India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவாரூர் அருகே கிடாரங்கொண்டான் பகுதியில் செயல்பட்டு வரும் திரு.வி.க அரசு கலைக்கல்லூரியில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய கல்விக் கொள்கை மற்றும் மும்மொழி கொள்கைக்கு எதிராக இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் கல்லூரி நுழைவாயில் முன்பு திடீர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
தீர்த்தங்களால் சூழப்பட்ட அற்புதமான மலையாக தீர்த்தமலை நோய் தீர்க்கும் தலமாக விளங்குகிறது. இங்குள்ள தீர்த்தத்தில், அற்புத மூலிகைகளின் சத்து கலந்து விளங்குவதால், நீராடுபவர்கள் உடற்பிணி, உளப்பிணி யாவும் தீர்ந்து, புத்துணர்வும், புதுவாழ்வும் பெறுகின்றனர். மேலும் இக்கோயிலில் கடன் தொல்லை தீர வேண்டுவதுடன், வீடு கட்டவும், குழந்தை வரம் வேண்டி தொட்டில் கட்டி வழிபடுகின்றனர். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க
மதுரை புது விளாங்குடி கணபதி முதல் தெருவை சேர்ந்தவர் இளமாறன் .மதுரையில் உள்ள காமராஜர் யூனிவர்சிட்டியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவர் செமஸ்டர் தேர்வுக்கு பணம் கட்டவில்லை என கூறப்படுகிறது. இதனால் தேர்வு எழுத முடியாத விரக்தியில் இன்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். காலையிலேயே இவரது தயார் பீஸ் கட்டியது தெரியாமல் மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .
புதுக்கோட்டை மாவட்ட முத்தமிழ் நாடக நடிகர் சங்கத்தின் தலைவராக 8 முறை சிறப்பான முறையில் செயலாற்றியவரும், தென்னிந்திய நடிகர் சங்கம்; தமிழ்நாடு இயல் – இசை – நாடக நடிகர் சங்கங்களின் செயற்குழு உறுப்பினராக பணியாற்றிய கலைமாமணி S.M.இசையரசன் இயற்கை எய்தினார். அரசியல் பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.
தூத்துக்குடி இனிப்பு கடைகளில் சங்கிலி தொடர்போல் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் கருப்பட்டி மிட்டாய், சீனி மிட்டாய் தூத்துக்குடி ஸ்பெஷல் ரெசிபி ஆகும். சீனி கொண்டு தயாரிக்கும் மிட்டாய் வெள்ளை நிறத்தில் காணப்படும். கருப்பட்டி கொண்டு தயாரிக்கப்படும் மிட்டாய் கருப்பு நிறத்தில் காணப்படும். திருவிழாக்களில் இந்த மிட்டாய் கடைகள் கண்டிப்பாக இருக்கும்.*நண்பர்களுக்கு பகிர்ந்து நினைவு படுத்துங்கள்*
புதுச்சேரி எதிர்கட்சித் தலைவர் சிவா இன்று செய்தியாளர்கள் சந்தித்தார். அப்போது, “கடந்த பட்ஜெட்டில் அறிவித்த திட்டங்கள் எல்லாம் கிடப்பில் உள்ள நிலையில், மணக்க மணக்க பட்ஜெட் உரை நிகழ்த்தி இருக்கிறார் முதல்வர். ஆனால் வெறும் காகிதப்பூவாக இருக்கிறது. புதுச்சேரியின் வருவாய், செலவினங்கள், கடன் வாங்க முடியாத நிலை ஆகியவற்றை கணக்கில் கொள்ளாமல் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளார்கள்” என்று தெரிவித்தார்.
எண்ணூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சகோதரி கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து, திருவள்ளூர் மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. 2018ஆம் ஆண்டு ராஜ்குமார் தன் மனைவியின் சகோதரிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். புகாரின் அடிப்படையில், அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஆலத்தூர் தாலுகா, மாவிலங்கை கிராமத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 225 பயனாளிகளுக்கு ரூபாய் 1.68 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்டங்களை மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு வழங்கினார். இம்முகாமில் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
ஆம்பூர் தாலுகா பணங்காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் இனிய குமார் வயது (26). ஆட்டோ டிரைவரான இவர் மீது கடந்த 2020 ஆம் ஆண்டு ஆம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போஸ்கோ வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இந்த வழக்கில், நேற்று திருப்பத்தூர் மாவட்ட நீதிமன்றம் நீதிபதி மீனாகுமாரி ஆட்டோ டிரைவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார்.
செந்துறையில் வருவாய் கிராமத்தில் நடைபெற்ற பல்வேறு துறைகள் சார்ந்த கண்காட்சியில் நவதானியம் வகையான அரிசிகளை கண்காட்சியில் அமைத்திருந்தனர். அதனை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் பல வகையான அரிசிகள் நெல் வகைகள் என மாவட்ட ஆட்சியர் கேட்டு அறிந்தார். இதில் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.