India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கிருஷ்ணகிரி மாவட்டம் உரிகம் , கோட்டையூர் மற்றும் தக்கட்டி சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் பரவலாக புளி சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். தனித்துவமான உரிகம் புளி வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாட்டுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.தற்போது விவசாயிகள் புளி அறுவடை செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
காரைக்குடியை சேர்ந்தவர் சுப்பு. இவர் அயர்லாந்து நாட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் கம்பெனியில் போர்ச்சுகல் நாட்டை சேர்ந்த மரிசா லாப்ஸ் பணியாற்றினர் பின் யோகா நிகழ்ச்சியில் சந்தித்த இவர்களுக்குள் காதல் மலர்ந்துள்ளது. இவர்களின் திருமணத்திற்கு பெற்றோர்களும் சம்மதிக்க சுப்புவின் சொந்த ஊரான காரைக்குடியில் தமிழர் கலாச்சாரப்படி திருமணம் நேற்று நடைபெற்றது.
ஈசலாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஜான் (19). இவர் நேற்று இரவு பைக்கில் எஸ்.ஆர் கண்டிகை என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தார். அந்த வழியாக வந்த லாரி பைக் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே ஜான் உயிரிழந்தார். அவரது உடலை அரக்கோணம் தாலுகா போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில், நேற்று முன்தினம் நள்ளிரவில், சென்னையில் இருந்து, காஞ்சிபுரம் வழியாக, நாகப்பட்டினத்திற்கு புறப்பட்டுச் சென்ற விரைவு பேருந்து ஒன்று, காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தை வந்தடைந்தது. அப்போது, திண்டிவனம் செல்லும் முதியவர் ஒருவர், இப்பேருந்தில் ஏற முயன்றபோது, பேருந்து அங்கு நிற்காது எனக் கூறி இடித்து தள்ளி உள்ளார்.இச்சம்பவத்தால் அங்குள்ளவர்கள் நடத்துநரை தட்டிக் கேட்டனர்.
திருநெல்வேலி கூட்டுறவு சங்கங்களின் மாவட்ட துணை பதிவாளர் கௌதம் கார்த்திக் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில், ரேஷன் கடைகளில் கீழே கொட்டப்பட்டுள்ள ரேஷன் அரிசிகளை கோழிக்கு கொண்டு சென்றாலும் குற்றம்தான் .எனவே ரேஷன் கடை ஊழியர்கள் இதில் கவனமாக செயல்பட்டு, பொதுமக்களுக்கு சேர வேண்டிய பொருட்களை முறையாக வழங்க வேண்டும். மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
தாம்பரம் அருகே மணிமங்கலம் பகுதியில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர்கள் பாலகுமாரன் – வித்தியா தம்பதியர். நேற்று மாலை வித்தியா துணிகளை துவைத்து காய வைப்பதற்காக அடுக்குமாடி குடியிருப்பின் நான்காவது மாடிக்கு சென்றுள்ளார். அப்போது அவருடன் இருந்த அவரின் இரண்டு வயது பெண் குழந்தை ஆருத்ரா தவறி கீழே விழுந்து உயிரிழந்தது. மணிமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குமரி மாவட்டத்தில் இன்று(மார்ச் 11) மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு உயிர் சேதம், பொருள் சேதம் ஏற்படாத வண்ணம், மின் சாதனங்களை கவனமுடன் கையாளவும், மேலும் மழை நேரங்களில் மரங்கள், மின் கம்பங்கள், நீர்நிலைகள் அருகில் செல்ல வேண்டாம் எனவும், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.* நண்பர்களை உஷார் படுத்தவும்*
நீலகிரி,ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக்குகளை நீக்கி, சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுப் பொருள்களைப் பயன்படுத்தும் பள்ளிகள், கல்லூரிகள் வணிக நிறுவனங்களுக்கு இந்த பரிசு வழங்கப்படவுள்ளது. இதில் முதல் பரிசாக ரூ.10 லட்சம், 2வது பரிசாக ரூ.5 லட்சம், 3வது பரிசாக ரூ.3 லட்சம் வழங்கப்படும்.விண்ணப்ப படிவங்களை https://nilgiris.nic.in/ta/ தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.இதை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.
தமிழக அரசு மீனவர்களுக்கான நிவாரணத்தை உயர்த்தியது. இச்செயல் எல்லை தாண்டி மீன்பிடிப்பதை தமிழக அரசு ஊக்கப்படுத்தும் விதமாக உள்ளது எனக் கூறி, அபராதத் தொகையை உயர்த்துமாறு இலங்கை மீனவர்கள் போராட்டம் செய்தனர். இதன் எதிரொலியாக இதுவரை ரூ.50 ஆயிரம் மட்டுமே விதிக்கப்பட்டு வந்த அபராதம், மார்ச்.7ல் ராமேஸ்வரம் மீனவர்களுக்கு தலா ரூ. 2.50 லட்சம் அபராதம் விதித்து மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டது. *ஷேர் பண்ணுங்க
தென்காசி மாவட்டத்திற்கு இன்று(11.3.25) மிக கன மழைக்கான ஆரஞ்சு அலெர்ட் கொடுக்கப்படுள்ளது. ஆதலால் நீர் நிலைகள், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், ஆட்சியர் அலுவலகம் சார்பில் பேரிடர் கால உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. *1077 & 04633-290548* இவற்றில் தொடர்பு கொண்டு மழை தொடர்பான புகார், உதவிக்கு தெரிவிக்கலாம். உடனே பகிரவும்.
Sorry, no posts matched your criteria.