Tamilnadu

News March 12, 2025

மயிலாடுதுறை இரட்டை கொலை: 3 பேர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்

image

மயிலாடுதுறை, முட்டம் கிராமத்தில், ஹரிஷ், சக்தி ஆகிய 2 வாலிபர்கள் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் சாராய வியாபாரிகளான முட்டம் வடக்குத் தெருவை சேர்ந்த முவேந்தன்(24), இவரது சகோதரர் தங்கதுரை(28), உறவினர் ராஜ்குமார்(34) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், 3 பேரையும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் அடைக்க கலெக்டர் ஸ்ரீகாந்த் உத்தரவிட்டுள்ளார்.

News March 12, 2025

வேங்கைவயல் சம்பவ வழக்கில் 3 பேருக்கு பிணை

image

வேங்கைவயல் பட்டியலினக் குடியிருப்பு பகுதியில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தில், அதே குடியிருப்பைச் சோ்ந்த காவலா் முரளிராஜா, முத்துக்கிருஷ்ணன் மற்றும் சுதா்சன் ஆகிய 3 போ் மீது சிபி சிஐடி போலீஸாா் குற்றம்சாட்டியுள்ளனா். இதன்படி, மூவரும் நேற்று காலை நீதிமன்றத்தில் ஆஜராகினா். பொறுப்பு நீதிபதி டி. பூா்ணிமா முன்னிலையில் 3 பேருக்கும் பிணை வழங்கினாா்.

News March 12, 2025

தோப்பூர் அருகே சாலை விபத்தில் பெண் பலி

image

 கள்ளக்குறிச்சியில் இருந்து  கச்சராபாளையம் செல்லும் சாலையில் கடத்தூர் ரோடு அருகில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த மணிபாரதி மாத்தூர் கிராமத்தில் வசிப்பவர் தனியார் பேருந்து மோதியதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் உடனடியாக கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவரது உடல் உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

News March 12, 2025

ஈரோட்டில் மழை! ஸ்தம்பித்தது

image

வழிமண்டல கீழடுக்கு சுழற்றி காரணமாக ஈரோட்டில் பல்வேறு பகுதிகளிலும் நேற்று இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதன்காரணமாக பல்வேறு பகுதிகளிலும் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. மேட்டூர்- பவானி சாலையில் பெரிய புளியமரம் வேருடன் பெயர்ந்து சாலையில் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த திடீர் மழையால், வெப்பம் தணிந்து மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும், இன்றும் மழைக்கு வாய்ப்புள்ளது. ( Share பண்ணுங்க)

News March 12, 2025

குட்கா, புகையிலை விற்பனை செய்த கடைகளுக்கு சீல்

image

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நகர காவல் நிலைக்கு உட்பட்ட பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை போன்ற  பொருட்களை விற்பனை செய்த நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் இன்று உணவு பாதுகாப்பு அலுவலர் ரவிச்சந்திரன் போலீசார் தலைமையில் கடைக்கு சீல் வைக்கப்பட்டு ரூ.25,000 அபராதம் விதிக்கப்பட்டது.

News March 12, 2025

தாய் இறந்த துக்கம் தாங்காமல் மகன் விஷம் குடித்து தற்கொலை

image

தேனி நகர் பாரஸ்ட் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் தமிழரசன்(47) இவர் ஆட்டோ ஓட்டுநர். சமீபத்தில் இவரது தாய் முத்தம்மாள் இறந்தார். இதனால் தானும் சாகப்போகிறேன் எனக் கூறியபடி இருந்தவர் மார்ச்.6ம் தேதி மாலை தேனி பழைய பஸ்நிலையத்தில் விஷ மருந்து குடித்து மயக்க நிலையில் கிடந்தார். தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை தமிழரசன் உயிரிழந்தார்

News March 12, 2025

மீன் பிடிக்க சென்ற வாலிபர் ஓடையில் மூழ்கி பலி

image

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகேயுள்ள கள்ளக் காளிங்கராயநல்லூரைச் சேர்ந்த முத்து (28) மற்றும் அவரது தாயார் ராகிணி இருவரும் நேற்று முன்தினம் மாலை அதே ஊரில் பச்சையம்மன் கோயில் அருகே உள்ள ஓடையில் மீன் பிடிக்க சென்றபோது, எதிர்பாராதவிதமாக முத்து தவறி விழுந்து ஓடை நீரில் மூழ்கி தன் தாய் கண்முன்னே இறந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த குன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News March 12, 2025

சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகா் பதவி விண்ணப்பிக்கலாம்

image

கடலூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் கீழ் இயங்கி வரும் சட்ட எதிா் பாதுகாப்பு முகமை அலுவலகத்தில் தலைமை சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகா் பதவிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பத்தை கடலூா் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தின் <>லிங்க் <<>>இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து வரும் 28-ஆம் தேதி மாலை 5 மணிக்குள், கடலூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமோ அனுப்பலாம்.

News March 12, 2025

கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில் தேரோட்டம்

image

‘தென் திருப்பதி’ என அழைக்கப்படும் தாந்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சாமி மாசி மகத்தேர் மற்றும் தெப்ப திருவிழா கடந்த 2ந்தேதி தொடங்கி வருகிற 21-ந்தேதி வரை நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (புதன்கிழமை) நடக்கிறது. இதற்காக கோயிலின் முன்பு தேர் அலங்காரம் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது. இதனையடுத்து வருகிற 14-ந்தேதி தெப்ப தேர் திருவிழா நடக்கிறது. இதை ஷேர் செய்யுங்கள்.

News March 12, 2025

தனியார் பஸ் மோதி இருவர் பலி

image

மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர்கள் பாபி காஜ்டி, 30, டபாஸ், 24. இருவரும் செம்பரம்பாக்கம் கிராமத்தில் தங்கி, கட்டட வேலை செய்து வந்தனர்.இருவரும் நேற்று முன்தினம் இரவு செம்பரம்பாக்கம் பகுதியில் சாலையை கடக்க முயன்றனர். அப்போது, அவ்வழியே சென்ற தனியார் தொழிற்சாலை பஸ் அவர்கள் மீது மோதியது. இதில் அடிபட்டு, இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். இதையடுத்து பேருந்து ஓட்டுநர் சங்கரை ஆவடி போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!