Tamilnadu

News March 12, 2025

சிலிண்டர் வெடித்து 3 பேர் உயிரிழப்பு

image

கோவிலம்பாக்கம், காந்திநகர் 15ஆவது தெருவில் வசித்து வந்த முனுசாமி (75) என்பவரது வீட்டில் கடந்த 5ஆம் தேதி கேஸ் கசிவு ஏற்பட்டது. மறுநாள் காலையில் வீட்டார் சுவிட்சை போட்டவுடன் சிலிண்டர் வெடித்து சிதறியது. இதில், 5 பேரும் உடல்கருகி கவலைக்கிடமான நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். சாந்தி (45), அஜித்குமார் (27), முனுசாமி (75) ஆகிய மூவரும் சிகிச்சை பலனின்றி நேற்று (மார்.11) உயிரிழந்தனர்.

News March 12, 2025

டிராக்டர் கவிழ்ந்து விபத்து: உயிர்ச்சேதம் இல்லை

image

வாலாஜாபாத்தில் இருந்து இரும்பு கம்பிகளை ஏற்றிக்கொண்டு சென்ற டிராக்டர், கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. நேற்று (மார்.11) வண்டலுார் – வாலாஜாபாத் நெடுஞ்சாலையில் உள்ள ஒரகடம் மேம்பாலத்தை கடந்தபோது அதிக பாரம் ஏற்றி வந்ததால் கட்டுபாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் இருந்த இரும்பு கம்பிகள் சாலை நடுவே விழுந்தது. அஷிர்ஷ்டவசமாக உயிர்சேதம் ஏற்படவில்லை.

News March 12, 2025

மதுரை பெண்களுக்கு முக்கிய அறிவிப்பு

image

மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகம் சார்பாக பெண்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அதில்,அச்சம் எதற்கு உங்கள் அழைப்பின் அவசியமும், அவசரமும் நாங்கள் அறிவோம், பெண்கள் ஏதேனும் பாதுகாப்பு தொடர்பான அச்சுறுத்தல்களை உணர்ந்தால் உடனே அழையுங்கள் காவல் உதவி எண் 100 மற்றும் பெண்கள் உதவி எண் 181 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. *ஷேர்

News March 12, 2025

தூத்துக்குடியில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு

image

தூத்துக்குடி, குமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் இன்றும்(மார்ச் 12) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று பல்வேறு பகுதிகளிலும் கனமழை கொட்டித் தீர்த்தது குறிப்பிடத்தக்கது.SHARE IT.

News March 12, 2025

குமரி மாவட்டத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு

image

தூத்துக்குடி, குமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் இன்றும்(மார்ச் 12) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. நேற்றும் இம்மாவட்டங்களில் மழை பெய்தது குறிப்பிடத்தக்கது. SHARE IT.

News March 12, 2025

நாகையில் தனியார் வேலை வாய்ப்பு முகாம்

image

நாகை மாவட்ட நிர்வாகம் சார்பில் மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நாகை ADM மகளிர் கல்லூரியில் வருகின்ற 15ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடக்கிறது. இந்த முகாமில் 100க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்களை தேர்வு செய்யப்பட உள்ளனர் என ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

News March 12, 2025

தஞ்சைக்கு இன்று உள்ளூர் விடுமுறை

image

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் மாசிமக திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று (மா.12) மாசி மக தீர்த்தவாரியை முன்னிட்டு, தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்தார். விடுமுறையை ஈடு செய்யும் வகையில் மார்ச் 15ஆம் தேதி (சனிக்கிழமை) வேலை நாளாக செயல்படும் என அறிவித்துள்ளார். SHARE பண்ணுங்க..

News March 12, 2025

பாஜக பெண் நிர்வாகி கைது

image

விழுப்புரம் மாவட்டம் இருவேல்பட்டு கிராமத்தில் பெஞ்சல் புயலின் போது கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெள்ள சேதத்தை பார்வையிட வந்த தமிழக வனத்துறை அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் மீது சேறு சகதியை வீசிய வழக்கில் தலைமுறைவாக இருந்து வந்த விழுப்புரம் தெற்கு மாவட்ட பாஜக மகளிர் அணி முன்னாள் துணைத் தலைவி விஜய ராணியை இன்று திருவெண்ணைநல்லூர் போலீசார் கைது செய்தனர்.

News March 12, 2025

ரியல் எஸ்டேட் அதிபர் கொலை? போலீசார் விசாரணை

image

அரியமங்கலம் பெரியார் தெரு அம்மா குளம் பகுதியை சேர்ந்தவர் பொன்ராஜ்(50). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளார். இவர் காட்டூர் கைலாஷ் நகர் பகுதியில் காயத்துடன் கிடந்துள்ளார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சையில் இருந்தவர் நேற்று உயிரிழந்துள்ளார். இது குறித்து திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிந்து கொலையா? விபத்தா? என விசாரணை செய்து வருகின்றனர்

News March 12, 2025

தர்மபுரியில் அரசு போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி

image

தர்மபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தின் தன்னார்வப் பயிலும் வட்டம் மூலம் தமிழ்நாடு அரசின் அனைத்து போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த மையத்தின் மூன்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேர்வு தொடர்பான புத்தகங்கள் இணைய வசதி கொண்டு நூலகம் மற்றும் 20க்கும் மேற்பட்ட கணினிகள் செயல்பட்டு வருகின்றன. பயிற்சி முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகின்றது.

error: Content is protected !!