Tamilnadu

News March 11, 2025

புளியங்குடியில் பாஜக பொதுக்கூட்டம் – முழு விவரம்

image

தென்காசி மாவட்டம் புளியங்குடியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் ‘தீய சக்தியை வேறொருப்போம்’ தலைப்பில் மாவட்ட தலைவர் ஆனந்தன் தலைமையில் நாளை(மார்ச் 12) பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்த பொதுக்கூட்ட நிகழ்வில் மாநில தலைவர் அண்ணாமலை சிறப்புரையாற்றுகிறார். நயினார் நாகேந்திரன், பொன் பால கணபதி உட்பட பாஜக நிர்வாகிகள் பலர் இக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.

News March 11, 2025

ஈரோட்டில் மாபெரும் வேலைவய்ப்பு முகாம்

image

ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில், ரங்கம்பாளையம், ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மார்ச் 15 மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. மேலும் தகவலுக்கு www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளம் மற்றும் 86754 12356, 94990 55942 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். மேலும் இதில் பங்குபெற படத்தில் உள்ள QR – யை ஸ்கேன் செய்து கட்டாய முன்பதிவு செய்ய வேண்டும்.

News March 11, 2025

குமரி அணைகளின் இன்றைய நீர்மட்ட விபரம்

image

குமரி மாவட்டத்தில் 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையில் 28.13 அடி தண்ணீரும், 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையில் 25.60 அடி தண்ணீரும், 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றாறு-1 அணையில் 2.72 அடி தண்ணீரும், 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றாறு-2 அணையில் 2.82 அடி தண்ணீரும் இன்று உள்ளது. பேச்சிப்பாறை அணைக்கு 114 கன அடி தண்ணீரும், பெருஞ்சாணி அணைக்கு 21 கன அடி தண்ணீரும் வந்து கொண்டிருக்கிறது.

News March 11, 2025

இராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் அளவு

image

இராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று (மார்ச்.10) காலை 6 மணிமுதல் இன்று காலை 6 மணிவரை பெய்த மழையின் அளவு இராம்நாடு 23 மில்லி மீட்டர், மண்டபம் 12.80 மில்லி மீட்டர், இராமேஸ்வரம் 16 மில்லி மீட்டர், பாம்பன் 12 மில்லி மீட்டர், தங்கச்சிமடம் 18 மில்லி மீட்டர், பல்லமோர்குளம் 4 மில்லி மீட்டர், திருவாடானை 5.60 மில்லி மீட்டர், தொண்டி 1.80 மில்லி மீட்டர், வட்டாணம் 2.20 மில்லி மீட்டர், மழை பதிவாகியுள்ளது.

News March 11, 2025

பள்ளி மாணவர் மீது தாக்குதல் – தூத்துக்குடி காவல் துறை அறிக்கை

image

ஸ்ரீவை., அருகே 11ஆம் வகுப்பு மாணவன் கெட்டியம்மாள்புரம் பேருந்து நிறுத்தம் அருகில் மர்ம நபர்களால் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், மாணவரை தாக்கிய லெட்சுமணன் என்பவனையும், 2 இளஞ்சிறார்களையும் சட்டப்படி விசாரணைக்கு உட்படுத்தியாகவும், பாதிக்கப்பட்ட மாணவர் மேல் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 11, 2025

திருப்பூரில் தபால் குறைதீர் கூட்டம் அறிவிப்பு

image

திருப்பூர் தலைமை தபால் நிலையம் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வரும் 24ம் தேதி மாலை 4 மணிக்கு தபால் துறை வழங்கும் சேவைகளை பற்றி விவாதிக்க, குறைகள் இருந்தால் தெரிவிக்க, தபால் குறைகேட்பு கூட்டம் நடக்கிறது. தபால்துறை சார்ந்த யோசனை, புகார்கள் இருப்பின் வரும் 14ம் தேதிக்குள், ‘பட்டாபிராமன், தபால் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகம், திருப்பூர் 641601’ என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

News March 11, 2025

ஈரோடு-சாம்பல்பூர் எக்ஸ்பிரஸ் ஏப்ரல் மாதம் வரை நீட்டிப்பு

image

சேலம் வழியே இயக்கப்படும் ஈரோடு-சாம்பல்பூர் வாராந்திர சிறப்பு ரயில், ஏப்ரல் மாதம் வரை நீட்டிக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதன்படி, சாம்பல்பூர்-ஈரோடு வாராந்திர சிறப்பு ரயில் (08311), நாளை 12-ம் தேதி முதல் ஏப்ரல் 30-ம் தேதி வரை புதன்கிழமை தோறும் இயக்கப்படுகிறது. சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News March 11, 2025

நாமக்கல்லில் நாளை முதல் சிறப்பு ரயில்

image

நாமக்கலில் இருந்து நாளை முதல் வரும் திங்கள் வரையிலான நாட்களில் காலை 8:30 மணிக்கு கிருஷ்ணராஜபுரம், பெங்களூரூ செல்ல 20671 மதுரை – பெங்களூரூ வந்தே பாரத் ரயிலிலும், மாலை 5:25 மணிக்கு நாமக்கலில் இருந்து திருச்சி, திண்டுக்கல், மதுரை செல்ல 20672 பெங்களூரூ – மதுரை வந்தேபாரத் ரயிலிலும் டிக்கெட் இருப்பு விவரம் கொடுக்கப்பட்டுள்ளது. முன்கூட்டியே திட்டமிட்டு விரைவாக முன்பதிவு செய்து பயன்படுத்தலாம்.

News March 11, 2025

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

image

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் சர்வதேச நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்றவற்றின் அடிப்படையில், பெட்ரோல் டீசல் விலை நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில், சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றுத்துடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, இன்று (மார்ச் 11) லிட்டர் பெட்ரோல் ரூ.100.80க்கும், விட்டர் டீசல் ரூ.92.39 க்கும் விற்பனை.

News March 11, 2025

புதுச்சேரி கூட்டத்தொடரில் திமுக மற்றும் காங் வெளிநடப்பு

image

புதுச்சேரி சட்டப்பேரவை 15வது சட்டப்பேரவை 6வது கூட்டத்தொடர் இன்று நடைபெற்றது. இதில் துணைநிலை ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் பிரேரணை மீது விவாதம் நடைபெற்றது. மேலும் ஃபெஞ்சல் புயலின் போது முழுமையாக வீடுகளை இழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்காததை கண்டித்து எதிர்கட்சித் தலைவர் சிவா தலைமையில் திமுக மற்றும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

error: Content is protected !!