியுள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று ( மார்ச் 12 ) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் 9884098100.
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் இன்று (12.03.2025) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல்துறை அதிகாரிகள் தொடர்பு எண்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். மேலும் 100 அல்லது தூத்துக்குடி மாவட்ட ஹலோ போலீஸ் 95141 44100 எண்ணை தொடர்பு கொள்ளலாம் என காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.
கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று (12.03.25) நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் மனு கொடுக்க வந்த பொதுமக்களிடமிருந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா தலைமையில் 12 மனுக்களை பெற்று மனு மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதில் மனு மீதான விசாரணையை விரைந்து முடிக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று இரவு 10:00 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே அவசர உதவிக்கு மேற்கொண்ட அதிகாரிகளின் தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம்.
சென்னையில் இன்று (12.03.025) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
தேனாம்பேட்டையில் உள்ள ஹயாத் தனியார் ஹோட்டலில் இன்று மாலை லிஃப்ட் அருந்து விழுந்து விபத்து ஏற்பட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பழுதான லிப்ட் ஏற்கனவே நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் பிற்பகலில் சரி செய்யும் பணி தொடங்கப்பட்டது. லிப்டை சரி செய்ய முற்பட்டபோது அங்கு வேலை பார்த்த தொழிலாளி லிப்ட் அறுந்து விழுந்ததில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
தென்காசி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இரவு நேரங்களில் காவல்துறை உதவி தேவைப்பட்டால் பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100 அல்லது மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்-9884042100 ஐ தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம், நாமக்கலில் இன்று நடைபெற்றது. இந்த குழு கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ 3.80 என நிர்ணயம் செய்யப்பட்டது. கோடை காலம், தீவன விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், முட்டையின் நுகர்வு சற்று குறைந்தது. இதன் காரணமாக முட்டை விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லாமல், தொடர்ந்து ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ3.80 ஆக நீடிக்கிறது.
வேலூர் மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய எல்லைக்கு உட்பட்ட ஊரக பகுதிகளில் புதிய வீடு கட்டுதல், வணிக கட்டிடங்கள், தொழிற்சாலை கட்டிடங்கள் கட்டுதல், விரிவாக்கம் செய்தல் போன்றவற்றிற்கான வரைபட அங்கிகாரம் இணைய தளம் மூலம் ஒற்றை சாளர முறையில் வழங்கப்பட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் முறையான அனுமதி பெறாமல் கட்டிடங்கள் கட்டப்பட்டால் அகற்றிட நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.