India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தர்மபுரி மாவட்டம் தீர்த்தமலை தேர்த்திருவிழாவை முன்னிட்டு அரூர் வருவாய் கோட்டத்திற்கு 18.03.2025 அன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த உள்ளூர் விடுமுறையை ஈடுகட்டும் வகையில் 29 /03 /2025 சனிக்கிழமை அன்று பணி நாளாக அறிவிக்கப்படுகின்றது இவ்வாறு தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் 11/03/2025 அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில்: பருத்தி வறட்சியை தாங்கி கொள்ளும். ஆனால் அதிக மழை அல்லது நீர் தேக்கத்தை தாங்காது. எனவே பதிப்புகளில் இருந்து விவசாயிகள் தங்களது பயிர்களை தற்காத்து கொள்ள வயலில் தேங்கி உள்ள நீரை வடிகால் வசதி செய்து வடிய வைக்க வேண்டும். பின்னர் காம்ப்ளக்ஸ் (19:19:19 ) உரம் தெளிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர். விவசாயிகளுக்கு SHARE பண்ணுங்க..
கடந்த ஆண்டு மாநிலம் முழுவதும் 4.80 லட்சம் பேர் நாய் கடியால் பாதிக்கப்பட்டனர் என்றும், அதில் அதிகபட்சமாக சேலம் மாவட்டத்தில் 6 பேரும், தர்மபுரி மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் தலா ஒருவரும் என மாநில முழுவதும் 43 பேர் உயிரிழந்தனர் எனவும், இறந்தவர்களில் 22 பேர் தடுப்பூசி முழுமையாக செலுத்தாமல் இருந்ததாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்!
விருதுநகரில் தாட்கோ மூலமாக ஆதிதிராவிடர், பழங்குடியினர் இனத்தை சார்ந்தவர்களுக்கு மருத்துவம் தொழில் சார்ந்த ஆங்கில தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. ஆதிதிராவிடர், பழங்குடியினர் இனத்தை சார்ந்த 21-35 வயதிற்குட்பட்டவர்கள் இதில் கலந்து கொள்ளலாம். இப்பயிற்சி முடித்தவுடன் தகுதியானவர்களுக்கு அயல்நாடுகளில் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். ஆர்வமுள்ளவர்கள் ww.tahdco.com இல் விண்ணப்பிக்கலாம்.
புதுச்சேரி சட்டபேரவை 15 ஆவது சட்டபேரவையின் ஆறாவது கூட்டதொடர் கடந்த 10ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. மூன்றாம் நாள் நேற்று காலை 9.30 மணியளவில் 2025-26 ஆம் ஆண்டுக்கான முழுமையான பட்ஜெட்டை முதல்வர் ரங்கசாமி செய்த நிலையில் இன்று மாலை 6 மணி அளவில் கவர்னர் மாளிகையில் கவர்னர் கைலாஷ்நாதனை மரியாதையை நிமித்தமாக சந்தித்து பேசினார். மேலும் கவர்னரக்கு பட்ஜெட் புத்தகத்தையும் முதல்வர் வழங்கினார்.
நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அதிகாரிகள் இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று (12/03/2025) இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்: நாமக்கல் – கபிலன் (9498178628), ராசிபுரம் – துர்க்கைசாமி (9498183251), திருச்செங்கோடு – தீபா (9443656999) ,வேலூர் – ராதா (9498174333) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.
நிலக்கோட்டை ஒன்றியம் எத்திலோடு ஊராட்சியில் குப்பை அகற்றும் வாகனம் எவ்வாறு இயக்கப்படுகிறது என்பதை அறிய திண்டுக்கல் ஆட்சியர் சரவணன் இன்று பெண் தூய்மை பணியாளர் உடன் குப்பை அகற்றும் வாகனத்தில் பயணித்தார். ஆட்சியரின் இந்த நடவடிக்கையை சற்றும் அதிகாரிகள் எதிர்பார்க்கவில்லை. இந்நிகழ்ச்சியில் வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (12.03.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருப்பாச்சூரில் நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு – இந்தித் திணிப்பு என்று தமிழ்நாட்டின் உரிமைகளுக்கு எதிராகச் செயல்படும் ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு எதிரான தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும்! கண்டனப் பொதுக்கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. இந்த பொதுக் கூட்டத்தில் ஏராளமான கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். ட்ரோன் காட்சிகளை மேலே உள்ள புகைப்படத்தில் காணலாம்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சுமார் 22655 விவசாயிகள் பி.எம்.கிசான் ஊக்கத்தொகை பெறுகின்றனர். அதில் 10062 பேர் மட்டுமே நாளைய தேதி வரை அடையாள எண் பெறுவதற்காக பதிவு செய்துள்ளனர். இனிமேல், தனி அடையாள எண் பெற்ற விவசாயிகளுக்கு மட்டுமே 20வது தவணை ஊக்கத்தொகை ஏப்ரலில் விடுவிக்கப்படும் என ஆட்சியர் கூறியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.