Tamilnadu

News March 12, 2025

எஸ்.பி அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம்

image

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் இன்று நடைபெற்றது . மேலும் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்திருந்த பொதுமக்கள் தங்களது புகார் மனுக்களை வழங்கினர். மேலும் 11 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டது . தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி. ஸ்டாலின் பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

News March 12, 2025

குமரி சுற்றுலாத் திட்டத்திற்கு ரூ.2000 கோடி ஒதுக்க கோரிக்கை

image

குமரி மாவட்டத்தின் சுற்றுலா மேம்பாட்டிற்கு ரூ.2000 கோடி ஒதுக்க பாராளுமன்றத்தில் விஜய் வசந்த் எம்.பி கோரிக்கை விடுத்துள்ளார். “இயற்கை எழில் நிறைந்த கன்னியாகுமரி மாவட்டத்தை உலகின் தலை சிறந்த சுற்றுலா தலமாக மாற்றிட மத்திய அரசு முன் வரவேண்டும்; அதற்காக சிறப்பு நிதியாக ரூபாய் 2000 கோடியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும்” எனவும் கேட்டுக்கொண்டுள்ளர்.

News March 12, 2025

சட்டபேரவை முன்பு அல்வா கொடுக்கும் நூதன போராட்டம்!

image

கோவில்பட்டியில் அரசு அலுவலகங்கள் நிறைந்துள்ள கோர்ட் சாலையை சீரமைத்து புதிய சாலை அமைக்க வலியுறுத்தி பலமுறை போராட்டங்கள் நடத்தியும், இதுவரை நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து நித்திரையில் இருக்கும் அரசு அதிகாரிகளை கண்டித்து சட்டமன்றம் முன்பு மார்ச் 19ஆம் தேதி அல்வா கொடுக்கும் நூதன போராட்டம் நடத்தப்போவதாக தூத்துக்குடி வடக்கு மாவட்ட த.மா.கா. சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 12, 2025

பவானி: சங்கமேஸ்வரர் கோயில்!

image

ஈரோடு, பவானி கூடுதுறையில், புகழ்பெற்ற சங்கமேஸ்வரர் கோயில் உள்ளது. தமிழகத்தில் சிறந்த பரிகார தலங்களில் இதுவும் ஒன்று. கூடுதுறையில் நீராடி, சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கும், சங்கமேஸ்வரரை வணங்கினால், சகல தோஷங்களும் நீங்குமாம். 1804 ஆம் ஆண்டில், கோவை ஆட்சியராக இருந்த வில்லியம் காரோ, ஆபத்து வேளையில், தன்னுயிரைக் காப்பாற்றியதற்காக, இக்கோயில் அம்மனுக்குக் காணிக்கையாக, கட்டில் ஒன்றை வழங்கியுள்ளாராம்.

News March 12, 2025

கள்ளத் துப்பாக்கி எங்கிருந்து வந்தது? துருவி துருவி விசாரணை

image

பெல் தொழிற்சாலையில் பொதுமேலாளராக பணியாற்றிய சண்முகம் சுட்டுக்கொண்டு இறந்த துப்பாக்கிக்கு உரிய உரிமம் இல்லை. அது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி என்பதும், சண்முகம் டெல்லியில் பணியாற்றியபோது அந்தத் துப்பாக்கியை வாங்கி இருக்கலாம் என்றும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த துப்பாக்கியை யாரிடம் இருந்து வாங்கி இருக்கிறார் என்ற கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது.

News March 12, 2025

நடவடிக்கை எடுக்காத இன்ஸ்பெக்டர் டிஸ்மிஸ்

image

நாகையில் 6.11 .2020 முதல் 24.4.2022 வரை இன்ஸ்பெக்டராக பணி புரிந்தவர் பெரியசாமி. அப்போது நாகை கீச்சாங்குப்பத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த இருந்த 400 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்காமல் குற்றவாளிகளுக்கு சாதகமாக பெரியசாமி இருந்துள்ளார். இதுகுறித்த புகாரில் துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டு பெரியசாமி அதிரடியாக டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார்.

News March 12, 2025

அரியலூர்: போக்குவரத்துதுறை காலி பணியிடம் குறித்த அறிவிப்பு

image

தமிழ்நாடு அரசு போக்குவரத்துகழகம் (கும்ப) லிட், திருச்சி மண்டல பணியிடங்களுக்கான ஆண், பெண் இருபாலர் ஓட்டுநர் உடன் நடத்துனர் பணிக்காலியிடம் அரியலூர் மண்டலத்திற்கு நிரப்புதல் தொடர்பாக அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள நபர்கள் ஏப்-14 ஆம் தேதிக்குள் அலுவலக வேலைநாட்களில் உரிய ஆவணங்களுடன் நேரில்சென்று பதிவினை சரிபார்க்க ஆட்சியர் அறிவிப்பு.

News March 12, 2025

கோவை: மீண்டும் கனமழை… மக்களே எச்சரிக்கை

image

தமிழ்நாட்டில் இன்று (மார்ச் 12) 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனியில் இன்று (மார்ச் 12) கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இன்றும், நாளையும் (மார்ச் 12, 13) மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News March 12, 2025

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று, “உங்கள் செல்போனில் புதிய செயலியை (Apps) பதிவிறக்கம் செய்யும்போது கவனம் தேவை, உங்கள் டேட்டா, தொடர்புகள் உள்ளே செல்ல அனுமதி கேட்டால் கொடுக்க வேண்டாம்” என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை திண்டுக்கல் மாவட்ட காவல்துறை இன்று வெளியிட்டுள்ளது.

News March 12, 2025

சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்த அமைச்சர்

image

ராணிப்பேட்டை நகராட்சி வார்டு எண் 16 சீயோன் நகர் கூட்ஸ்செட் சாலை 30 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாடு நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 55 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைக்கும் பணியை இன்று அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா, நகராட்சி தலைவர் சுஜாதா வினோத் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!