Tamilnadu

News March 12, 2025

தபால் சேவை மூலம் பாஸ்போர்ட்: சேலம் முதலிடம்

image

சேலத்தில் தபால் நிலைய சேவை மையம் மூலம் 8 ஆண்டுகளில் 1,47,771 பேருக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மேற்கு மண்டல அளவில் சேலம் முதலிடம் பெற்றுள்ளதாக அஞ்சல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது தினமும் 120 பேர் வரையில் நேர்காணல் நடத்தி பாஸ்போர்ட் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News March 12, 2025

சேலம் மாநகர இரவு ரோந்து போலீசார் விவரம்

image

சேலம் மாநகரில் இரவு நேரங்களில் பணிபுரியும் காவல் அதிகாரிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. உங்கள் பகுதியில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டாலோ? அல்லது  தொல்லை இருந்தாலும், கீழ்கண்ட எண்ணில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என மாநகர காவல் துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.

News March 12, 2025

கரூரில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

image

தாந்தோணி மலை அரசு கலைக்கல்லூரியில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் காலை 8 மணி முதல் நடைபெற உள்ளது. கரூர் அரவக்குறிச்சி தொகுதிகளை சேர்ந்த எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, ஐடிஐ டிப்ளமோ பனி நாடுனர்கள் இளைஞர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு எம்.பி செ.ஜோதிமணி அழைப்பு விடுத்துள்ளார்.

News March 12, 2025

விழுப்புரத்தில் கறவை மாடு வளர்ப்பு பயிற்சி

image

விழுப்புரம், டி.மேட்டுப்பாளையம் ஜெயந்திர சரஸ்வதி பள்ளி அருகில் கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி (ம) ஆராய்ச்சி மையத்தில் தமிழக அரசின் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் கறவை மாடு வளர்ப்பு பயிற்சி (SC/STமட்டும்) 14-03-2025, 15-03-2025, 17-03-2025 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதற்கு முன்பதிவு செய்து கொள்ளலாம்.

News March 12, 2025

குமரியில் வேலை தேடுவோர் கவனத்திற்கு

image

குமரி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில், இம்மாதம் 22ஆம் தேதி நாகர்கோவில் பயோனியார் குமார் சுவாமி கல்லூரியில் காலை 9 மணி முதல் 2 மணி வரை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.இதில் 100க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் 5000க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை நிரப்புவதற்கு தேர்வினை நடத்துகிறது என ஆட்சியர் தெரிவித்தார். நண்பருக்கு பகிரவும்

News March 12, 2025

திருவாரூர் மாவட்ட பருத்தி விவசாயிகள் கவனத்திற்கு

image

நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில்: பருத்தியானது வறட்சியை தாங்கி கொள்ளும். ஆனால் அதிக மழை அல்லது நீர் தேக்கத்தை தாங்காது. எனவே பதிப்புகளில் இருந்து விவசாயிகள் தங்களது பயிர்களை தற்காத்து கொள்ள வயலில் தேங்கி உள்ள நீரை வடிகால் வசதி செய்து வடிய வைக்க வேண்டும். பின்னர் காம்ப்ளக்ஸ் (19:19:19 ) உரம் தெளிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.

News March 12, 2025

திருவாரூர் மாவட்டத்தில் நாளை வேலைநிறுத்தம்

image

கணினி உதவியாளர்கள் மற்றும் எஸ்பிஎம் திட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு பணி வரன்முறை செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்பட 21 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி மாநிலம் தழுவிய ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை நாளை 13.03.2025 அன்று தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தினர் நடத்துகின்றனர்.திருவாரூர் மாவட்டத்தில் 10 ஊராட்சி ஒன்றியங்களில் இந்த போராட்டம் நடைபெறுகிறது.

News March 12, 2025

குழந்தை பாக்கியம் அருளும் ரத்தினகிரி பாலமுருகன் கோவில்

image

வேலூர் மாவட்டம் திருமணிக்குன்றம் அருகே உள்ளது ரத்தினகிரி பாலமுருகன் கோவில். இக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற 14ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பழமையான கோவிலாகும். குழந்தை பாக்கியம் வேண்டி இங்கு வந்து வழிபட்டால் பாலமுருகனே குழந்தையாக பிறப்பார் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News March 12, 2025

2 கடைகளுக்கு சீல் வைத்து அபராதம் விதிப்பு

image

சோளிங்கர் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள கடைகளில் குட்கா விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சந்திரகலாவுக்கு புகார் சென்றது. அதை தொடர்ந்து மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் சுதாகர் மற்றும் போலீசார் இணைந்து சோதனை நடத்தினர். அதில் குட்கா விற்பனை செய்த இரண்டு கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு தலா ரூபாய் 25000 அபராதம் விதிக்கப்பட்டது.

News March 12, 2025

நெல்லை: பிஷப் கால்டுவெல் வாழ்ந்த ஊர்

image

திசையன்விளை அருகே இடையன்குடியில் கால்டுவெல் நினைவு இல்லம் அமைந்துள்ளது. தமிழ்மொழி உலகின் முதல் மொழி என்றும் மலையாளம், தெலுங்கு, கன்னடம் எல்லாம் தமிழ் மற்றும் பிற மொழி கலப்பில் வந்தது என கண்டுபிடித்து திராவிட மொழிகளுக்கு ஒப்பிலக்கணம் எழுதியவர் இவரே. அயர்லாந்திருந்து தன்னுடைய 24வது வயதில் இந்தியா வந்து 50 ஆண்டுகள் தங்கியிருந்து மொழி குறித்து ஆய்வு செய்து புத்தகங்களையும் எழுதியுள்ளார். SHARE IT

error: Content is protected !!