Tamilnadu

News March 12, 2025

சேலம் எம்பிக்கு புதிய பொறுப்பு

image

திமுக சார்பில் ஊடக விவாதங்களில் கலந்து கொள்வோருடன், கட்சியின் சேலம் மேற்கு மாவட்டச் செயலாளரும், சேலம் எம்.பி.யுமான டி.எம்.செல்வகணபதி மற்றும் அருண் நேரு எம்.பி, தங்க தமிழ்ச்செல்வன் எம்.பி., நாக நந்தினி, ராஜா தமிழ்மாறன் ஆகிய பேச்சாளர்களும் இணைந்து பங்கு பெறுவர் என தி.மு.க. தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

News March 12, 2025

குளிர்பதன கிடங்கு வாடகைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்

image

கரூர் ராயனூரில் ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் 25 மெட்ரிக் டன் குளிர்பதனக் கிடங்கு அமைந்துள்ளது. இந்த கிடங்கில் பழங்கள், காய்கறிகள், உலர் பொருட்கள் போன்ற வேளாண் விளை பொருட்களை வாடகை அடிப்படையில் ஒப்பந்தம் மேற்கொண்டு விவசாயிகள், வியாபாரிகள், தொழில்முனைவோர், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் ஆகியோர் பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் இன்று கேட்டுக் கொண்டுள்ளார்.

News March 12, 2025

15 மண்டலங்களில் சார்ஜிங் நிலையங்கள்

image

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில், மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்கள் அமைக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. பசுமை எரிசக்தி கழகத்துடன் இணைந்து, 89 பார்க்கிங் இடங்களில் சார்ஜிங் நிலையங்களை அமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. மாநகராட்சி நிலங்களை அடையாளப்படுத்தியதற்கு பிறகு சார்ஜிங் நிலையங்கள் அமைப்பதற்கான பணிகள் தொடங்க உள்ளது. இதன் மூலம் எலக்ட்ரிக் கார், பைக்கிற்கு சார்ஜ் செய்யலாம்.

News March 12, 2025

பரங்கிப்பேட்டை அருகே வாகனம் மோதி முதியவர் பலி

image

பரங்கிப்பேட்டை அருகே ஆவணங்குப்பத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன் நேற்று மெயின் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அடையாளம் தெரியாத வாகனம் இவர் மீது மோதியதில் சம்பவ இடத்தில் உயிர் இழந்தார். தகவல் அறிந்த போலீச உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அடையாளம் தெரியாத கார் ஓட்டியது யார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 12, 2025

தபால் சேவை மூலம் பாஸ்போர்ட் வழங்குவதில் சேலம் முதலிடம்

image

சேலத்தில் தபால் நிலைய சேவை மையம் மூலம் 8 ஆண்டுகளில் 1,47,771 பேருக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மேற்கு மண்டல அளவில் சேலம் முதலிடம் பெற்றுள்ளதாக அஞ்சல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது தினமும் 120 பேர் வரையில் நேர்காணல் நடத்தி பாஸ்போர்ட் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News March 12, 2025

சட்டப்பேரவையை ஒத்தி வைத்தார் சபாநாயகர்

image

2025 – 2026ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை, நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். ரூ 13,600 கோடிக்கு நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து, முதலமைச்சர் ரங்கசாமி உரையாற்றினார். விவசாய தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணமாக ரூ. 2,000 வழங்கப்படும் என்று பேரவையில் ரங்கசாமி அறிவித்தார். பின்னர் சட்டப்பேரவையை நாளை (மா.13) சபாநாயகர் ஒத்தி வைத்தார்.

News March 12, 2025

தென்காசி: கட்சியில் இல்லாதவரின் பெயரை சேர்த்த பாஜகவினர்

image

தென்காசி மாவட்டம் சுரண்டை தொழிலதிபர் எஸ்வி கணேசன் ஒரு மறுப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார். அறிக்கையில் புளியங்குடியில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் என் அனுமதியின்றி எனது பெயரை தவறாக (Missuse) பாஜகவினர் விளம்பர நோட்டீஸில் போட்டுள்ளார்கள். இதில் எனக்கு உடன்பாடு இல்லை. உடன்பாடு இல்லாத இயக்கத்தின் நோட்டீஸ்ஸில் என் அனுமதி இன்றி எனது பெயரை போட்டதை நான் வன்மையாக கண்டிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

News March 12, 2025

முதலமைச்சர் புதிய மருந்தகங்களுக்கு கலெக்டர் அழைப்பு

image

விழுப்புரம் மாவட்டத்தில் முதல்வர் மருந்தகங்கள் திறக்க விண்ணப்பிக்கலாம் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அப்துல் ரகுமான் தெரிவித்துள்ளார். தமிழக அரசு முதல் கட்டமாக 1000 இடங்களில் முதல்வர் மருந்தகங்களை திறந்து மக்களுக்கு சேவை செய்து வருகிறது. அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் டி.ஃபார்ம் முடித்தவர்கள் தொழில் தொடங்க முதல்வர் மருந்தகங்கள் அமைக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

News March 12, 2025

மயிலாடுதுறை வழியாக தாம்பரத்திற்கு சிறப்பு ரயில்

image

மயிலாடுதுறை மார்ச் 12  திருச்சியில் இருந்து மயிலாடுதுறை மார்க்கமாக தாம்பரம் வரை செல்லக்கூடிய சிறப்பு ரயில் ஏப்ரல் 4ஆம் தேதியிலிருந்து தொடங்குகிறது. வாரத்தில் மூன்று நாட்கள் வெள்ளி, சனி, ஞாயிறு திருச்சியில் இருந்து 5.35க்கு புறப்பட்டு மதியம் 12.30க்கு தாம்பரம் சென்றடைகிறது. தாம்பரத்தில் இருந்து 3.45 மதியம் புறப்பட்டு இரவு11.40 திருச்சி வருகிறது. ரயில்வே செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 12, 2025

‘செந்தமிழ் நாட்டு தமிழச்சியே’ ரீல்ஸ் போட்டி

image

சென்னையில், செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை சார்பில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட ‘செந்தமிழ் நாட்டு தமிழச்சி’ பாடலுக்கான ரீல்ஸ் போட்டி நடைபெறுகிறது. புதிய ஹூக் ஸ்டெப் உருவாக்கி #செந்தமிழ் நாட்டு தமிழச்சி’ என்ற ஹாஷ்டாக்குகளை பயன்படுத்தி சமூக ஊடக கணக்குகளில் பகிரவும். உங்கள் படைப்புகளை வரும் 31ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். சிறந்த படைப்புக்கு அமைச்சர் சாமிநாதன் பரிசு வழங்குகிறார்.

error: Content is protected !!