Tamilnadu

News March 12, 2025

மனத்துயரம் நீக்கும் தேவபுரீசுவரர், வேதநாதர் கோவில்

image

தி.மலை மாவட்டம் செய்யாறு அருகே அருள்மிகு தேவபுரீசுவரர், வேதநாதர் கோவில் உள்ளது. இங்கு வந்து வழிபட்டால் மனத்துயரம் நீங்கும். தலத்தில் உள்ள நாகலிங்கத்தை அபிஷேகம் செய்தால் திருமண தடை நீங்கும். இத்தலத்தில் உள்ள பனைமரத்தின் பனம்பழங்களை சாப்பிட்டால் கண்டிப்பாக குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க.

News March 12, 2025

குழந்தை வரம் அருளும் நல்லாடை அக்னீஸ்வரர்

image

மயிலாடுதுறை மாவட்டம் நல்லாடை கிராமத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ அக்னீஸ்வரர் கோயில். பரணி நட்சத்திர பரிகார ஸ்தலமாக விளங்கும் இங்கு அர்த்தநாரீஸ்வரர் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார். பார்வதி தேவியின் சாபத்தால் ஒளியை இழந்த சூரியன் இங்கு சாபவிமோசனம் பெற்றதாக ஐதீகம் குழந்தை வரம், கணவன் மனைவி ஒற்றுமை வேண்டி அக்னீஸ்வரரை வழிபட்டால் கை மேல் பலன் கிடைக்கும். நண்பர்களுக்கு பகிரவும், Share It

News March 12, 2025

தென்காசி: 4 மொழிகளில் இசையமைத்த இசையமைப்பாளர்

image

தென்காசி மாவட்டம் இரவணசமுத்திரத்தை சேர்ந்தவர் பரத்வாஜ். முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர். தமிழில் காதல் மன்னன், ஜேஜே ,ஜெமினி, அட்டகாசம் என பல படங்களுக்கும், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளிலும் இசையமைத்துள்ளார். 2008-ம் ஆண்டில் கலைமாமணி விருது, 2 முறை பிலிம்பேர் விருதும் பெற்றுள்ளார். அஜித்க்கு காதல் மன்னன் பெயரை பெற்று தந்த படத்திருக்கும் இசை அமைத்தவரும் இவரே. *ஷேர் செய்யவும்*

News March 12, 2025

குழந்தை வரம் அருளும் நல்லாடை அக்னீஸ்வரர்

image

மயிலாடுதுறை மாவட்டம் நல்லாடை கிராமத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ அக்னீஸ்வரர் கோயில். பரணி நட்சத்திர பரிகார ஸ்தலமாக விளங்கும் இங்கு அர்த்தநாரீஸ்வரர் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார். பார்வதி தேவியின் சாபத்தால் ஒளியை இழந்த சூரியன் இங்கு சாபவிமோசனம் பெற்றதாக ஐதீகம் குழந்தை வரம், கணவன் மனைவி ஒற்றுமை வேண்டி அக்னீஸ்வரரை வழிபட்டால் கை மேல் பலன் கிடைக்கும். நண்பர்களுக்கு பகிரவும், Share It

News March 12, 2025

உதவித்தொகை வழங்குவது தொடர்பான ஆய்வுக் கூட்டம்

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு நிலுவையில் உள்ள கல்வி உதவித் தொகையினை உடனடியாக வழங்கும் வகையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம் ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

News March 12, 2025

மண்டபம் மீனவர்கள் 2 நாள் கடலுக்கு செல்லத் தடை

image

நாளை மார்ச்.14 மற்றும் நாளை மறுநாள் மார்ச்.15 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள கச்சத்தீவு திருவிழா பாதுகாப்பு கருதி மண்டபம் தென் பகுதி விசைப் படகுகளுக்கு நாளையும், மண்டபம் வட பகுதி விசைப் படகுகளுக்கு நாளை மறுநாளும் மீன்பிடி அனுமதிச் சீட்டு வழங்கப்படாது என மண்டபம் மீன்வளம் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

News March 12, 2025

மாநில பட்ஜெட்டை அதிமுக வரவேற்கிறது – அன்பழகன்

image

புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன், இன்றைய பட்ஜெட் உரையின் மீது, “அரசு சார்பு நிறுவனங்களின் மூலதன சொத்துக்களை உருவாக்க 300 கோடி கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது முன்னுக்குப்பின் முரணாக உள்ளது. பட்ஜெட், அரசின் நிதியுதவியை பெற்று பயன்பெறும் ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு வாழ்க்கை தரத்தை உயர்த்தும். ஒருசில குறைகள் இருந்தாலும் அதிமுக இந்த பட்ஜெட்டை வரவேற்கிறது” என்று தெரிவித்தார்.

News March 12, 2025

சென்னையின் டாப் 5 சிறப்புகள்

image

1. இந்தியாவிலேயே மிகப்பழமையான ஷாப்பிங் மால் ஸ்பென்சர் பிளாசா தான். 2. உலகிலேயே 2வது பெரிய நீதிமன்றம் நமது மெட்ராஸ் உயர் நீதிமன்றம். 3.கோயம்பேடு பேருந்து நிலையமே ஆசியாவின் பெரிய பேருந்து நிலையமாகும். ஆசியாவிலேயே பெரிய நூலகம் அண்ணா நூற்றாண்டு நூலகம். 5. இந்தியாவிலேயே மக்களின் பார்வைக்கு உருவாக்கப்பட்ட முதல் விலங்கியல் பூங்கா வண்டலூர் விலங்கியல் பூங்கா தான். மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.

News March 12, 2025

திருவாரூர் அரசு கல்லூரி மாணவர்கள் போராட்டம்

image

திருவாரூர் அருகே கிடாரங்கொண்டான் பகுதியில் செயல்பட்டு வரும் திரு.வி.க அரசு கலைக்கல்லூரியில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய கல்விக் கொள்கை மற்றும் மும்மொழி கொள்கைக்கு எதிராக இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் கல்லூரி நுழைவாயில் முன்பு திடீர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

News March 12, 2025

வற்றாத, நோய் தீர்க்கும் தீர்த்தம் கொண்ட தீர்த்தமலை

image

தீர்த்தங்களால் சூழப்பட்ட அற்புதமான மலையாக தீர்த்தமலை நோய் தீர்க்கும் தலமாக விளங்குகிறது. இங்குள்ள தீர்த்தத்தில், அற்புத மூலிகைகளின் சத்து கலந்து விளங்குவதால், நீராடுபவர்கள் உடற்பிணி, உளப்பிணி யாவும் தீர்ந்து, புத்துணர்வும், புதுவாழ்வும் பெறுகின்றனர். மேலும் இக்கோயிலில் கடன் தொல்லை தீர வேண்டுவதுடன், வீடு கட்டவும், குழந்தை வரம் வேண்டி தொட்டில் கட்டி வழிபடுகின்றனர். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!